குடியுரிமை சட்டத்தை விரிவு செய்யும் முதல் மாநிலம் நாங்கள்தான்!
நேர்காணல்
நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் அரசின் சிஏஏ சட்ட திருத்தத்தை அமல் செய்யவுள்ளது. சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?
இச்சட்டம் இங்கு அடிப்படை அளவில் அமலாக உள்ளது. பின்னர் முழுமையாக பின்பற்றப்படும். மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதிகள் தேவை. நாம் காற்றில் சட்டத்ததை அமல் செய்ய முடியாது.
மாவட்ட நீதிபதிகள், மாவட்டங்களிலுள்ள சட்டப்பூர்வமற்ற முறையில் தங்கியுள்ள அகதிகளை அடையாளம் காணச்சொல்லி இருக்கிறார்களே?
அப்படி எந்த அரசு ஆணையும் எங்களுக்கு வரவில்லையே. இதுபோன்ற ஏராளமான பொய் தகவல்களை மக்களுக்கு சிலர் அனுப்புகிறார்கள். இதனை தீர்க்கும் கடமை எங்களுக்கு உள்ளது.
குடியுரிமை திட்ட சட்டத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளீர்களா?
அதனை மத்திய அரசுதான் எங்களுக்கு கூற வேண்டும். நாட்டிலேயே பெரிய மாநிலமாக எங்கள் மாநிலம் இச்சட்டத்தை பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது.
உங்கள் மாநில மக்களுக்கு இச்சட்டம் பற்றி சரியானபடி விளக்கிவிட்டீர்களா?
நாம் மக்களிடம் ஒவ்வொரு முறையும் ஆதரவு மனநிலையை எதிர்பார்க்க முடியாது. எங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளன. இவர்கள் எங்களுக்கு எதிராக தவறான தகவல்களைக் கூறி, மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடுகிறார்கள். இதன் காரணமாக மாநிலத்தில் கடுமையான வன்முறை ஏற்பட்டது. எதிர்கட்சிகள் மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்வது நல்லது.
நன்றி - தி வீக்