சீரியல் கொலைகாரர்களுக்கான கலாசாரம், அறிகுறிகள், குணங்கள் !

 

 

 

 

 

 

 

 


 

 

 

சைக்கோ கொலைகாரர்களின் கலாசாரம்



சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய அறிமுகத்தை நான் முன்னமே உங்களுக்கு அசுரகுலம் நூலில் தந்துவிட்டேன். இந்த இரண்டாம் பாகத்தில் குற்றவாளிகளின் உருவாக்கம், காலத்தின் பங்கு, அதைச்சார்ந்து இயங்கும் மனிதர்கள், ஊடகங்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி பேசலாம்.


ஹிட்லர், முசோலினி ஆகியோர் கொடுங்கோலர்கள், அவர்கள் குறிப்பிட்ட மக்களின் மீது வெறுப்பைத் தூண்டினார்கள், மக்களை அழித்தொழித்தார்கள் என்று ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவை உண்மைதான். அதேசமயம் அதற்கு தூண்டுதலாக இருந்த காலம், நாட்டில் நிலவிய வறுமை, பொதுநலனை குலைத்த சுயநலம், யார் மீது குற்றம்சாட்டுவது என பரிதவித்த மக்களின் மனநிலை ஆகியவையும் சர்வாதிகாரிகள் உருவாகுவதற்கு காரணம். வரலாற்றில் கொடூரமான ஆட்சியாளர்களை மக்களேதான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள் என்பது நகைமுரணாக தோன்றலாம். ஆனால் ஜனநாயகம் இப்படித்தான் இயங்குகிறது.



சீரியல் கொலைகாரர்கள் என்பது எப்போதும் ஊடகங்களுக்கு தனி கலாசாரம் போல, சுவாரசியமான விஷயமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. 1980 முதல் மேற்கு நாடுகளில் தொடர் கொலைகாரர்கள் பற்றி ஏராளமாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்துள்ளது. ஒருவகையில் இது சமூகத்தில் அறம் சார்ந்த வீழ்ச்சியின் அடையாளமாகவும் வகைபடுத்தலாம்.


கொலைக்குற்றம் செய்தவர்கள் பற்றிய தகவல்கள் வினோதமான வழியில் ஊதப்பட்டு பெரிதாக்கப்பட்டன. வரலாறு முழுவதுமே இதுபோன்ற குற்றங்களும் அவை தொடர்பான செய்திகளும் மக்களால் விரும்பப்பட்டு வந்துள்ளன என்றார் குற்றம் தொடர்பாக நூல்களை எழுதிய நூலாசிரியர் ஜே ராபர்ட் நாஷ். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து மக்களுக்கு ஜேக் ஷெப்பர்ட், ஜோனாதன் வைல்ட், கலோனல் பிளட் ஆகிய குற்றவாளிகள் பற்றி அதிக தகவல்கள் தெரியவில்லை. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பத்திரிகைகள் ஜேக் தி ரிப்பர் பற்றி சிறு செய்திகளை எழுத தொடங்கினர். பிறகுதான், பில்லி தி கிட், ஜான் வெஸ்லி ஹர்டின் ஆகியோரைப் பற்றியும் அனைவரு்ம் பேசத் தொடங்கினர். இவர்கள் நாட்டுப்புறத்தில் நாயகர்களாக பார்க்கப்பட்டனர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் பத்திரிகைகளின் எழுத்தில் கொடூர கொலைகாரர்களான போனி, கிளைடு, பிரெட்டி பாய் பிளைடு, ஜான் டில்லிங்கர் ஆகியோரை பெரும்பான்மை மக்கள் ராபின் ஹூட்டுகளாகவே பார்த்தனர். ஒருவகையில் இந்த வகை எழுத்துகள் அக்காலகட்ட மன அழுத்தத்தை குறைத்திருக்கலாம்.


எந்த விதிகளுக்கும் உட்படாமல் பிறரை வதைத்து கொலை செய்துவிட்டு அதுபற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாத குற்றவாளிகளை படித்த மக்கள் எப்படி நம்பினார்கள், அவர்களின் செயல்களில் நியாயத்தை பார்த்தார்கள் என்பது உளவியல் ரீதியான கேள்வி. காலகட்டம் கடந்தாலும் ஆய்வுசெய்யவேண்டிய சமாச்சாரம் இது. சைக்கோ கொலைகாரர்களின் மீதான பாசம் இதோடு நின்றுவிடவில்லை. கொலைகாரர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்கள் வாழ்ந்த இடங்களில் சுற்றுலா என நடைபெற்ற குற்றங்களை கூட வித்தியாசமாக அணுகிய மக்கள் மேற்குலகினர். ஒருவகையில் வரலாற்றில் ஆவணப்படுத்துதல் என்பதை முதலில் இருந்தே செய்து வந்தது இந்த விவகாரத்திலும் அவர்களுக்கு உதவியது எனலாம்.


இந்தியாவில் ராமன் ராகவ் என தொடர் கொலைகளைப் பற்றி படம் எடுப்பதை வெளிநாடுகளில் 1953ஆம ஆண்டிலேயே தொடங்கிவிட்டனர். ஒருவகையில் நடைபெற்ற கொலைகளை வேடிக்கையான பொழுதுபோக்காக மாற்றியது. மக்கள் கொடூரமான கொலைகாரர்களை திரையில் பார்க்க விரும்பினார்கள். இப்படித்தான் கொடூரமான கொலைகார்களை பற்றிய படம் எடுப்பது தொடங்கியது. பின்னர், கொடூரமான குற்றவாளிகளை பொதுஇடத்தில் தூக்கிலிடுவது என்பது தொடங்கியது. ட்ரூயிசம் எனும் பதமாக இதனை தத்துவியலாளர் எட்மண்ட் பர்க் குறிப்பிட்டார்.




குற்றக்கலை!


குற்றம் செய்வது என்பது கலை என்ற அர்த்தத்தில் இதனை சொல்லவில்லை. குற்றத்தைப் பற்றி கலைஞர்கள் வரையும் ஓவியங்கள் அல்லது தொடர் கொலைகாரர்கள், குற்றவாளிகள் வரைந்த ஓவியங்கள் என்று கூறலாம். இந்த வகை ஓவியங்களை அனைத்துமே மக்களிடையே புகழ்பெற்றன அல்லது சர்ச்சை ஏற்படுத்தின என்று கூறலா்ம்.


1997இல் சென்சேஷன் என்ற பெயரில் ஓவியங்களின் கண்காட்சி நடைபெற்றது. அதில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியக்கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் இடம்பெற்ற படங்கள் அங்கு கடுமையான விமர்சனங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தின. நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் அருங்காட்சியகத்தில் கன்னிமேரியை யானை சாணத்துடன் ஓவியர் கிறிஸ் ஓஃபிலி வரைந்தார். இதனை மேயர் ரூடோல்ப் ஜியுலியானி வெளிப்படையாகவே தவறு என கண்டித்துப் பேசினார். இப்படி கொலைசெய்தவர்களைப் பற்றிய ஆர்வம் மக்களுக்கு அதிகரித்துக்கொண்டே போனது, ஒருகட்டத்தில் இப்படிப்பட்ட கொலைகார ர்களின் பல்வேறு பொருட்களை ஏலம் விட்டால் அதனை விலைக்கு வாங்கி சேமிக்குமளவு ஆர்வம் கொண்டவர்களாக மக்கள் மாறினர். இதற்கு காரணம் மக்களின் உளவியல் என்றுதான் கூறவேண்டும்.


சைக்கோ கொலைகார ர்களைப் பொறுத்தவரை இந்த நாட்டில் அதிகம் என்று கூறுவது சரியாக இருக்காது. ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட ஆட்கள் இப்படி உளவியல் சார்ந்து தடுமாற்றம் கொண்டவர்களாக உருவாகிறார்கள். இப்படி இருந்தாலும் கூட அமெரிக்காவில் வெள்ளையர்கள் அதிகமாக இந்த வரிசையில் இடம்பெறுகிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்கர்கள் உள்ளனர். ஆவணப்படுத்துதல் சரியாக இருந்தால் இன வாரியாக யார் அதிக குற்றங்கள், கொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும். அமெரிக்காவில் எழுபது , எண்பதுகளில் கிரேசி, பண்டி, கெம்பர், ராமிரெஸ் ஆகியோரை தொடர் கொலைகாரர்கள் என்று அழைத்தனர். அப்படி அழைக்கும் அளவுக்கு தங்கள் இவர்கள் வளர்த்துக்கொண்டனர். இவர்களின் குணங்களை வரையறுப்பவர்கள் சமூகத்தோடு இணக்கமாக இல்லாதவர்கள். நிறைய மனிதர்களின் அன்பும் பாசமு்ம் இவர்களுக்கு இருக்காது. வயது இருபத்தைந்து முதல் முப்பதைந்து வயதுக்குள் இருக்கும். பெரும்பாலும் உறவுகளைத் தேடாமல் தனியாக இருப்பார்கள் சித்திரவதை, கற்பனை, தன்னை முன்னிலைப்படுத்துவது, கொலை என பல்வேறு விஷயங்களை செய்வதற்கான துடிப்புடன் அமைதியாக இருப்பார்கள். இவர்களில் சிலர் ஒரினச்சேர்க்கையாளர்களாக இருந்துள்ளனர். கொல்லப்படுபவர்களுக்கு ஆண், பெண் என அதிக பேதம் இருந்தது இல்லை.


குற்றசெயல்பாடுகளில் ஈடுபட உணர்ச்சிகரமான மனதும், இளமைக்கால சிக்கல்களில் தாக்குண்ட வேதனையும் தொடர் கொலைகாரர்களுக்கு இருக்கும். அதேசமயம் எளிதாக காவல்துறையில் தடயங்களை விட்டு மாட்டிக்கொள்ளும் முட்டாள்கள் கிடையாது. சராசரிக்கும் கூடுதலாக புத்தி உண்டு என்பதால் நெருக்கமாக பின்தொடர்ந்தால் மட்டுமே பிடிக்க முடியும்.


1984ஆம் ஆண்டு உலக தடய அறிவியல் சங்கம் மாநாடு ஒன்றை நடத்தியது. இதில் எப்பிஐ உதவியுடன் சிறையில் உள்ள 30க்கும் மேற்பட்ட தொடர் கொலைகார ர்களை ஆய்வு செய்து அவர்களின் குணங்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் உள்ள தொடர் கொலைகாரர்களின் குணங்கள் இவைதான்.


1. தனியாக இருக்கும் மனிதர்கள்


2. ஸ்மார்ட்டான ஐக்யூ திறன் கொண்டவர்கள்


3. புத்திசாலித்தனம் இருந்தாலும் பள்ளியில் மோசமான மதிப்பெண்களை எடுத்திருப்பார்கள். இதனால் திறனற்ற பணியாளர்களாக வேலை செய்துகொண்டிருப்பார்கள்.


4. வறுமையில் உள்ள வீட்டில் பிறந்து வளர்ந்திருப்பார்கள். சிறுவயதில் தந்தை பிரிந்து சென்றுவிட அம்மாவின் ஆதிக்கத்தில் பிள்ளைகள் வளர்ந்திருப்பார்கள்.


5. குடும்பத்தில் குடிநோய் பாதிப்பு, உளவியல் ரீதியான பிரச்னை, குற்றங்களுக்கான குணம் காணப்படும்.



6. குழந்தையாக சிறுவனாக இருக்கும்போது உளவியல்ரீதியாக உடல்ரீதியாக பிறரால் தாக்கப்பட்டிருப்பார்கள். இதனால் அவர்களுத மனதில் அவமானப்படுத்தப்பட்ட உணர்வும், இயலாமை உணர்வும் இருக்கும்.


7. கைவிட்ட காணாமல் போன தண்டனை கொடுத்த தந்தை மீது கோபம் இருக்கும். இதன் காரணமாக அம்மாவால் வழிநடத்தப்படும் பிள்ளைகள், உளவியல் ரீதியான பாதிப்பைக் கொண்டிருப்பார்கள்.


8. குழந்தையாக மனதில் ஏற்பட்ட உளவியல் பாதிப்பு, கல்வி நிறுவனங்களில் சிறுவர்களாக இருக்கும் ஏற்படும் அனுபவங்கள் பிற்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


9. தன்னையும் வெறுப்பதோடு உலகத்தையே வெறுக்கும் நிலைக்கு செல்வார்கள். சிறுயவதில் தற்கொலைகாகன முயற்சிகளையும் செய்வார்கள்.


10. பாலுறவு விவகாரத்தில் வன்முறையான படங்களையே தேர்ந்தெடுப்பார்கள். பிறர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பது, சித்திரவதை முறை உடலுறவு ஆகியவற்றை அதிகம் விரும்புவார்கள்.


அதிகம் பழகாதவர்களை, பேசாதவர்களை சைக்கோ என சிலர் வேடிக்கையாக வினயமாக கிண்டல் செய்வதுண்டு. சைக்கோபாத் என்று அழைக்கப்படுபவர்கள் பிறரை விட புத்திசாலிகளாகவே இருப்பார்கள். ஆனால் வெளியில் ரோஜாவாக இருந்தாலும் உள்ளுக்குள் உறுமும் முகம் இருக்கும். இவர்களால் காதல், அன்பு, பாசம் என எதையும் வெளித்தர முடியாது. ஆனால் பிறரிடமிருந்து இதனை எதிர்பார்ப்பதோடு தன்னைத்தானே மன்னிக்ககவும் செய்வார்கள். ஆனால் பிறருக்கு எந்த மன்னிப்பும் கிடையாது.


சுயநலம், ஈகோ, தீயஎண்ணம் கொண்டவர்கள் என சைக்கோபாத்களை குறிப்பிடலாம். அதோடு இவர்கள் சித்திரவதை, வல்லுறவு, கொலை என பல்வேறு விஷயங்களை எப்படி செய்வது என கனவுகொண்டிருப்பார்கள் என குற்றவியல் வல்லுநர் எட்வர்டு குளோவர் தனது தி ரூட் ஆஃப் கிரைம் நூலில் கூறியுள்ளார்.


எப்படி இவர்களை அடையாளம் காண்பது? எளிமையானதுதான். எல்லோரும் பயப்படும் சூழலில் வியர்த்து கொட்டி நடுங்கிக்கொண்டிருக்கும்பது சைக்கோபாத் நபர்கள் குறும்பு புன்னகையுடன் சூழலை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஜெர்மன் உளவியலாளர் கோச், 1891ஆம்ஆண்டு சைக்கோபாத் என்ற வார்த்தையை வெகுஜன மக்களின் புழக்கத்திற்கு கொண்டு வந்தார். ஆனால் இதற்கு முன்னர் இந்த வடிவத்தை பில்லி பட் என்ற நாவலில் அமெரிக்க எழுத்தாளர் ஹெர்மன் மெல்வில்லே உருவாக்கிவிட்டார். அதில் வரும் ஜான் என்ற பாத்திரம் வெளியே நட்பாகவும் உள்ளே உருமும் கோபமும் கொண்ட தீயசக்தி பாத்திரம். சைக்கோபாத் என்ற வார்த்தையை நேரடியாக கூறாதபோதும், இயற்கையில் தீமை கொண்டவன் என்று அன்றைய இலக்கியத்தை ஒத்து அப்பாத்திரத்தை வரையறுத்தார். எனவே இந்த வகை குணம் என்பது அன்றைக்கு புதிதல்ல.



அறத்தின் வீழ்ச்சி


தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரை செய்யும் கொலைகள் அவர்களுக்கு மகிழ்ச்சி தருபவை. அந்த அனுபவத்தை மீண்டும் செய்யவே விரும்புவார்கள். காமத்திற்காக உயிராற்றலை செலவிட்டு நான் எண்ணைத்தை அறுத்து சந்தோஷப்படுவது போன்றதுதான். சைக்கோட்டிக்ஸ் என்பதை ஒருவர் அறிந்துகொள்ளவேண்டும். இந்த வகையில் ஒருவரின் குரல் காதில் கேட்பது, உருவங்கள் தெரிவது என கூறலாம். ஸிஸோபெரெனியா, பாரனோயா ஆகியவற்றை இப்படி சொல்லலாம். இவர்களுக்கு செய்யும் குற்றங்களின் பின்விளைவுகள் தெரியாது.


vincent kabo


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்