இடுகைகள்

ஹோலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்கள் மீதான அத்துமீறலுக்கு உதவுகிறதா ஹோலி பண்டிகை?

படம்
            ஹோலி கொண்டாட்டம் வேண்டாம் ! - அலறும் பெண்கள் ஹோலி கொண்டாடுவது சந்தோஷமான அனுபவம்தான் . ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் நடைபெறும் வண்ணப்பொடி திருவிழா , தீராத ஏக்கங்களை தீர்த்துக்கொள்ளும் விழாவாக மாறியுள்ளது . இதில் இப்போது கலந்துகொள்ளும் பெண்கள் விலகத் தொடங்கியுள்ளனர் . ஏன் அதில் என்ன பிரச்னை என்கிறீர்களா ? விந்தணுக்களை நிரம்பிய பலூன்களை பெண்கள் மீது வீசுவது , வசதியாக கிடைத்த வாய்ப்பு சிறு பெண்களை அந்தரங்க இடங்களில் தடவுவது , தொடுவது என எல்லை மீறும் அனுபவங்கள் நடந்து வருகின்றன . பொதுவாக இதனைப பற்றி ட்விட்டரில் பதிவு செய்பவர்களை இந்து எதிரிகள் என தேச பக்தர்கள் முத்திரை குத்தினாலும் இந்த சம்பவங்களை பற்றி மூச்சு கூட விட மாட்டார்கள் . இதில் பாதிக்கப்படும் பெண்களின் தவறு என்ன இருக்கிறது ? அவர்கள் எதற்கு வெட்கப்படவேண்டும் ? டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் ஹோலி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே ஊருக்கு செல்லத் தொடங்கிவிடுவார்கள் . எதற்காக என்கிறீர்களா ? ஹோலி விழா அன்று பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருப்பதால்தான் .

இந்தியாவின் கலாசார பன்மைத்துவத்தை புரிந்துகொள்ள எனக்கு 50 ஆண்டுகள் தேவை! - வால்டர் ஜோ லிண்ட்னர், ஜெர்மன் தூதர்

படம்
                வால்டர் ஜோகன்னஸ்  லிண்ட்னர் போனிடெய்ல் குடுமி வைத்துள்ள ஜெர்மன் நாட்டு தூதர் வால்டர். இவர் தூதரக பணிகளைத் தாண்டி இசைத்திறமைக்காகவும் மெச்சப்படுகிறார். ஹிப்பி இசைக்கலைஞராக இருந்து தூதராக மாறிய வால்டர், பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியாவுடன் கிடார் வாசித்த அனுபவம் கொண்டவர். நீங்கள் அண்மையில் உருவாக்கிய விண்ட் ஆப் சேஞ்ச் பாடலை இந்திய முறையில் உருவாக்கி இருந்தீர்கள். அதில் என்ன சவால்களை சந்தித்தீர்கள்? அசல் பாடலின் கவர் வெர்ஷனை உருவாக்குவது இப்போதைய டிரெண்டாகி வருகிறது. விண்ட் ஆப் சேஞ்ச் பாடல், சுதந்திரம், தாராள உலகை வலியுறுத்துகிற ஒன்று. பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு பிறகு அந்த பாடல் உருவாக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு நாடுகளுக்கு இடையிலான பாலங்களை அப்பாடல் குறிக்கிறது. இந்த பாடல் வீடியோவை உலக மக்கள் பலரும் பார்த்திருப்பார்கள்.  கோவிட் -19 சமயம் இதனை பலரும் பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும். பெர்லின் சுவர் போலவே நாமும் இந்த பெருந்தொற்று பிரச்னையை நாம் தாண்டி வரமுடியும். நிறைய மனிதர்கள் ஒரு விஷயத்தில் கவனம் கொள்வதே கடினம். நீங்கள் எப்படி அதிகாரி, இசைக்கலைஞ