இடுகைகள்

குளுக்கோஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யோசித்தால் மூளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதா?

படம்
@ மிஸ்டர் ரோனி அதிகமாக யோசித்தால் மூளை பாதிக்கப்படுமா? இப்படி கேள்வி கேட்கவும் சிரமப்பட்டிருப்பீர்கள் அல்லவா? மூளைக்கு வேலை கொடுத்தால் அதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் காலியாகும். இதன் காரணமாக சர்க்கரை தாகம் ஏற்படும். நிறைய டீ குடிப்பீர்கள். காபி அல்லது பிஸ்கெட்,  சாக்லெட் என பெடிகிரி தவிர நிறைய உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். ஆனால் அதனை உடற்பயிற்சி என எடுத்துக்கொள்ளுங்கள். மெக்சிகோ சலவைக்காரி ஜோக் போல எதையாவது ஆர்வமாக கண்டுபிடிக்க முயற்சியுங்கள். மூளை யோசித்தாலும் இல்லாவிட்டாலும் 20 சதவீத சக்தியை எடுத்துக்கொள்ளும். எனவே அதனைப் பயன்படுத்துங்களேன். யோசிப்பதால் உடலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, பகல், இரவு பார்க்காமல் யோசிப்பது. இப்படி எனக்குத் தெரிந்து யோசிப்பது தஞ்சை பிரகாஷ் கதாபாத்திரங்கள்தான். நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ்