உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா

 

 

 











 


உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா


இந்தியாவிற்குள் நுழைய எலன் மஸ்க் முயன்று வருகிறார். அவரின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை குறைந்த விலைக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதையும் கெடுக்க, குஜராத்தி தொழிலதிபர்கள் தேசபக்தி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். நான் முதலில் நானே முதலில் என பேராசை கொள்பவர்களை அரசும் ஆதரிப்பதால், இந்தியா முன்னேற்றமடைவது கடினம். ஆக்கப்பூர்வ செயற்கைக்கோள் வணிகத்தைப் பார்ப்போம்.

இன்று புவிவட்டப்பாதையில் பத்தாயிரம் செயற்கைக்கோள்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. வானில் செயற்கை நட்சத்திரங்கள் போல மாறிவருபவை செயற்கைக்கோள்கள் என்றால் நம்மில் பலரும் நம்பமாட்டார்கள். உலகம் முழுக்க நடைபெறும் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைப் பற்றிய தகவல்களை சிஹெச்ஜிசாட் கண்டுபிடித்து வருகிறது. இந்த நிறுவனம், மான்ட்ரியலில் இயங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டு, செயற்கைக்கோள் நிறுவனம் முதல் செயற்கைகோளை விண்ணில் ஏவியது. இப்போதுவரை டஜன் கணக்கிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் இருந்து பூமியில் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைக் கண்டுபிடித்து தடுக்க உதவியுள்ளது. அரசு நிறுவனங்களின் செயற்கைக்கோள் படங்களை விட சிஹெச்ஜி செயற்கைக்கோள்களின் படங்கள் துல்லியத்தன்மை கொண்டவை. இதுவரை ஆறு மில்லியன் மெட்ரிக் டன்கள் கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டு தடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு, நாற்பது செயற்கைக்கோள்கள் புவிவட்டப்பாதையில் ஏவப்பட்டு அவை, பூமி முழுக்க தொழிற்சாலையில் இருந்து கசியும் பசுமை இல்ல வாயுக்களை கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், திரும்ப பயன்படுத்தும் ராக்கெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளது. இதேபோல, இயங்கும் தனியார் நிறுவனம் ராக்கெட் லேப். கலிபோர்னியாவில் உள்ள இந்த நிறுவனத்தின் மூலமே நாசா தட்பவெப்பநிலை செயற்கைக்கோள்களை ஏவிவருகிறது. ராக்கெட் லேபின் எலக்ட்ரான் என்பது திரும்ப பயன்படுத்தும் ராக்கெட்டுகளில் ஒன்று. இதை ஒருமுறை ஏவ 8.2  மில்லியன் டாலர்கள் செலவாகிறது. ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்டின் ஏவும் செலவு 67 மில்லியன் டாலர்கள். எனவே அரசு அமைப்பான நாசா, ராக்கெட் லேபை நம்பியுள்ளது. 190 தட்பவெப்பநிலை செயற்கைக்கோள்களை ஏவ ராக்கெட் லேப் உதவியுள்ளது.

எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க். இணைய சேவையை செயற்கைக்கோள் வழியாக வழங்கிவருகிறது. நடப்பு ஆண்டில் 6.6 பில்லியன் டாலர்கள் வருமானத்தைப் பெறும் என மதிப்பிட்டுள்ளனர். போர் நடக்கும் உக்ரைனில் மக்கள் தொடர்புகொள்ளவும் ஸ்டார்லிங்க் உதவி செய்து வருகிறது. இணைய சேவையை அதிக செலவு செய்து பெற முடியாத நாடுகளையும் இணைக்கும் பாலமாக ஸ்டார்லிங்க் மாறிவருகிறது. இந்தியா போன்ற சுயநலமும், பேராசையும் மிகுந்த வணிகர்கள் உள்ள நாட்டில் மட்டும் அயோக்கியத்தனமான வழிகளைப் பயன்படுத்தி மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்க முயல்கிறார்கள்.

மாணவர்களுக்கான இணைய சேவை
விட்டல் குழுமம்
வியட்நாம்

இந்த நிறுவனம், நாடெங்கும் கண்ணாடி இழை கேபிள் வழியாக நாற்பத்து ஆறாயிரம் கல்வி நிறுவனங்களுக்கு இணைய சேவையை வழங்கியுள்ளது. இதன் மூலம் இருபத்தைந்து மில்லியன் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். 2008ஆம் ஆண்டு வரை வியட்நாமில் இருபத்து நான்கு சதவீதம் பேரே இணையத்தை பயன்படுத்த முடிந்தது. இப்போது நிலை மாறியுள்ளது.

எல்லோ ஆப்

குழந்தை உளவியலாளர் எலிசபெத் ஆடம்ஸ், தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம், எல்லோ. இந்த நிறுவனம், ஏஐ மூலம் கல்விக்கான பாட நூல்களை உருவாக்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி அறிவைக் கற்பித்து வருகிறது. மாணவர்கள் பாடங்களைக் கற்பதை ஏஐ கேட்டு அதில் பிழைகள் இருந்தால் திருத்துகிறது. எல்லோ நிறுவனத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை ஆறு லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆப் வழியாக அணுகும் மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு வரையிலான நூல்கள் மட்டுமே எழுநூறைத் தாண்டுகிறது. இந்த நூல்களை ஏஐ மூலம் உருவாக்கியுள்ளனர். இந்த ஆப்பில் இணைந்து கல்வி கற்பவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் உள்ள, குறைந்த வருமானம் கொண்ட ஆங்கிலம் அறியாத மக்கள்தான்.



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்