அதிகாரச் செல்வாக்கு பெற்ற தொழிலதிபர்கள் - பெண்கள்

 

 

 


பிட்டாயா வோரபன்யாசாகுல்
அதிபர், இயக்குநர், குருங்தாய் கார்ட்
தாய்லாந்து
pittaya vorapanyasakul
krungthai card

தாய்லாந்து நாட்டில் நிதிச்சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் குருங்தாய். இந்த நிறுவனம் கடன் அட்டைகளை மக்களுக்கு வழங்கி அதன் வழியாக நிதிச்சேவைகளை செய்து வருகிறது. பிட்டாயா, கடந்த ஜனவரி மாதம், குருங்தாயின் அதிபர், இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னர், குருங்தாய் சொத்து நிர்வாக நிறுவனத்தின் கணக்கு தணிக்கை கமிட்டியின் தலைவர், உறுப்பினாக செயல்பட்டு வந்தார்.

ரோடா ஏ ஹூவாங்
அதிபர், இயக்குநர், ஃபில்இன்வெஸ்ட் டெவலப்மென்ட் நிறுவனம்
பிலிப்பைன்ஸ்
rhoda a huang
fillinvest development

2023ஆம் ஆண்டு நிறுவனத்தின் இயக்குநர், அதிபராக பொறுப்பேற்ற ரோடா, கோடியானுன் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. முதல் வெளிநபராக நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த உள்ளார். இதற்கு முன்னர், ஜேபி மோர்கன் சேஸ், கிரடிட்சூஸ் பிலிப்பைன்ஸ், பிபிஐ கேபிடல் முதலீட்டு வங்கி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஃபில் இன்வெஸ்ட் நிறுவனம், வங்கி, நிலம், மின்சாரத்துறையில் இயங்கி வருகிறது. ரோடா, சூரிய ஆற்றல், நீராற்றல், பல்வேறு உயிரியில் ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார். முப்பது சதவீத வருமானம் கூடியுள்ளது ரோடாவின் சிறந்த வழிகாட்டலுக்கு சான்று.

ஜோன் ரோட்ரிக்ஸ்
குழும நிதி அதிகாரி, ஆபின் வங்கி
மலேசியா
joanne rodrigues
affin bank

2020ஆம் ஆண்டு ஆபின் வங்கிக்கு மாறியவர், இதற்கு முன்னர் ஆம் வங்கி, சிஐஎம்பி ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

நுட்சாமை தனோம்பூன்சரோன்
நிறுவனர், தலைவர், கரபாவோ குழுமம்
தாய்லாந்து

nutchamai thanombooncharoen
carabao group

கரபாவோ என்பது தாய்லாந்து நாட்டில் சிறப்பாக விற்று வரும் ஆற்றல் குளிர்பானங்களில் ஒன்று. இந்த பானம், நாற்பது நாடுகளில் சிறப்பாக ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கம்போடியாவில் கரபோவா குளிர்பானத்தின் வெற்றி சதவீதம் அதிகம். குளிர்பானம் தயாரிப்புக்கு உண்டான பகுதிப்பொருட்கள் அதிகரித்தாலும் கூட விற்பனையில் சாதனை படைத்து எழுபத்து ஏழு சதவீத வருமானத்தை நடப்பு ஆண்டிலேயே பெற்றுள்ளது.

கரபாவோ டாங் என்பது குளிர்பானத்தின் பெயர். டாவான்டாங் ஜெர்மன் பிரியுவரி என்ற குளிர்பான உற்பத்தி நிறுவனத்தை நுட்சாமை திறம்பட நடத்தி வருகிறார். இதன் வணிக மதிப்பு 2.1 பில்லியன் டாலர்கள். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் விளம்பர நிறுவனம் காரபாவோ குழுமம்தான்.  

fortune asia

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்