தாய்லாந்தில் பிளாஸ்டிக் தடை! - 2021இல் நாடு முழுக்க அமலாகிறது
giphy |
தாய்லாந்தில் இந்த புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் தடை அமலாகிறது. மேலும் இந்த தடை தற்போது சிறப்பங்காடிகளுக்கும், அடுத்த ஆண்டு பிற சிறு கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
தாய்லாந்திலுள்ள ஆமைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரிகள் பிளாஸ்டிக்கை தவறுதலாக உண்டு செரிக்க முடியாமல் இறந்து போயின. மேலும் கடலில் கூடும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அந்நாட்டு அரசு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் எறிவதில் உலகளவில் எங்கள் நாடு முன்னர் மூன்றாவது இடத்தில் இருந்தது. இன்று மக்களின் ஆதரவினால் ஐந்து மாதங்களில் நாங்கள் பத்தாவது இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பெருமையாக பேசுகிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் சில்பா ஆர்ச்சா.
பிளாஸ்டிக் தடை என்றால் என்ன நடக்கும்? அதேதான். நீங்கள் துணிப்பை கொண்டுபோய் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது கடைக்கார ர்கள் கொடுக்கும் பையை காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் தற்போது தாய்லாந்து நிலைமை. கடந்த ஆண்டில் 5,765 டன்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பயன்பாடு தற்போது பெருமளவு குறைந்துள்ளது.
இன்னும் கிராம பகுதிகளிலும் மார்க்கெட் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் அகலவில்லை. ஏறத்தாழ நாட்டின் பயன்பாட்டில் நாற்பது சதவீதம் இங்கு மட்டுமே உள்ளது. தாய்லாந்தில் தற்போது உள்ள தூக்கி எறியும் கலாசாரத்தை மாற்ற வேண்டிய நேரம் இது என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த பிச்மோல் ரக்ரோட்.
மாற்றம் விரைவில் ஏற்படுவது நமக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் நல்லது.
நன்றி - ஈகோவாட்ச்