ஐரோப்பாவில் காமிக்ஸ் விழா! - களைகட்டும் காமிக்ஸ் புத்தக நிறுவனங்கள்!





தெற்கு ஐரோப்பாவில் காமிக்ஸ் திருவிழா தொடங்கியுள்ளது.அங்கு உள்ள இத்தாலி காமிக்ஸ் ஆலன் ஃபோர்டு, செர்பியாவிலுள்ள இதழ் ஸ்ட்ரிபோட்டேகா, யூகோஸ்லேவ் ஆஸ்ட்ரிக்ஸ் டிகன் ஆகிய பதிப்பகங்கள் காமிக்ஸ் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளன.


ஆலன் ஃபோர்டு என்ற காமிக்ஸ் 1969ஆம் ஆண்டு உருவானது. இதனை எழுத்தாளர் லூசினோ சாச்சி உருவாக்கினர். இவரின் புனைபெயர் மேக்ஸ் பங்கர். இவரின் எழுத்துக்கு உயிர் கொடுத்தவர் ஓவியர் ராபர்ட் ரவியாலோ. இருவரின் பங்களிப்பில் காமிக்ஸ் இதழ் மே 2019 அன்று நூற்றாண்டு இதழை கொண்டு வந்துவிட்டது. ஆலன் ஃபோர்டு என்பது துப்பறியும் கதையாகும். இந்த வரிசையில் 27 வது கதையில்தான் ஆலனுக்கு சரியான வில்லனாக சூப்பர்யூக் என்ற கதாபாத்திரம் அறிமுகமானது. ராபின்ஹூட் பற்றி உங்களுக்குத் தெரியும். அவருக்கு எதிராக இந்த கதாபாத்திரம் இருக்கும்.

இந்த காமிக்ஸ்கள் பிரான்ஸ், டென்மார்க், பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி விற்கப்பட்டன. உள்நாட்டிலும் சிறப்பான விற்பனையைக் கொண்டிருந்த காமிக்ஸ் இது.

யூகோஸ்லேவியால் உள்ள ஜேஸ்னிக் என்ற நாளிதழில் வெளியாகி புகழ்பெற்றது. இந்த தொடரை நேனாட் பிரிக்சி என்ற ஆசிரியர் மொழிபெயர்ப்பு செய்தார். பின்னர் இவரது பணியை இவரது மகன் தொடர்ந்தார். யூகோஸ்லேவியான் 70-80 காலகட்ட கலாசாரத்தை பிரதிபலித்த காமிக்ஸ், 50ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் பெல்கிரேட்டில் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் ஓவியர்கள் வரைந்த பேனல்கள் ரசிகர்களுக்காக அங்கு  வைக்கப்பட்டது. இவை பின்னாளில் செர்பியாவில் ஒளிபரப்பான நகைச்சுவை தொடர்களாக உருவாகின. திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஹலோ பிங் என்ற பெயரில் ஓவியர் மேக்ஸ் பங்கரின் நேர்காணல்கள், அவரைப் பற்றிய செய்திகளோடு நூல் ஒன்றை வெளியிட்டனர். இதில் எண்பது வயதான மேக்ஸ் பங்கரின் அவல நகைச்சுவை திறனை முக்கியமாக குறிப்பிட்டுள்ளனர்.

பிரெஞ்சு கிளாசிக் காமிக்ஸ் தொடரான ஆஸ்ட்ரிக்ஸ் இங்கு டிகான் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகிறது. இந்த காமிக்ஸ் பதிப்பு 50ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது.

ஸ்ட்ரிபொட்டேகா

செர்பியாவிலுள்ள நோவி சாட் என்ற நகரில் இயங்கி வரும் பழமையான காமிக்ஸ் நிறுவனம். 50ஆம் ஆண்டு விழாவை கொண்டாடியது. இந்த அட்டைப்படத்தில் தோர், கொனான், டார்சான் உள்ளிட்ட பல்வேறு நாயகர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.












பிரபலமான இடுகைகள்