உலகை மாற்றிய பெண்கள் - கவிஞர் சாபோ, எமிலி டிக்கின்சன்
பெண் கவிஞர் சாபோ
தொன்மைக்கால புகழ்பெற்ற பெண் கவிஞர்
தொன்மைக்காலத்தில் தனது ஆழ்மன உணர்ச்சிகள், கருத்துகள் பற்றி பாடல்களை எழுதிய பெண்மணி. அந்த காலத்திலேயே இந்த வகையில் ஒன்பது பாகங்களாக கவிதை நூல்களை எழுதி குவித்தார்.
இன்று சாபோ எழுதியவற்றில் 650 வரி கவிதைகள் மட்டுமே மிச்சம்.
சாபோ அன்றைய காலத்தில் டிரெண்டிங்கை பின்பற்றாமல் அதனை உருவாக்கியவராக இருந்தார். இவர் எந்த ரிதத்தில், எந்த பாணியில் கவிதையை எழுதினாரே அதே போல நகலெடுத்து ஏராளமான கவிஞர்கள் கவிதைகளை பின்னாளில் எழுதினர். லையர் எனும் இசைக்கருவியை இசைக்க அதற்கு கவிதையைப் பாடுவது சாபோவின் திறமை.
சாபோவின் காலம் 630 முதல் 612 வரை இருக்கலாம். இவரது சொந்த வாழ்க்கை பற்றி நமக்கு குறைவான தகவல்களை கிடைக்கின்றன. கிரேக்க தீவான லெஸ்போஸில் பிறந்த பெண் கவிஞருக்கு மணமாகி பெண் குழந்தை இருந்திருக்கிறது. கடல் பயணி மீது காதல் கொண்டு அக்காதல் நிறைவேறாத தால் மலை உச்சியில் இருநது கீழே குதித்து உயிரை விட்டார் என்று தகவல்கள் சொல்லுகின்றன.
தொன்மை நாணயங்களில் சாபோவின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. தத்துவவாதி
பிளாட்டோ கூட இவரை புகழ்ந்திருக்கிறார்.
===========================================
எமிலி டிக்கின்சன்
டிக்கின்சனுக்கு காக்கை வலிப்பு அல்லது பொது இடங்களுக்கு செல்வதில் அச்சம் இருந்தது இதனால் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தவிர்த்தார்.
எமிலி பிரான்டே என்ற ஆங்கில கவிஞர் மற்றும் நாவல் ஆசிரியர் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தவர் டிக்கின்சன். டிக்கின்சன் இறந்தபிறகு இறுதிச் சடங்கில் பிரான்டேயின் கவிதைகள் வாசிக்கப்பட்டன.
டிக்கின்சன், தனது இளமைப் பருவத்திலேயே கவிதைகள் எழுத தொடங்கிவிட்டார். ஆனால் இதனை தீவிரமாக எடுத்துக்கொண்டு எழுதியது 1950களிலதான். பல்வேறு புதிய ஐடியாக்களை தனது கவிதையில் செய்து பார்த்தார். காலங்கள் மாற மாற அவர் தன்னை சமூகத்திலிருந்து விலக்கிக்கொண்டார். ஆனால் இந்த நேரத்தில் கவிதை எழுதுவது அதிகரித்திருந்தது. தன்னை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டபோதும் பல்வேறு நண்பர்கள், இலக்கிய ஆளுமைகளுடன் தொடர்பில் இருந்தார்.
1830ஆம் ஆண்டு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். அப்போதே புத்திசாலித்தனமும், திறமையும் கொண்டவர் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. தனது பெற்றோரிடம் இவரது உறவு சுமூகமாக இல்லை. இருவரும் அவரை கடுமையாக கட்டுப்படுத்தக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
தான் வாழும் காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தவர் கவிஞர் எமிலி டிக்கின்சன். இவர் 1800 கவிதைகளை எழுதியுள்ளார். கூடவே நிறைய கடிதங்களையும் எழுதினார். விதிகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கவிதை புனைந்தவர். அன்றைய புகழ்பெற்ற கவிஞர் ஜான் டோன்னேவின் எழுதும் பாணியா்ல் ஈர்க்கப்பட்டிருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக