பெருந்தொற்று காலத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பாப்புலிச தலைவர்கள்! - புதிய நூல்கள் அறிமுகம்
புத்தகம் புதுசு!
லாங்குவேஜஸ் ஆப் ட்ரூத்
சல்மான் ருஷ்டி
பெங்குவின்
2003இல் இருந்து 2020ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட பல்வேறு விஷயங்களை நூல் கொண்டுள்ளது. இந்த காலகட்டங்களி்ல் நடைபெற்ற கலாசார மாற்றங்களை பேசுகிறது. கதை சொல்லுவதை இயல்பாக தனது எழுத்தில் இயல்பாக கொண்டிருப்பதால் இந்நூலை படிக்கும் அனுபவம் சிறப்பாக உள்ளது.
டூம்
நியால் ஃபெர்குஷன்
பெங்குவின்
உலகம் முழுக்க செயல்படும் பாப்புலிச தலைவர்கள், பெருந்தொற்று காலத்தில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி மக்களை காக்கமுடியாமல் தடுமாறி வருகின்றனர். இந்த நிலை ஏற்பட்டது எப்படி? சில நாடுகள் மட்டும் சார்ஸ், மெர்ஸ் ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது எப்படி என இந்த நூல் பேசுகிறது.
டெவலப்மென்ட், டிஸ்ட்ரியூபூஷன் அண்ட் மார்க்கெட்ஸ்
கௌசிக் பாசு
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்
இந்த நூல் எப்படி மேம்பாட்டு பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நேரடியாக பணத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது, அதன் விளைவுகள் என்ன, ஏழைகளுக்கு உருவாக்கப்படும் பொருளாதார திட்டங்கள், கொள்கைகளை எப்படி பார்ப்பது என்ற பார்வையைத் தருகிறது.
ஆந்த்ரோபோசென்
சுதீப் சென்
பெங்குவின்
பருவச்சூழல் மாற்றம் என்பது இன்று உலகை அச்சுறுத்தி வருகிறது. கூடவே பெருந்தொற்று நமது வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. இதன் மூலம் நடப்பில் ஏராளமான மாற்றங்கள் நடந்துள்ளன. நமது வாழ்க்கையில் பின்னணியில் நடக்கும் பல்வேறு ஆபத்தான விஷயங்களைப் பற்றி விளக்கமாக பேசுகிறது.
தி பவர் ஆப் ஜியோகிராபி
டிம் மார்ஷல்
சைமன் அண்ட் ஸ்ஹஸ்டர்
உலகி்ல் இன்று பல்வேறு வளங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் வளங்களுக்காக போட்டியிடத்தொடங்கியுள்ளன. இப்படி ஏற்படும் போட்டி நிலப்பரப்பு ரீதியான என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை ஆசிரியர் விளக்கியுள்ளார். இந்த நூலை படிப்பதற்கு முன்னர் மார்ஷல் எழுதியா பிரீசனர் ஆப் ஜியோகிராபி என்ற நூலை படிப்பது நல்லது.
ஹவ் டு சேஞ்ச்
கேட்டி மில்க்மேன்
பெங்குவின்
கேட்டி பயிற்சியால் ஒரு பொறியாளர் என்றாலும் மனதில் ஏற்படும் பல்வேறு மாற்றங்ளளால் உருவாகும் பழக்கம் எப்படி நோக்கங்களை அடையவும் , அதில் இருந்து பின்னடைவு பெறவும் காரணமாக இருக்கிறது என்பதை விளக்கியுள்ளார்., ஒருவகையில் சிறந்த பழக்கங்களை நீங்கள் உருவாக்கிக்கொள்ள இந்த நூல் உதவியாக இருக்கலாம்.
பினான்சியல் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக