இடுகைகள்

எவரெஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! - மலையேற்ற பயணத்தின் வரலாறு

படம்
  எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! நூற்றாண்டு கண்ட இமயமலை பயணம் ! கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம், இமயமலைக்கு மக்கள் பயணம் செல்லத் தொடங்கி நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. இமயமலை 8,849 மீட்டர்கள் உயரமானது. உலகின் உயரமான மலை இது. 1921ஆம் ஆண்டு முதலே இமயமலையில் மக்கள் ஏறி சாதித்து வருகிறார்கள். இன்று, ஆண்டிற்கு 500 பேர் இமயமலையை எட்டிப்பிடிக்கும் லட்சியத்துடன் பயணித்து வருகிறார்கள்.  இமயமலையின் எல்லைப்பகுதியில் நேபாளமும், திபெத்தும் அமைந்துள்ளன. இமயமலையின் திபெத்திய பெயர் கோமொலாங்மா (qomolangma). இதன் பொருள் புனித அன்னை. இந்த மலை, 2414 கி.மீ. தொலைவில்  ஐந்து ஆசிய நாடுகளைச் சுற்றிலும்  அமைந்துள்ளது. தொடக்கத்தில் நேபாளமும், திபெத்தும் அந்நியர்களை இமயமலை பயணத்திற்கு அனுமதிக்கவில்லை. 1921ஆம் ஆண்டு திபெத்  பகுதியினர், பிரிட்டிஷ் வீரர்களை இமயமலை ஏற அனுமதித்தது. இவர்கள் மலையை ஆராய சென்றனர். இக்குழுவை சார்லஸ் ஹோவர்ட் பரி (charles howard bury) என்பவர் வழிநடத்தினார். புவியியலாளர்கள், வரைபட ஆய்வாளர்கள் குழுவில் இருந்தனர்.   இப்பயணத்தைப் பற்றி கார்டியன் பத்திரிக்கை ”சார்லஸ் எவரெஸ்டில் ஏறியது மகத்தான சாதனை. து

இமயமலையிலுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளக்கப்பட்ட வரலாறு!

படம்
              புத்தகம் புதுசு ! ஸ்பேஸ் லைப் மேட்டர் ஹரி புலக்கட் ஹாசெட் 699 குறைந்த ஆதாரங்களைக் கொண்ட நாட்டில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுப்பது எப்படி ? இந்தியா எந்த அடிப்படையும் இல்லாத இடத்தில் இருந்துதான் வானியல் ஆய்வுகளை நடத்தத் தொடங்கியது . இதன்விளைவாக கோலார் தங்க வயலில் காஸ்மிக் கதிர் சோதனை , ஊட்டியில் தொலைநோக்கி அமைத்தது , இப்படி இந்தியாவில் ஆய்வுகளை சிறப்பாக நடத்தி , வலிமையான அறிவியல் நிறுவனங்கள் எப்படி அமைக்கப்பட்டன என்பதை இந்த நூல் விளக்குகிறது தி ஹன்ட் பார் மவுன்ட் எவரெஸ்ட் கிரேக் ஸ்ட்ரோர்டி ஹாசெட் 699 இமயமலையிலுள்ள சிகரத்தை எப்படி அளவிடுகிறார்கள் , இதில் நேபாளம் , திபெத் ஆகிய நாடுகளின் பங்கு , பிரிட்டிஷ் காலத்தில் அங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் அதனை எப்படி அளவிட்டனர் என்பது பற்றிய ஏராளமான தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது . எ டேஸ்ட் ஆப் டைம் மோகனா காஞ்சிலால் 899 ஸ்பீக்கிங் டைகர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தலைநகராக இருந்த நகரம் . இந்த நகரில் ஏராளமான கலாசார பன்மைத்துவம் கொண்ட குழுக

அரசியல் தெரியாது. மலையேற்றம்தான் தெரியும்!

படம்
உடலின் சக்தியை உலகிற்கு காட்ட நினைத்தேன் ஆறு மாதங்களில் பதினான்க ஆபத்தான மலைப்பகுதிகளில் ஏறி உலக சாதனை படைத்திருக்கிறார் நேபாளத்தின் கூர்கா இனத்தவரான நிர்மல் புர்ஜா. இந்த சாதனை படைத்தபின் அவர் தரும் நேர்காணல் இது. கடந்த எட்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டின் ஆறு மாதங்களில் நீங்கள் செய்த சாதனை முக்கியமானது. விரைவில் எவரெஸ்ட், லோட்சே ஆகிய மலைகளிலும் ஏறுவீர்கள் என நம்புகிறோம். 48 மணிநேரத்தில் மக்காலு மலைப்பகுதியில் ஏறினேன். பாகிஸ்தானிலுள்ள 8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான மலைப்பகுதிகளிபல் 23 நாட்களில் ஏறியுள்ளேன். என்னுடைய நோக்கம் உலக சாதனை படைப்பது அல்ல. மனிதனின் உடல் பல்வேறு சூழல்களுக்கும் தாக்குபிடிப்பது என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்பதே. ரெய்ன்ஹோல்டு மெஸ்னர், 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை பதினாறு வயதில் அடைந்தார். அன்றைய காலத்தை ஒப்பிடும்போது இன்று தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறதுதானே? தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறது. அதேசமயம் மனிதர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள், விமர்சனங்கள் கூடியிருக்கின்றன. நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. மலையேற்றத்திற்கு நிறைய ப

எவரெஸ்டில் பயணிகள் இறப்பது ஏன்?

அண்மையில் எவரெஸ்டில் ஏறிய பலர் காயமுற்றும் இறந்தும் உள்ளனர். என்ன காரணம்? இந்த வாரம் மட்டும் ஏழுபேர் இறந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நிகால் பக்வான் என்பவரும் இந்த பட்டியலில் அடக்கம். முன்பை விட  சாதனைக்கான ஏக்கம் உலகில் அதிகரித்துள்ளது. எவரெஸ்டில் ஏறுவதற்கான காத்திருப்பு பனிரெண்டு மணிநேரமாக அதிகரித்துள்ளது. பனிரெண்டு மணிநேரம் காத்திருந்து நாங்கள் மேலே சென்றோம் என்கிறார் பிரான்ஸ் பிரெஸ்ஸே நிறுவனத்தைச் சேர்ந்த கேசவ் பாடெல். எவரெஸ்டில் ட்ராஃபிக் ஜாமா என்று நினைப்பீர்கள். உண்மைதான். இதில் ஒருவருக்கு ஆக்சிஜன் போதாமல் பிரச்னை ஏற்பட்டால் அவரைக் காப்பாற்றுவது மிகவும் சிரமம். உலகின் உயரமான மலைத்தொடரான எவரெஸ்ட் 29 ஆயிரம் அடி கொண்டது. கடல்மட்டத்திற்கு மேல் உள்ள சிகரம் இது. மலையில் ஏறுபவர்கள் அங்கு சென்றதும், மூச்சுத்திணறலை உணர்வார்கள் என்கிறார் மருத்துவர் ஆண்ட்ரூ லூக்ஸ். இந்த பாதிப்பைப் போக்க டயாமோக்ஸ் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது டெக்ஸ்மெத்தோசோன் என்ற மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.  மலையில் ஏறுபவர்களுக்கு ஹேஸ்  எனும் ஹை அல்டிடியூட் செரிபிரல் எடிமா பாதிப்ப

எவரெஸ்டில் சாதனை சமையல்!

படம்
எவரெஸ்டில் சாதனை சமையல் !- ச . அன்பரசு தங்கம் , வெள்ளி என எதுகொடுத்தாலும் போதாது போதாது என்பவர்கள் இதற்கு மேல் முடியாது என சொல்லி சரண்டர் ஆவது உணவில் மட்டும்தான் . அப்படி பல்லாயிரக்கணக்கான வயிறுகளை திருப்தியுடன் குளிர்வித்து தன் சமையல் சாதனைகளையும் நீட்டித்துக்கொண்டே செல்கிறார் லண்டனின் புகழ்பெற்ற சமையல்கலைஞரான வினீத் பாட்டியா . லண்டனின் செல்வாக்கான மனிதர்களின் லிஸ்டில் தவிர்க்க முடியாத சமையல் ஆளுமை . 30 ஆண்டு கிச்சன் அனுபவத்தில் பிரபலங்களின் நாக்குகளை தன் கைமணத்திற்கு அடிமையாக்கியவர் . மிட்செலின் ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒன்பது ஹோட்டல்களை நடத்தும் சமையல்கலைஞர் வினீத் பாட்டியா செய்யும் சமையல் எக்ஸ்பரிமெண்டுகளுக்கு வானமே எல்லை . தற்போது இவர் தொட்டுள்ளது எவரெஸ்ட் சிகரத்தை . எவரெஸ்டில் சமையல் செய்வதுதான் வினீத்தின் அடுத்த சவாலே சமாளி டாஸ்க் . மும்பையில் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்த வினீத்திற்கு விமானப்படையில் சேர்வதுதான் கனவு . எழுத்து தேர்வில் ஜெயித்தவருக்கு உடற்தகுதி மைனஸாக , விரக்தி அடைந்தவரின் வாழ்க்கையை அவர் பிடித்த சமையல்கரண்டி கரையேற்