இந்தியச் சமூகத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்கள் - கர்நாடக மாநிலம் முதலிடம்

 

 

 



குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு - கர்நாடகம் முதலிடம்

இப்படி தலைப்பு வைப்பது பெருமைக்குரியது அல்ல. ஆனால் குழந்தை திருமணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது ஆபத்தான திசையை நோக்கி சமூகம் பயணிப்பதைக் காட்டுகிறது. அண்மையில் என்சிபிசிஆர் என்ற குழந்தைகளின் உரிமைக்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 215 குழந்தைத் திருமணங்கள் கர்நாடகத்தில் நடந்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதற்கடுத்து அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரம், உபி, பீகார், ஜம்மு காஷ்மீர், டெல்லி ஆகிய மாநிலங்கள் வருகின்றன.

இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு கீழுள்ள 1.5 மில்லியன் சிறுமிகள் குழந்தை திருமணம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான இளையோர் பிரிவில் பதினாறு சதவீதம் பேர் குழந்தை திருமணத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குழந்தைகளுக்கு திருமணம் செய்விப்படுவது, சமூகத்தில் உள்ள பாலின பேதங்களை அடிப்படையாக கொண்டது. இந்த செயல்பாடு வழியாக அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன என அறுநூறு பக்க என்சிபிசிஆர் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் சிறுமிகள் திடீரென எந்த தகவலும் தராமல் பள்ளிக்கு வராமல் நின்றுவிட்டால், அவர்களுக்கு என்ன ஆனது என என்பிசிஆர் அமைப்பு தகவல் சேகரித்தது. பள்ளிக்கு சரிவர வராமல் இருப்பது, இடைநிற்றல், தகவலே இல்லாமல் நின்றுவிடுவது என புகார்கள் வரும் மாணவிகள் உள்ள பள்ளிகளை அடையாளமிட்டு தகவல்களை சேகரித்து ஆராய்ந்தனர். இந்த வகையில் 11, 49,023 சிறுமிகள் குழந்தை திருமணம் செய்விக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டனர். 6,16, 897 பள்ளிகள் கண்காணிக்கப்பட்டன. 2,80,289 கிராமங்களில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டன.

2006ஆம் ஆண்டு குழந்தை திருமணங்களை தடுக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், அதற்கு பெரிய பயனிருப்பதாக தெரியவில்லை. பெண்களை பெற்றவர்களை அவர்களை சுமையாக பாரமாக கருதுவதால் விரைவில் வரதட்சணை கொடுத்து அவர்களை திருமணம் செய்துகொடுத்துவிடுகிறார்கள். இதனால் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை எளிதில் கைமாற்றப்படுகிறது. ஆனால் இப்படி திருமணமான சிறுமிகள், முழுமையான உடல், மன வளர்ச்சியைப் பெற்றிருப்பதில்லை. இதனால், டீனேஜ் பருவத்தில் கர்ப்பிணியாகி குழந்தை பெற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

நாட்டை ஆள்பவர்களே, சட்டங்களுக்கு உட்பட்டு நடந்துகொள்வதில்லை எனும்போது மக்கள் மட்டும் அதை பின்பற்றி நடக்கவேண்டும் என நினைப்பது பேராசைதானே?

டிஎன்ஐஇ - கவிதா பஜேலி தத்

தீரன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்