இணையவழித் தாக்குதலை எதிர்பார்க்கும் அமெரிக்கா!
giphy |
அமெரிக்கா டக்கென முடிவெடுத்து இரான் படைத்தளபதியை ட்ரோன் மூலம் தீர்த்துக்கட்டியது. ஆனால் அமெரிக்காவின் மூர்க்கத்தனத்தினால் பெட்ரோல், டீசல் விலைகள் இந்தியாவில் கூடியுள்ளது. தனது தாக்குதலை நியாயப்படுத்து இந்தியாவையும் க்வாசிம் தாக்க நினைத்தார் என்று பேசினார்.
நேரடியான தாக்குதலோடு தற்போது இணையம் சார்ந்த தாக்குதலையும் ஈரான் மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கார்னெகி அமைதி நிறுவனம், மூன்றாம் உலகப்போர் என்பது நேரடியாக நடைபெறாது. அது இணையம் மூலமாகவே நடைபெறும் என்று கூறியுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, மக்கள் ஈரானின் இணையத் தாக்குதல் விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
ராணுவம், அரசு சார்ந்த வலைத்தளங்கள் மிகச்சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் பராமரிக்கப்பட்டு வருபவை. ஆனால் சாதாரண மக்களின் வங்கிக்கணக்கு, இணைய சேவை, தனிப்பட்ட உள்ளூர் அரசு சேவைத் தளங்கள் முடக்கப்பட வாய்ப்புள்ளது. உலகம் முழுக்க உள்ள ஈரானியர்கள், சௌதியர்கள், அமெரிக்கர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கிறது எம்ஐடி நிறுவன செய்தி அறிக்கை.
இதில் ஈரானியர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. அமெரிக்கா முந்தைய காலங்களில் ஈரானின் அணு உலை சார்ந்த அமைப்புகளை இணையத் தாக்குதல் மூலம் சிதைத்தது. இதற்கு பதிலடியாக ஈரான் அரசு, அட்லாண்டா நகர் மீது இணையத் தாக்குதலை தொடுத்தது. க்வாசிம் சோலெய்மானி போன்ற தலைவர்களை அமெரிக்கா கொன்றதை ஈரான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. இணையவழியே அவர்கள் தாக்குதலை தொடுத்தால் அது உடனடியாக தெரியும். ஆனால் அவர்கள் அமைதியாக மட்டும் இருக்கமாட்டார்கள் என்பது உண்மை.
நன்றி- ஃப்யூச்சரிசம்