இடுகைகள்

அபராஜிதா தத்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருவாட்சியை பாதுகாக்க காவலர்களான பழங்குடி மக்கள் - அபராஜிதா தத்தாவின் சூழல் பாதுகாப்பு முயற்சி!

படம்
  இருவாட்சியைப் பாதுகாக்கும் பழங்குடிகள்! அருணாசலப் பிரதேசத்தில், நைஷி பழங்குடிகள் (Nyishi tribe)வாழ்கிறார்கள். இவர்கள் அங்குள்ள காட்டில் தென்படும் பல்வேறு பறவைகளை வேட்டையாடி வந்தனர். அதில், இருவாட்சி பறவையும் ஒன்று. தற்போது, பழங்குடிகள் பறவைகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். எனவே, அவற்றைப்  பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர்.  தி ஹார்ன்பில் நெஸ்ட் அடாப்டேஷன் புரோகிராம் ஆப் அருணாசலப் பிரதேசம் எனும் திட்டம் (Hornbill Nest Adoption Program (HNAP)), 10ஆவது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  பக்கே (Pakke) புலிகள் காப்பக பகுதியில் இருவாட்சி பாதுகாப்புத் திட்டத்தை பத்து பழங்குடி மக்கள் செயல்படுத்தி வருகிறார்கள். காடுகளில் விதைகளை பரப்பும் வேலையை இருவாட்சி பறவைகளே செய்கின்றன. உலகம் முழுக்க இருவாட்சி பறவைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவருகிறது. இதற்கு அதன் வாழிடம் அழிப்பு, வேட்டையாடப்படுவது ஆகியவை முக்கிய காரணங்கள். பக்கே புலிகள் காப்பகத்தில் கிரேட் ஹார்ன்பில் (The great hornbill,), ரூபோஸ் நெக்ட் ஹார்ன்பில் (Rufous-necked hornbill), ரேத்ட் ஹார்ன்பில் (Wreathed hornbill ), ஓரியன