சமூகத்தோடு இளைஞர்கள் உரையாடுகிறார்களா?
giphy |
தெரிஞ்சுக்கோ!
இன்று பேச்சு முழுக்க சமூக வலைத்தளங்கள் வழியாக நடந்தாலும், பேசுவது நாம்தானே. பேசுவது முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக உள்ளது. உரையாடலின் இடத்தை பெரும்பாலும் இன்று இமோஜி என்ற படங்கள் ஆக்கிரமித்துவிட்டன. குறைந்த உழைப்பில் அதிக விஷயங்களை இதன்மூலம் சொல்லிவிட முடிகிறது.
அதுபற்றிய டேட்டா இதோ....
பார்ட்டியில் கலந்துகொள்பவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் புதிதாக இருக்கிறார்கள் என்கிறார் பிரபல செஃப் அலிசன் ரோமன்.
நாம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 140 முதல் 180 வார்த்தைகளை பேசுகிறோம்.
அதேசமயம் அதேநேரத்தில் 400 வார்த்தைகளை கவனிக்கிறோம்.
இதுவரை உலகிலேயே அதிக நேரம் பேசியது இருவர்தான். சமூகம், அக்வாரியம், மூளையின் சக்தி பற்றி இருவரும் சேர்ந்து 54 மணிநேரம் 4 நிமிடங்கள் பேசியிருக்கின்றனர்.
இங்கிலாந்திலுள்ள கஃபேக்களில் குறைந்தது 900 புதிய நபர்கள் அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதை சாட்டி கஃபே திட்டம் மூலம் ஊக்குவிக்கிறார்கள்.
சமூகம் தொடர்பான நிகழ்வுகளில் அமெரிக்கர்களின் பங்கேற்கு மொபைல் அளவில்தான் உள்ளது. இம்முறையில் 89 சதவீதம் பேர் சமூகத்தோடு இணைந்துள்ளனர்.
நன்றி - க்வார்ட்ஸ்