காதல் மீட்டர் - திருமண உறவைக் காப்பாற்ற என்ன செய்வது?
காதல் மீட்டர் 4 பொதுவான திருமணங்களில் நிச்சயம் செய்வது முக்கியமான சடங்கு. இவரை இன்னாரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி செய்துகொள்வது. உறுதி செய்துகொண்டவரைத்தான் ஒருவர் திருமணம் செய்வார் என்று நிச்சயமில்லை. காலம் மாறிவிட்டது. கிராமங்களில் பெரும்பாலும் கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பாற்றாமல் விடுவதில்லை. ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை தொலைந்துவிட்டால் அவர் பேசுவதை யார் கேட்பார்கள்.? இந்த நிச்சய காலத்தில் இணையர்கள் உரையாடலாம். இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. போன் உயிரோடு இருந்தே ஆகவேண்டும். அதன் வழியாக பேசலாம். நிறைய விஷயங்களைப் பகிரலாம். பொதுவாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆட்கள் வெட்டி அரட்டைதானே அடிப்பார்கள். அதுவும் எதிர்கால உறவைப் பற்றி அறிவதற்கான வழிதான். ஜோதிடம், திருமண பொருத்தம் என்பதை பொதுவான பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக திருமணம் எனும்போது... ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என்னுடைய நேரத்தை நானே உருவாக்குவேன் என இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை மணந்துகொள்ளலாம். நிச்சயத்திலும் மோதிரத்தை போடுவதுண்டு. இது ஒரு ஒப்பந்தம் போல செயல்படுகிறதாக கொள்ளலாம். இன்...