இடுகைகள்

அருஞ்சொற்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்! - வரைபடம், மின்காந்தப்புலம், பூமியின் காந்தப்புல ஆய்வு, வேளாண்மை ஆய்வு

படம்
அருஞ்சொற்கள்!  ஏரோலாஜிகல் டயகிராம் (Aerological Diagram) பாறைகளின் தன்மையை அறிய உதவும் வரைபடம். இதில் வெப்பநிலை, அழுத்தம். ஈரப்பதம் ஆகிய தகவல்களை அறியலாம்.  ஏரோமேக்னடிக் சர்வே (Aeromagnetic Survey) பூமியின் மின்காந்தப்புலம் பற்றிய ஆய்வு. விமானங்களில் இணைக்கப்பட்ட மேக்னட்டோமீட்டர் (Magnetometer) மூலம் ஆய்வு நடைபெறுகிறது.  ஏயோலியானைட் (Aeolianite) காற்றால் அடித்துக்கொண்டு வரப்படும் மணல் துகள்களால் உருவாகும் பாறைகள் .  ஏஎஃப்எம்ஏஜி இஎம் அமைப்பு (AFMAG EM) இயற்கை நிகழ்வான புயல், மழையின் பிறகு பூமியின் இயற்கையான மின்காந்தப் புலத்தில் ஏற்பட்ட மாறுதல்களை அளவிடும் முறை.  அக்ரோமெட்ராலஜி (Agrometeorology) வேளாண்மைக்கு ஏற்ற தன்மையில் வானிலை மற்றும் நிலத்தின் அடுக்குகள் உள்ளதா என ஆராயும் முறை. 

தெரியுமா? புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்!

படம்
  தெரியுமா? ஆக்சலரோகிராஃப் (Accelerograph) நிலநடுக்கத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி. இதிலுள்ள மூன்று ஆக்சலரோமீட்டர் தலைப்பகுதி, நிலநடுக்கத்தை அளவிடுகிறது. இதனை இணையத்தில் நேரடியாகவும் இணைத்து பயன்படுத்தலாம்.  ஆக்சலரோமீட்டர் இக்கருவியை ஹெலிகாப்டர், கப்பல், விமானம் ஆகியவற்றில் ஈர்ப்புவிசை சார்ந்த ஆய்வுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். சீஸ்மோமீட்டரையும் ஆக்சலரோமீட்டராக பயன்படுத்தலாம்.   ஆசிட் ராக்  பாறையில் 60 சதவீத அளவுக்கு சிலிகா  இருந்தால் அல்லது சிலிகா கனிமங்களாக இருந்தால் அதற்கு ஆசிட் ராக் என்று பெயர். இதில் பத்து சதவீதம் அளவுக்கு குவார்ட்ஸ் இருக்கும்.