இமயமலையிலுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளக்கப்பட்ட வரலாறு!
புத்தகம் புதுசு!
ஸ்பேஸ் லைப் மேட்டர்
ஹரி புலக்கட்
ஹாசெட்
699
குறைந்த ஆதாரங்களைக் கொண்ட நாட்டில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுப்பது எப்படி? இந்தியா எந்த அடிப்படையும் இல்லாத இடத்தில் இருந்துதான் வானியல் ஆய்வுகளை நடத்தத் தொடங்கியது. இதன்விளைவாக கோலார் தங்க வயலில் காஸ்மிக் கதிர் சோதனை, ஊட்டியில் தொலைநோக்கி அமைத்தது, இப்படி இந்தியாவில் ஆய்வுகளை சிறப்பாக நடத்தி, வலிமையான அறிவியல் நிறுவனங்கள் எப்படி அமைக்கப்பட்டன என்பதை இந்த நூல் விளக்குகிறது
தி ஹன்ட் பார் மவுன்ட் எவரெஸ்ட்
கிரேக் ஸ்ட்ரோர்டி
ஹாசெட் 699
இமயமலையிலுள்ள சிகரத்தை எப்படி அளவிடுகிறார்கள், இதில் நேபாளம், திபெத் ஆகிய நாடுகளின் பங்கு, பிரிட்டிஷ் காலத்தில் அங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் அதனை எப்படி அளவிட்டனர் என்பது பற்றிய ஏராளமான தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது.
எ டேஸ்ட் ஆப் டைம்
மோகனா காஞ்சிலால்
899 ஸ்பீக்கிங் டைகர்
பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தலைநகராக இருந்த நகரம். இந்த நகரில் ஏராளமான கலாசார பன்மைத்துவம் கொண்ட குழுக்கள் வசித்தனர். இதனால் இங்கு கட்லெட், சமோசா, குலாப் ஜாமூன் ஆகியவை நகரின் முக்கியமான உணவுகளாக மாற்றம் பெற்ற கதையை விவரிக்கிறார் ஆசிரியர். தொன்மைக்காலத்தில் உருவான உணவு வகைகளின் வரலாறு படிக்க சுவாரசியமாக உள்ளது.
இஸ்டைல்
குப்சந்தானி
ஆடியோபுத்தகம்
மாற்றுப்பாலினத்தவரின் வாழக்கை நகரங்களில் எப்படி உள்ளது, பெங்களூரு மற்றும் சிகாகோவில் எப்படி மக்களின் வாழ்க்கை உள்ளது என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
ஹெச்டி
கருத்துகள்
கருத்துரையிடுக