நேர்காணல்களின் சிறப்பு, குறிப்பிட்ட ஒருவரிடம் பேசும்போது அவர் அந்தந்த சூழல்களின் என்ன நினைக்கிறாரோ அதை பேசவைத்து பதில்களை வாங்க வேண்டும் என்ற சவால் உள்ளது. இதன் காரணமாக கேள்விகளை சுருக்கி பதில்களை நிறைய பெறவேண்டும் என்பதே நேர்காணல்களின் அடிப்படை. இந்த நூல்களில் உள்ள 32 நேர்காணல்கள் இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள், மாத, வார இதழ்களில் வெளியானவை. இந்த நேர்காணல்கள் அனைத்தும் கோமாளிமேடை வலைத்தளத்தில் வெளியானவை. வெளியானவற்றில் குறிப்பிட்ட நேர்காணல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை செம்மை செய்து மொழிபெயர்ப்பு நேர்காணல் நூலாக தொகுத்திருக்கிறோம். இந்த நூல் கொரோனா காலத்தில் இந்தியாவில் , உலகில் பல்வேறு துறைகளில் நடைபெற்ற மாற்றங்களை பதிவு செய்கின்றன. புனைவுகள் மட்டுமே காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று என்னிடம் பேசிய சிறுகதை எழுத்தாளர் ஒருவர் ஏளனமாக சொன்னார். எது நிலைத்து நிற்கப் போகிறது என்பதை காலம் முடிவு செய்யும். நாம் செய்யவேண்டிய எழுத்துக்கு உண்மையாக அதனை எழுதுவதும், அதனை முறையான வழியில் பிறருக்கு பகிர்வதுமே ஆகும். இந்த நூலில் முக்கியமான நேர்காணல்களாக கருதுவது அண்மையில் ப...