இடுகைகள்

வெப்பநிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருநகர வெப்பநிலையை கார்களில் சென்சார் வைத்து கணிக்கலாம்!

படம்
  வெப்ப அலையை கார்களில் பயணம் செய்து கணித்தவர்!  நாட்டின் பெருநகரங்களில் ஏற்படும் பல்வேறு அளவுகளிலான வெப்ப அலை வேறுபாட்டை கணக்கிட சூழல் ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். 1927ஆம் ஆண்டு, ஆராய்ச்சியாளர் வில்ஹெம் ஸ்மித் (Wilhelm schmidt), வெப்பம் பற்றிய சோதனையொன்றை செய்தார். இதன்படி தன் காரில் பாதர தெர்மாமீட்டரைப் பொறுத்திக்கொண்டு வியன்னா நாட்டிற்குள் மூன்று மணி நேரம் சுற்றினார். இதில், அவர் நகரங்களின் வெப்பநிலை பற்றிய தகவல்களைப் பெற்றார். இதன்மூலம், அதிக வெப்பம் கொண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டன.  பல்லாண்டுகளாக சூழல் ஆராய்ச்சியாளர்கள் வெப்ப அலை பற்றி செய்த ஆய்வு, புல்லட்டின் அமெரிக்கன் மெட்டரோலாஜிகல் சொசைட்டி இதழில் வெளியாகியுள்ளது. வில்ஹெமின் ஆய்வுமுறையை மேம்படுத்தி கார்களில் சென்சார் பொறுத்தி இணையத்தில் இணைத்தனர். இதன்மூலம், வெப்பம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பதிவு செய்தனர்.  நகர மக்களே , இந்த ஆய்வில் பங்கேற்று தகவல்களை தரமுடியும் என்பது இதன் சிறப்பம்சம். நகரங்களில்  குறிப்பிட்ட இடங்கள் மட்டும் வெப்பத்தீவு போல காணப்படுவதை ஆராய்ந்தாலே, மக்களின் வாழ்வை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.  ப

கண்களைக் கவரும் வெப்ப நீரூற்று!

படம்
  ஆளை மயக்கும் வண்ணத்தில் வெப்ப நீரூற்று!  ஃபிளை கீசர்  ( Fly geyser ) அமெரிக்காவின் நெவடாவில் பிளாக் ராக் பாலைவனம் உள்ளது. அங்குதான் ஃபிளை கீசர் அமைந்துள்ளது. ஹூவாலாபெய் எனுமிடத்தில் உள்ள வெப்ப நீரூற்று இது. பூமியின் ஆழத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக இந்த நீரூற்று உருவானது. மலைகளின் வினோதமான நிறம் நீரூற்றில் கலந்துள்ள கனிமம் மற்றும் சில தாவர இனங்கள் காரணமாக ஏற்படுகிறது. பாலைவனத்தில் முன்னர் ஏரி ஒன்று இருந்தது. தற்போது அது, வறண்ட ஏரிப்படுகையாக உள்ளது.  நீரூற்றின் உயரம் 3.7 மீட்டர் ஆகும். இதிலிருந்து சூடான நீர் பீய்ச்சி அடிப்பதை பல கி.மீ. தொலைவிலிருந்தும் பார்க்கலாம். 1916ஆம் ஆண்டு மனிதர்கள் விவசாய நீர்தேவைக்காக நிலத்தை துளையிட, அதிலிருந்துதான் வெப்ப நீரூற்று வெளியாகத் தொடங்கியது. பிறகு இதற்கு நூறு அடி தள்ளி மற்றொரு இடத்தில் ஆய்வு நிறுவனம், நிலத்தில் துளையிட்டது.  அதிலும் வெப்பமான நீர் கிடைத்தது. ஆனால் அவர்கள் நினைத்தளவு வெப்பம் கிடைக்கவில்லை. இதன் வழியாக உருவானதுதான்  ஃபிளை கீசர். இதற்கு அடுத்து இங்கு 2006இல் இயற்கையான உருவான நீரூற்றின் பெயர், வில் கீசர்.   சில நாட்களுக்கு ஒருமுறை வெப்

வெப்பநிலையால் பாதிப்புக்கு உள்ளாகும் பவளப்பாறை!

படம்
வெப்பநிலையைத் தாங்கும் பவளப்பாறை! உலகில் உள்ள உயிரினங்களில் மூன்றில் ஒருபகுதி, பவளப் பாறைகளை வாழிடமாக கொண்டுள்ளன. 2100ஆம் ஆண்டு உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் என உயரும்போது பவளப்பாறைகள் முழுவதுமாக அழிந்துவிடும் வாய்ப்புள்ளது. இதிலிருந்து பவளப் பாறைகளை காக்கும் முயற்சிதான் சூப்பர் பவளப் பாறைகளை (super coral)வளர்ப்பது.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் மெடலின் வான் ஆப்பென், பவளப்பாறை வளர்ப்பு  முயற்சியை, சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டார். அப்போது இவரின் முயற்சிகளுக்கு உயிரியலாளர் ரூத் கேட்ஸ் துணையாக இருந்தார். 2018இல் ரூத் காலமாகிவிட, மெடலின் தனது ஐடியாவை  பிற ஆராய்ச்சிக் குழுவினரோடு பகிர்ந்துகொண்டு இயங்கி வருகிறார். பவளப்பாறைகளில் சிலவற்றை எடுத்து அதில் மரபணு மாற்றம் செய்கிறார்கள்.  மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சில பவளப்பாறை இனங்களைத் தேர்ந்தெடுத்து அதனை வெப்பநிலையை தாங்கிக்கொள்ளும்படி மாறுதல்களை செய்ய முயன்று வருகிறார்கள். இந்த வகையில் சில இனங்களை கலப்பின முறையில் உருவாக்குகிறார்கள். ”பத்தாண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சி செய்ய நமக்கு நேரம் கிடையாது என்பதால், பவளப்பாறைகளை வேகமாக உருவ

வெப்பநிலை அதிகரித்து வருவது உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்! - ரோக்ஸி மேத்யூ கோல்

படம்
  ரோக்ஸி மேத்யூ கோல், ஜப்பானில் கடல் மற்றும் வானிலை இயக்கம் பற்றிய முனைவர் படிப்பை படித்தவர். தற்போது, இந்திய வெப்பமண்டல வானியல் கழகத்தில் சூழல் அறிவியலாளராக பணியாற்றி வருகிறார். புயல், வெப்பஅலை, கடல் சூழல் பற்றி ஆய்வுகளை செய்துவருகிறார்.  வெப்பநிலை அதிகரித்து வருவது உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதே? உலகளவில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வேகம் குறைவாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் செயல்பாடுகளை உலகளவிலும், உள்ளூர் அளவிலும் சமச்சீராக செய்வது அவசியம். மக்களின் இனக்குழு மற்றும் கிராம பஞ்சாயத்துகள் காலநிலை மாற்ற மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பதோடு, அதனை செயல்படுத்தவும் முன் வரவேண்டும்.  இந்தியப் பெருங்கடலின் வெப்பம் அதிகரிப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது? ஐ.நாவின் காலநிலை கௌன்சில்(IPCC), இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்பமடைந்து வருவதைக் கூறியிருக்கிறது. கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, இந்தியா முழுக்க பெய்த 3 மடங்கு அதீத மழைப்பொழிவு, புயல்களே முக்கியக் காரணம். நாம், கார்பன்

வெப்ப வாயு பலூன்களில் பயணம்!

படம்
  வெப்ப வாயு பலூன்கள்! இந்த பலூன்கள் ஆகாய விமானங்கள் போன்றவை அல்ல. வானத்தில் மெல்ல காற்றில் அசைந்தாடித்தான் பயணிக்கும். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜோசப் மிச்செல் ஜாக்குயிஸ் மான்ட்கோல்ஃப்பையர் என்ற இரு சகோதரர்கள் வெப்ப வாயு பலூனை உருவாக்கினர். 1793ஆம்ஆண்டு இதனை உருவாக்கி பறக்க வைத்தனர்.  பட்டு மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி பலூனை உருவாக்கினர். இன்று உருவாக்கப்படும் பலூன்களுக்கு நைலான், பாலியஸ்டர் இழைகள் அடிப்படையானவை. இதில் நெருப்பு பிடிக்காமலிருக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வெப்பவாயு விடுவிக்கப்பட, அந்த இடத்திலுள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது.  இதனால், வெளியிலுள்ள குளிர்ந்த காற்று தரும் அழுத்தத்தில் பலூன் நகர்கிறது. இதனால் பலூன் மேல்நோக்கி (upthrust) உந்தப்படுகிறது.  ஜெர்மனியில் பறக்கும் கப்பல் (Air ship) உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஹீலியம் வாயுவால் இயக்கப்படுகிறது. வெப்பமான காற்றைப் போல, ஹீலியம் வாயுவும் அடர்த்தி குறைவானது. இதன் காரணமாகவே பறக்கும் கப்பலும் வானில் பயணிக்கிறது. இதில் திசையைத் தீர்மானிக்க புரப்பல்லர் இயந்திரங்கள் உள்ளன. காற்று வேகமாக அடிக்கும் சூழலில் இந்த இயந்திரங்க

கடலின் தனித்துவம் அறிவோம்!

படம்
  கடலின் தனித்துவம்! கடலில் சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி உலக பொருளாதார கூட்டமைப்பு, தி ஓசன் எகானமி  2030 என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில அம்சங்கள் இதோ.. நிலப்பரப்பை விட கடற்பரப்பு பெரியது. சூழல் அமைப்பும், உயிரினங்களும் வேறுபட்டவை. கடல் பரப்பில் உள்ள எல்லைகளும் நாடுகளுக்கு நாடு மாறுபடும்.  கடலில் உள்ள நீரில்,  ஒளிபுகும் தன்மை குறைவாகவே இருக்கும். கடல்படுகைகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதும் பல்வேறு சவால்களைக் கொண்டது.  கடல் பரப்பில் சூழல் பாதுகாப்பு திட்டங்களை திட்டமிடுவது, அதனை வரைபடமாக்குவது, மேலாண்மை செய்வது கடினம்.  கடல் நீரில் மாசுபாடு எளிதாக பிற இடங்களுக்கு பரவும். வேறு இனங்களைச் சேர்ந்த தாவர இனங்கள் இதன் வழியாக எளிதாக பரவ வாய்ப்புள்ளது.  கடல்வாழ் உயிரினங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பு சவால்களைக் கொண்டது.  சட்டவிரோதமான செயல்பாடுகளை தடுப்பது கடினம். கடல் பரப்புக்கு உரிமை, பொறுப்பு என வரையறுப்பது சிக்கலானது.  புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வந்தால், மனிதர்கள் கடலில் வாழ்வது சாத்தியமாகலாம்.  New scientist  23 apr 2022 Image - surfertoday

வெப்பநிலை அதிகரித்தால் அதற்கேற்ப வாழ்வை திட்டமிடவேண்டும் - ஃபிரீடெரிக் ஓட்டோ

படம்
 ஃபிரீடெரிக் ஓட்டோ சூழல் அறிவியலாளர், இம்பீரியல் கல்லூரி (காலநிலை மாற்றம் - சூழல்) நீங்கள் செய்து வரும் ஆராய்ச்சியின் அடிப்படை என்ன? உலகம் முழுக்க உள்ள இயற்கைச்சூழலை மனிதர்கள் செய்யும் செயல்பாடுகள் எப்படி மாற்றுகின்றன என்பதைத்தான் நான் ஆராய்ந்து வருகிறேன்.  இங்கிலாந்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சிஸயசை தாண்டியுள்ளதை செய்தியில் அறிந்திருப்பீர்கள். இங்குள்ள சாலை, ரயில்பாதை அனைத்துமே 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாண்டாதபடி திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இப்படி இருக்க முடியாது. அதற்கேற்ப நம்மை நாம் தயார் செய்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடலாம்.  வெப்பஅலை பற்றி உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது? உலகம் முழுக்க நாங்கள் வெப்ப அலை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம். வெப்ப அலை இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் இதில் மனிதர்களின் தூண்டுதல் அதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது. குறிப்பாக கரிம எரிபொருட்களை நாம் பயன்படுத்தி வருவது வெப்ப அலை நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்துகிறது. பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டத்தில் அதிகரிக்க முக்கியமான க

வெப்பத்தைக் கட்டுப்படுத்த தனி அதிகாரிகளை நியமிக்கும் நாடுகள்!

படம்
  வெப்ப கட்டுப்பாட்டு அதிகாரிகள்! அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் மியாமி டேட் கவுன்டியில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய பணியை மக்களுக்கு கஷ்டம் தராமல் வெப்பத்தை குறைக்கும் திட்டங்களை தீட்டுவதுதான். உலகின் முதல் வெப்பக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பதவியேற்றிருக்கிறார் ஜேன் கில்பெர்ட். ” அனைத்து நகரங்களிலும் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம்தான் சூழல் தொடர்பான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இதை யாருமே முதலில் கண்டுகொள்ளவில்லை. இப்போதுதான் நகரங்கள் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்றார் ஜேன் கில்பர்ட். 2021ஆம் ஆண்டு ஜேனுக்குப் பிறகு நான்கு நகரங்களில் (ஏதேன்ஸ் (கிரீஸ்), பீனிக்ஸ் சிட்டி (அரிசோனா), சியராலியோன் (ஆப்பிரிக்கா ) )இதேபோல வெப்பக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  1998 - 2017 காலகட்டத்தில் வெப்பஅலைகளின் பாதிப்பால் 1,66,000 மக்கள் பலியாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஐ.நா. வின் காலநிலை மாற்ற நிறுவனம், உலக மக்கள்தொகையில் 33 சதவீதம் பேர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தனது அறிக்கையில் கூறியுள்ளது.  தகவல்

பசுமை ஸ்டீல் உற்பத்தியை தொடங்கிய ஸ்வீடன்!

படம்
  சோதனை முறையில் பசுமை ஸ்டீலை உருவாக்கும் ஸ்வீடன்! ஸ்டீல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு சீனா. பெருமளவில் நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்புத்தாதுவைப் பிரித்தெடுத்து ஸ்டீல் உற்பத்தி செய்துவருகிறது. இந்த முறையில் சூழலை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் வெளியாகிறது. இதைத் தடுக்க ஸ்வீடனில் ஹைபிரிட் (HYBRIT) எனும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில், கார்பன் வெளியீடே இன்றி ஸ்டீல் உற்பத்தி செய்ய முடியும்.   எஸ்எஸ்ஏபி (SSAB) என்ற ஸ்வீடன் நாட்டு தனியார் நிறுவனம், அரசின்  சுரங்கநிறுவனம் (LKAB), அரசு மின்சார நிறுவனமான வான்டர்ஃபால் ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து, மாசில்லாத ஸ்டீல் தயாரிப்பை செயல்படுத்துகிறது. இப்படி ஸ்டீலை, உருவாக்குவது சோதனை முறை தான். இம்முறை வெற்றியடைந்தால் தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட்டு பெரிதாக அமையும்.  பொதுவாக, இரும்புத்தாதுவைப் பிரித்தெடுக்க கோக் (Coke) எனும் கரிம எரிபொருளைப் பயன்படுத்துகின்றனர். புதிய ஹைபிரிட் முறையில் நீரிலிருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்தெடுத்து கரிம எரிபொருளுக்கு பதிலாகப் பயன்படுத்துகின்றனர். ஹைட்ரஜனை 871 டிகிரி செல்சியசிற்கு, இரும்புத்த

நமது உடலில் தெரியும் நரம்புகள் நீலநிறமானவையா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மனிதர்களின் உடல் வெப்பநிலை வெப்பமயமாதலை கூட்டுமா? மனிதர்களின் உடல் வெப்பநிலை என்பது நூறு வாட் அளவுதான் இருக்கும். இதனை வழக்கொழிந்து போன குண்டு பல்பின் திறனோடு ஒப்பிடலாம். மக்கள்தொகை கூடினாலும் கூட வெப்பநிலை பெரிய பிரச்னையாக இருக்காது. பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புதான் சூரியனின் வெப்பம் பூமியில் அதிகம் படுவதற்கு காரணம். கரிம எரிபொருட்கள், பசுமை இல்ல வாயுக்களின் அளவுதான் வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம்.  நமது நரம்புகள் நீலநிறமாக இருப்பது உண்மையா? ரத்தம் சிவப்பாக இருக்க காரணம், ரத்த சிவப்பணுக்கள்தான். இதில்  ஆக்சிஜன் இருந்தால்  பளிச்சென சிவப்பாகவும், இல்லையென்றால் அடர் சிவப்பாகவும் மாறும். ரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது. கையில் பார்க்கும்போது நரம்புகள் சிலருக்கு புடைப்பாக நீலநிறமாக, அல்லது பச்சை நிறமாக தெரியும். இது ஒளியின் சிதறல்களால் ஏற்படுகிறது.  சிவப்பு நிறம், நீளமான அலைநீளம் கொண்டது. எனவே அது உடலில் எளிதாக பயணிக்க முடியும். இதனால் ரத்த த்தில் உள்ள ஹீமோகுளோபினால் இந்த நிறம் கிரகிக்கப்படுகிறது. நீலநிறம் என்பது குறைந்த அலைநீளம் கொண்டது. எனவே உடலா

உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா தடுப்பூசி? - உண்மையும் உடான்ஸூம் அறிவோம்!

படம்
              உண்மையும் உடான்ஸூம்! ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளிலிருந்தும் சென்ற கருப்பின அடிமைகள் உலகம் முழுக்க பரவினார்கள் ரியல் : ஆப்பிரிக்கா என்பது ஓர் நாடு என சிலர் நினைப்பது போலவே இதுவும் தவறான நம்பிக்கை . ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் கருப்பினத்தவர்கள் விற்கப்படவில்லை . ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதியிலிருந்துதான் கருப்பினத்தவர்கள் அடிமை வணிகம் தொடங்கியது . தங்கம் தேடி ஆப்பிரிக்காவிற்கு சென்ற போர்ச்சுக்கீசியர்கள் 1442 ஆம் ஆண்டு தங்கள் நாட்டிற்கு பத்து ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு சென்றனர் . பின்னர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கானாவில் எல்மினா எனும் அடிமைகள் விற்குமிடத்தை தொடங்கினர் . அங்கு அடிமைகள் விற்பனையோடு , தங்கம் , யானைகளின் தந்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன . 1619 ஆம் ஆண்டுவாக்கில் ஐரோப்பியர்களால் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர் . நம் கைகளிலுள்ள கைரேகைகள் பொருட்களை இறுக்கமாக பிடிக்க உதவுகின்றன ரியல் : நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிய நம்பிக்கை இது . ஆனால் இது உண்மையல்ல .

உடலின் வெப்பநிலை அளவுகள் மாறிவருகின்றன!- பழங்குடிகளிடம் செய்த ஆய்வில் தெரிய வரும் உண்மைகள்!

படம்
      சட்டென மாறுது உடலின் வெப்பநிலை ! சராசரியாக கருதப்பட்ட 37 டிகிரி செல்சியஸ் உடல் வெப்பநிலை , தற்போது உலக நாடுகளில் வாழும் மக்களிடையே மாற்றம் காணத் தொடங்கியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் . அமெரிக்கா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களின் சராசரி உடல் வெப்பநிலை , மெல்ல 37 டிகிரி செல்சியலிருந்து மாற்றம் கண்டு வருகிறது . பொலிவியா நாட்டில் பழங்குடி மக்களின் உடல்நிலை பற்றிய ஆராய்ச்சி 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . இதுதொடர்பான ஆய்வு அறிக்கை சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ளது . இதிலுள்ள பல்வேறு அம்சங்களைப் பொருத்திப்பார்த்தால் பொதுமக்களின் உடல்வெப்பநிலை மாறுபடுவதற்கான காரணங்களை புரிந்துகொள்ள முடியும் . 1851 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் கார்ல் ரெய்ன்கோல்டு ஆகஸ்ட் வொண்டர்லிச் , 25 ஆயிரம் நோயாளிகளை ஆராய்ச்சி செய்து தெர்மாமீட்டருக்கான அளவீட்டை உருவாக்க முயன்றார் . 1868 ஆம் ஆண்டு கார்ல் எழுதி வெளியிட்ட நூலில் , மனிதரின் சராசரி உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்று உறுதி செய்து கூறினார் . அண்மையில் வெளியான பல்வேறு

சளி பிடித்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்யலாமா?

மிஸ்டர் ரோனி சளி பிடித்திருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா? சளி பிடித்திருக்கும்போது அதனை விரட்டும் பணியில் உடல் இருக்கும். அப்போது பார்த்து நீங்கள் டம்பெல், பென்ச் பிரஸ் என செய்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும், உடல்நிலை இன்னும் மோசமாகும். எளிதான உடற்பயிற்சிகளைச்செய்யலாம் தவறில்லை. பாத் பல்கலைக்கழக அறிக்கைப்படி, சளி பிடித்து உடல்வெப்பநிலை காய்ச்சல் வரும் நிலையில் இருக்கும்போது, ஓய்வு எடுப்பதே நல்லது. இல்லையெனில் உடலை ஐசியுவில் வைத்து பராமரிக்கும்படி ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

உடல் தன்னைப பாதுகாத்துக்கொள்ளும் நிலை - ஹோமியோஸ்டேசிஸ்!

படம்
ஹோமியோஸ்டேசிஸ்! நம்முடைய உடல் 98.6 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்தால் மட்டுமே ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சரியாக இருக்கும். இல்லையெனில் உடல் உள்ளுறுப்புகள் மெல்ல செயலிழந்து போகும் அபாயம் உண்டு. இதைத்தான் ஹோமியோ ஸ்டேசிஸ் என்று கூறுகிறார்கள். இதனை உளவியல் சார்ந்தும் மருத்துவர்கள் அணுகுகிறார்கள். எப்படி என்றால், வெளியுலகைச் சார்ந்து சூழல் மாறினாலும் உடலின் நிலை மாறாமல் இருப்பது. இதனை ஏற்றும் மறுத்தும் பல்வேறு கருத்துகள் உள்ளன. உளவியலாளர் வால்டர் கனோன், தி விஸ்டம் ஆஃப் பாடி(1932) என்ற நூலில் இதுகுறித்து எழுதியுள்ளார். இதில் பாதிப்பு ஏற்படும் போது உடல் உறுப்புகள் மூளைக்கு தகவல்களை அனுப்புகின்றன. எதிர்மறை உணர்வு என்று சிக்னல் கிடைத்ததும், மூளை உடலின் வெப்பநிலையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறது. இதுவும் செயலிழக்கும் நிலையில் உயிர் பறிபோகிறது. வெப்பம் அதிகரிக்கும்போதும்போது ஏற்படும் பாதிப்பைப் போலவே, குளிர் கூடும்போது உடலில் நடுக்கும் ஏற்படுத்துவதன் வழியாக ரத்தம் தடையின்றி பாய்கிறது. நன்றி: லிவ் சயின்ஸ்

அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்!

படம்
அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்! டெல்லியைச் சேர்ந்த ஜாமியா ஆராய்ச்சியாளர்கள் குழு 27 டிகிரி முதல் -196 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிராபீன் டாட்ஸ் முறையில் தயாரிக்கப்பட்ட தெர்மோமீட்டர் இது. இதில் மைக்ரோ கெல்வின் அளவிலான மாறுதலையும் கண்டுபிடிக்க முடியும். இந்த தெர்மோமீட்டரை ஷேக் எஸ் இஸ்லாம் என்ற நானோசயின்ஸ்  தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த இயக்குநர் தலைமையிலான குழு கண்டுபிடித்திருக்கிறது. செல்சியஸ் வெப்பநிலையில் மாறும் மாறுதல்களை 300 மில்லி செகண்ட்ஸ் வேறுபாட்டில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது இது. ஓராண்டில் ஏறத்தாழ 50 சுழற்சி முறைகள் உண்டு. இதில் அல்ட்ரா ஃபாஸ்ட் முறையில் தெர்மோமீட்டர் செயல்படுகிறது. நன்றி: நானோஸ்கேல் அட்வான்சஸ் படம் - செய்தி: தி இந்து