இந்தியில் இப்போதுதான் ஸ்ட்ரீட் டான்ஸர் படம் ட்ரெய்லர் பார்த்து முடித்திருப்பீர்கள். இங்கு தேசி ராப், கானா என பாடல், இசையில் உயரே பறக்கிறோம். ஆனால் ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் நிலைமை இப்போதுதான் பரவாயில்லை. இங்கு நடனம், தெருநடனம், பாடல்களை அனைவரும் கேட்கும் நிலை இப்போது வந்திருக்கிறது. இப்போதுதான் சிம்கார்டுகளின் விலையே குறைந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி, தெரு நடனங்கள் அங்கு பிரபலமாகத் தொடங்கின.
இன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஹிப் ஹாப் நடனங்களை அங்கு ஆடி வருகின்றனர்.இதில் கிடைக்கும் புகழ் அங்குள்ள இளைஞர்களுக்கு பணத்தை விட முக்கியமாகப் படுகிறது. 2014இல் இருந்துதான் ஹிப் ஹாப் இசை வடிவம், நடனம் அங்கு பகிரப்பட்டு வருகிறது. இதன்காரணமாக யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து தளங்களிலும் இசை வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன.
மியான்மரின் யாங்கூனிலுள்ள நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சாலையில் அடிக்கடி தெரு நடனங்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். "தாய்லாந்துக்கு வேலைக்கு போன இடத்தில்தான் இந்த டான்சைப் பார்த்தேன். கிடைச்ச நேரத்தில் அதைக் கத்துக்கிட்டேன். இப்போ இங்கே வந்து பயிற்சி செய்யறேன். ஆடுறேன். இதில் காசு கிடைக்குமோ இல்லையோ பயிற்சி செஞ்சுக்கிட்டே இருக்கேன்" என்கிறார் ஸார் லின். இவரைப் போலவே ஃபால்கனும் இதன் மீதுள்ள ஆர்வத்தால் வந்தவர்தான். மியான்மர் பௌத்தம் மதம் சார்ந்தது. இங்கு இனவேறுபாடு இல்லையா என்று கேட்டால் இட்டிகே சிரிக்கிறார். அதெல்லாம் உண்டு. ஆனால் நடனத்தில் அவற்றை நான் பார்ப்பதில்லை. இதனை அனைத்து மக்களும் விரும்புகிறார்கள் என்கிறார்.
மேலே ஆடிக்கொண்டிருப்பவர் நாட்டின் முதல் பெண் நடன மங்கை. காரணம், இங்கு கண்டிப்பு அதிகம். “முதல் பெண் நான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நடனத்தை கற்று உள்ளூர் விஷயங்களைச் சேர்த்து ஆடிவருகிறேன்” என்கிறார்.
நன்றி - OZY