இடுகைகள்

அமித்ஷா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோடி அரசு 2.0 - நிர்மலா சீதாராமன், அமித் ஷா செய்ததும், காத்திருக்கும் சவால்களும்!

படம்
  பாஜக அரசின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி! மோடி 2.0 நிதித்துறையில் செய்தது என்ன? 2019ஆம் ஆண்டு நிதித்துறை அமைச்சராக நிர்மலா பதவியேற்றார். அப்போது பொருளாதாரம், சற்று தேக்கத்தில் இருந்தது. உள்நாட்டு தேவை மற்றும் தனியார் முதலீடு ஆகியவற்றில் சுணக்கம் காணப்பட்டது. எந்த நிதியமைச்சரும் சந்திக்காத சவால்களை நிர்மலா எதிர்கொண்டிருக்கிறார். முக்கியமாக கோவிட் 19. 2020ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று லாக்டௌன் அமலுக்கு வந்தது. இதனால் இரண்டு காலாண்டுகளாக எதிர்மறை ஜிடிபி வளர்ச்சி காணப்பட்டது.  உலக நாடுகள் அனைத்தும் பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கின. இதை நிர்மலா சற்று மாற்றியோசித்து செயல்படுத்தினார். பலவீனமாக உள்ள பிரிவினருக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார். சிறுகுறு தொழில்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை ஒதுக்கீடு செய்தார்.  இப்போது அவர் செய்த செயல்பாடு, திட்டங்களைப் பார்ப்போம். சுருக்கமாகத்தான்.  செய்தது! மே 2020ஆம் ஆண்டு 20 லட்சரூபாய் மானிய உதவிகளை வழங்கியது இந்திய  அரசு சிறு குறு தொழில்களுக்கான அவசரநிலை கடன் திட்டம் நடைமுறைக்கு வந்தது.  2019-20, 2024-25 காலகட்ட...

மம்தாவை எங்கள் கட்சியினர் கொச்சைபடுத்தி பேசவில்லை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

படம்
          அமித்ஷா உள்துறை அமைச்சர் விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்களை மத்திய அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே ? சீக்கியர்களுக்கு என்று தனிச்சட்டம் கிடையாது . நாடு முழுக்க உள்ள விவசாயிகளுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாதா என்ன ? அவர்கள் வெவ்வேறு பெயர்களில் போராட்டங்களை நடத்தட்டும் . உண்மை என்னவென்றால் , நாட்டின் சட்டம் இப்படித்தான் உள்ளது . இது அந்த மாநிலத்தில் கட்சியை பாதிக்காதா ? அங்கு கட்சிக்கு சில சவால்கள் உள்ளன என்பது உண்மைதான் . அதை சரி செய்ய நாங்கள் உழைத்து வருகிறோம் . விவசாய சட்டங்கள் மக்களுக்கு உதவக்கூடியவை என்று கூறுவதற்கு முயன்று வருகிறோம் .. விரைவில் மக்களே அதனை உணர்ந்துகொள்வார்கள் . விவசாயிகளுக்கு ஆதரவாக ஷிரோன்மணி அகாலிதளம் உங்கள் கூட்டணியை விட்டு பிரிந்துபோய்விட்டது . அவர்களுடன் பேசினீர்களா ? நாங்கள் அக்கட்சி தலைவர் பர்காஷ் சிங் பாதலுடன் பேசினோம் . ஆனாலும் அவர் கூட்டணியை விட்டு விலகிவிட்டார் . என்ன செய்வது ? நாங்கள் அ...

குடியுரிமை சட்டத்தை விரிவு செய்யும் முதல் மாநிலம் நாங்கள்தான்!

படம்
நேர்காணல் உத்தரப்பிரதேச சிறுகுறுதொழில்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் அரசின் சிஏஏ சட்ட திருத்தத்தை அமல் செய்யவுள்ளது. சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?  இச்சட்டம் இங்கு அடிப்படை அளவில் அமலாக உள்ளது. பின்னர் முழுமையாக பின்பற்றப்படும். மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதிகள் தேவை. நாம் காற்றில் சட்டத்ததை அமல் செய்ய முடியாது. மாவட்ட நீதிபதிகள், மாவட்டங்களிலுள்ள சட்டப்பூர்வமற்ற முறையில் தங்கியுள்ள அகதிகளை அடையாளம்  காணச்சொல்லி இருக்கிறார்களே? அப்படி எந்த அரசு ஆணையும் எங்களுக்கு வரவில்லையே. இதுபோன்ற ஏராளமான பொய் தகவல்களை மக்களுக்கு சிலர் அனுப்புகிறார்கள். இதனை தீர்க்கும் கடமை எங்களுக்கு உள்ளது. குடியுரிமை திட்ட சட்டத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளீர்களா? அதனை மத்திய அரசுதான் எங்களுக்கு கூற வேண்டும். நாட்டிலேயே  பெரிய மாநிலமாக எங்கள் மாநிலம் இச்சட்டத்தை பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது. உங்கள் மாநில மக்களுக்கு இச்சட்டம் பற்றி சரியானபடி விளக்கிவிட்டீர்களா? நாம் மக்களிடம் ஒவ்வொரு முறையும் ஆதரவு மனநில...

இந்துஸ்தான் உதயமாகிறதா? - குடியுரிமை மசோதாவின் விளைவுகள்!

படம்
குடியுரிமைச் சட்ட மசோதா அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 14யை புறக்கணிக்கும் மசோதா விரைவில் குடியரசுத்தலைவரின் கையெழுத்தைப்பெற்று சட்டமாகவிருக்கிறது. இதன்மூலம், இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இம்மசோதாவின் அமலாக்கத்திலேயே அவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது. டிச.11 அன்று மக்களவையில் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பாஜக எம்பிகள் அதிமுக எம்பிகள் ஆதரவளிக்க மசோதா தாக்கலானது. இதன்மூலம் 2014 டிச.31க்குள் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள், முஸ்லீம்கள் நீங்கலாக பிற மதத்தவர்கள் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். நூற்றாண்டு கால இந்தியப் பெருமையை மீட்டு எடுத்துவிட்டோம் என பிரதமர் மோடி, டுவிட்டரில் நெகிழும் போது அசாமில் மூன்றுபேர் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருக்கிறார்கள். உள்நாட்டுப்போரை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும் முன்னதாகவே ஆர்எஸ்எஸ் தொடங்கிவிட்டது. இனி அவர்களுக்கு வேலையே இல்லை. இதுபற்றி சமூக நல ஆர்வலர் ஹர்ஷ்மந்தர், நான் பிறப்பால் முஸ்லீம்,. இச்சட்டத்தை அரசு கொண்டுவந்தால் நான் எனக்கான ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்யப்ப...