இருவாட்சியை பாதுகாக்க காவலர்களான பழங்குடி மக்கள் - அபராஜிதா தத்தாவின் சூழல் பாதுகாப்பு முயற்சி!

 











இருவாட்சியைப் பாதுகாக்கும் பழங்குடிகள்!


அருணாசலப் பிரதேசத்தில், நைஷி பழங்குடிகள் (Nyishi tribe)வாழ்கிறார்கள். இவர்கள் அங்குள்ள காட்டில் தென்படும் பல்வேறு பறவைகளை வேட்டையாடி வந்தனர். அதில், இருவாட்சி பறவையும் ஒன்று. தற்போது, பழங்குடிகள் பறவைகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். எனவே, அவற்றைப்  பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர்.  தி ஹார்ன்பில் நெஸ்ட் அடாப்டேஷன் புரோகிராம் ஆப் அருணாசலப் பிரதேசம் எனும் திட்டம் (Hornbill Nest Adoption Program (HNAP)), 10ஆவது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

பக்கே (Pakke) புலிகள் காப்பக பகுதியில் இருவாட்சி பாதுகாப்புத் திட்டத்தை பத்து பழங்குடி மக்கள் செயல்படுத்தி வருகிறார்கள். காடுகளில் விதைகளை பரப்பும் வேலையை இருவாட்சி பறவைகளே செய்கின்றன. உலகம் முழுக்க இருவாட்சி பறவைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவருகிறது. இதற்கு அதன் வாழிடம் அழிப்பு, வேட்டையாடப்படுவது ஆகியவை முக்கிய காரணங்கள். பக்கே புலிகள் காப்பகத்தில் கிரேட் ஹார்ன்பில் (The great hornbill,), ரூபோஸ் நெக்ட் ஹார்ன்பில் (Rufous-necked hornbill), ரேத்ட் ஹார்ன்பில் (Wreathed hornbill ), ஓரியன்டல் பைடு ஹார்ன்பில் (Oriental pied hornbill.) ஆகிய இருவாட்சி  இன பறவைகள் வாழ்கின்றன. இதில் முதல் மூன்று பறவைகள், அச்சுறுத்தல் நிலையில் உள்ளன. 

2012ஆம் ஆண்டு நேச்சர் கன்சர்வேஷன் பௌண்டேஷன் மற்றும் பழங்குடி அமைப்பான கோரா அபே ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, இருவாட்சி பறவையைப் பாதுகாக்கத் தொடங்கின. அதுவரை இருவாட்சியை வேட்டையாடி அதன் அலகு, சிறகுகளை தலையில் அணிந்த வந்த பழங்குடிகள் அச்சடங்கை கைவிடத் தொடங்கினர்.

 நேச்சர் கன்சர்வேஷன் பௌண்டேஷன் அமைப்பின் அபராஜிதா தத்தா, இருவாட்சி பறவைகளைத்  தத்தெடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதனால் மக்கள், இருவாட்சி பறவைகளை தத்தெடுக்க நிதியுதவியை அளிக்கலாம். இத்தொகை இருவாட்சியை பாதுகாக்கும் பழங்குடியின காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் பழங்குடி மக்கள் கடந்த பத்தாண்டுகளாக மூன்று இருவாட்சி இனங்களைச் சேர்ந்த 173 குஞ்சுகளைப் பாதுகாத்துள்ளனர். இருவாட்சிகளைப் பாதுகாக்க  உலகளவில் உள்ள 15 வனவிலங்கு பூங்காக்களும், தன்னார்வலர்களும் உதவிகளை வழங்கி வருகின்றனர். 
  
Feather in his cap
https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/the-very-successful-project-by-the-nyishi-tribe-in-arunachal-pradesh-to-protect-hornbills-turns-10/article65245465.ece
https://www.ncf-india.org/author/646436/aparajita-datta
https://www.ncf-india.org/eastern-himalaya/hornbill-nest-adoption-program

image - Pixabay

நன்றி பட்டம் இதழ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்