சடலங்களை மறைக்க சீரியல் கொலைகாரர்கள் மெனக்கெடுகிறார்களா?

 

 

 

 

 

 Skull And Crossbones, Skull, Weird, Bone, Surreal

 

 

சித்திரவதை


தொடர் மற்றும் சைக்கோ கொலைகார ர்களை மோசமானவர்கள் என்று எப்படி பிரிப்பது, இதற்கு பலரும் பல்வேறு வித எடுத்துக்காட்டுகளை கூறுவார்கள். ஆனால் எளிதான ஒன்று யார் உங்களையும், உங்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களை கொல்கிறார்களோ அவர்கள்தான் என்று கூறலாம். ஒரு கொலைகாரர் எந்தளவு மோசமானவர் என்பதை அவர் செய்யும் சித்திரவதையை வைத்து முடிவு செய்யலாம். இந்த வகையில் டெப்ரி டாமர், அனைத்து குற்றவாளிகளுக்கும் முன்னோடியான ஆள். இவர், தான் கொல்லும் ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பிறகு தலையில் ட்ரில்லிங் மெஷி்ன் வைத்து துளையிடுவார். பிறகு அமிலங்களை எடுத்து உள்ளே ஊற்றுவார். இதனால் பலரும் மயக்கத்தில் இருக்கும்போது, இறந்துபோனார்கள். எதற்கு இப்படி சித்திரவதை செய்தீர்கள் என்று விசாரித்தபோது, நான் செய்யும் விஷயங்களை வலியில்லாமல் செய்ய நினைத்தேன் என பேட்டி கொடுத்தார் டாமர்.


பிரான்சில் குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்ற கில்லெ்ஸ் டி ரைஸ், பதினைந்தாம் நூற்றாண்டில் முக்கியமான கொலையாளி. இதற்கு அடுத்து ஆல்பர்ட் பிஷ் உள்ளே வருகிறார். இ்வர் சிறுவர்களை பிடித்து வந்து சித்திரவதை செய்து ரத்தம் வெளியே வருமாறு சேதப்படுத்தி கொல்வார். எனக்கு பிறருக்கு வலி கொடுப்பது பிடிக்கும் அந்த வலியை எனக்கு நானே கொடுத்தும் அனுபவிப்பேன். பிறரை காயப்படுத்தும் அனைத்து விஷயங்களையும் நான் நேசித்தேன் என தைரியமாக பேசியவர் பிஷ். இவர் கிரேஸ் என்ற சிறுமியைக் கொன்று சமைத்து தின்றுவிட்டு அந்த அனுபவத்தை சிறுமியின் அம்மாவுக்கு கடிதம் எழுதி விவரித்த வினோதமான மனம் கொண்டவர்.


இதுபற்றி மேலும் அறிய கில்லிங் பார் ஸ்போர்ட் இன்சைட் தி மைண்ட்ஸ் ஆப் சீரியல் கில்லர்ஸ் என்ற நூலை வாங்கி படிக்கலாம். இதில் குறிப்பிட்டபடி, தொடர் கொலைகார ர் ஒருவரை அடித்து, வல்லுறவு செய்து, கழுத்தை நெரித்து அல்லது வெட்டிக் கொலை செய்கிறார். ஆனால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட கொலைகார ர்கள் கொலை செய்யும் விதம் குரூரமாக இருக்கும். ஒரு பெண்ணை பாலியல் ரீதியான பல வாரங்கள், மாதங்கள் வைத்து துன்புறுத்தி அவர்களே தன்னைக் கொன்றுவிடு என இறைஞ்சும்படி செய்வார்கள். அவர்கள் வலியில் எந்தளவு அலறுகிறார்களோ அந்தளவு இன்பத்தை கொலைகார ர்கள் மனதளவில் பெறுகிறார்கள். பல்வேறு கைவிலங்குகள், மார்புகாம்புகளுக்கான கொக்கி, கிளிப்புளள், பிளேடுகள், கத்தி, ஆணுறுப்பு பொம்மைகள் என பெரிய கருவிகளின் பட்டியலையே வைத்திருப்பார்கள். இதில் மாறுபடும் விஷயம், கொலைகாரர்கள் ஓரினச்சேர்கையாளர்களையும் மேற்சொன்னபடி வேய்ன் கேசி, டீன் கோர்ல் ஆகியோர் கொன்றனர். இதில், பெண்களும் அடக்கம். ஆனால் பாலியல் ரீதியான தாக்குதல் என்பது குறைவாகவே நடந்துள்ளது. தம்பதிகளாக கொலை செய்வது, விஷ கொலைகாரர்கள் ஆகியோரை தவிர பிறர் இவ்வகை சித்திரவதைகளில் ஈடுபடவில்லை. ஆர்சனிக் கொலைகளை மட்டுமே பெண்களின் குரூரமான கொலைகளுக்கு உதாரணமாக கொள்ளமுடியும்.


பரிசு


டெக்ஸ் வில்லர் கதைகளில் பழங்குடிகள் பிற குடிகளை வெற்றிகொண்டதன் அடையாளமாக தலைவனது மண்டைத்தொலியை உரித்து வருவார்கள். இதுதான் அவர்களது வெற்றிக்கான அடையாளம். தோற்றவர்களுக்கு பெரும் அவமானமும் கூட. எடி கெயின், இந்த வகையில் பலருக்கும் ரோல்மாடலாக இருந்தார். இவரது பண்ணை வீட்டில் ஏராளமான மனித முகங்கள் பதப்படுத்தப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன. இவற்றை பார்வையிட்ட சிறுவர்கள், எட்டியை யார் இவர்கள் என்று கேட்டு மிரண்டனர். எட்டி அப்போது பதில் சொல்லி சமாளித்தாலும் அந்த மனித முகங்களுக்கு சொந்தக்காரர்கள் அவரது வீட்டுச்சுவரில் பதப்படுத்தப்பட்டு புதைபப்பட்டிருந்தனர். எட்டி கெய்னின் பக்கத்து வீட்டுக்கார ர்கள் அவரது வீட்டிலிருந்த தலைகளை ராணுவத்தில் இருந்து கொண்டு வந்திருப்பதாக நினைத்தனர். பின்னர்தான் அவர் கொலைசெய்து தலையை வெட்டி சுவற்றில் மாட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. அன்றைக்கு அவர் வாழ்ந்த பகுதியில் தோற்றவர்களின் உடல்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டுவருவது இயல்பானதாக பார்க்கப்பட்டது.


மனித வரலாற்றில் கவனமாக பார்த்தால் சண்டையில் தோற்றுப்போனவர்களின் கண், காது, உடல் பகுதிகள், உடை என ஏதேனும் ஒன்றை வெட்டிக் கொன்று வருவது இயல்பானதாகவே இருந்தது. குறிப்பிட்ட ஒருவரை வீழ்த்திவிட்டேன் என்று சொல்லுவதற்கு ஏதேனும் ஆதாரம் வேண்டுமே? நவீனகாலத்தில் கொலைகாரர்கள் தாங்கள் கொலை செய்பவர்களின் பொருட்களை திருடிக்கொண்டு வந்து கொன்றவர்களின் நினைவுகளைப் போற்றுகிறார்கள். புளோரிடாவைச் சேர்ந்த ஜெரார்ட், பாஸ்போர்ட், முகவரி புத்தகம், ஓட்டுநர் உரிமம், கவிதை நூல், தங்கப்பற்கள் என நிறைய சேர்த்து வைத்திருந்தார். ஹாடன் கிளார்க் என்ற மாற்றுப்பாலின கொலைகாரர், ஏராளமான பெண்களை கொன்றார். அவர்களின் நகைகளை கொலைகளின் நினைவாக சேகரித்து வைத்திருந்தார். பெண்களின் தலையணைகளில் தனது கைரேகைகளை பதித்து பின்னர் காவல்துறையினரிடம் கிளார்க் மாட்டிக்கொண்டார்.


தொடர் கொலைகாரர்கள் தங்களுக்கென வினோதமான விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர்களின் உள்ளாடை, ஷூக்கள், மார்பகங்கள், பாலுறுப்புகளை வெட்டி பாதுகாப்பதும் இதில் அடங்கும். எடி கெயின், தனது ஷூக்கள் வைக்கும் பெட்டி முழுக்க பெண்களின் யோனிகளை வெட்டி சேகரித்து வைத்திருந்தார். ராபின் கெச்ட் என்பவர், தான் கொலைசெய்த பெண்களின் மார்பகங்களை வெட்டி வைத்திருந்தார். ஜெர்ரி ப்ரூடோஸ் பெண்களின் இடது கால்களை மட்டும் வெட்டி ப்ரீஸரில் வைத்திருந்தார். கூடுதலாக பெண்களிடமிருந்து திருடிய ஏராளமான ஹைஹீல்ஸ்களை வைத்திருந்தார். இத்தோடு முக்கியமான கொலைகாரர்களின் செயல்களை கூறவில்லையே? தாங்கள் செய்யும் கொலைகளை மறக்காமல் அழகான புகைப்படங்களாக எடுத்து வைப்பார்கள். அதனை திரும்ப திரும்ப பார்த்து சந்தோஷப்படுவது அவர்களுக்கு பிடிக்கும். மேலும் கொல்லப்பட்டவர்களின் உடல் எலும்புகளை தினசரி பயன்பாட்டு பொருளாக அல்லது அழகான கலைப்பொருளாக மாற்றுவார்கள்.


உடலை மறைப்பது


தொடர் கொலைகார ர்கள், சைக்கோக்கள் பெரும்பாலும் அதிக புத்திசாலித்தனத்தை கொலைகளை மறைப்பதில் காட்டுவதில்லை. இதில் விதிவிலக்காக சிலர் மட்டுமே தங்களது புத்திசாலித்தனத்தை வைத்து போலீசாருக்கு தண்ணி காட்டி முடிஞ்சா இவனப்பிடி என சவால் விடுவார்கள். இதில் எப்போது வெற்றி பெறுவது போலீசார்தான் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை. பெரும்பாலும் கொலைகளை ஆர்வமாக செய்பவர்கள், உடலை அக்குவேறு ஆணிவேராக பிரித்து தூக்கி எறியும்போது பெரிதாக கவலை கொள்வதில்லை. மரங்கள் சூழ்ந்த இடங்களில் அல்லது பாலைவனங்களிலோ, ஆற்றிலோ தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.


ஜோயல் ரிப்கின் என்பவர், விலைமாதுக்களை மட்டுமே குறிவைத்து கொன்று குவித்த ஆள். இவர், பதினேழு பெண்களை கொன்றார். இந்த பெண்களை கொன்ற காலகட்டம் தொண்ணூறுகளில்தான். இவர்களை எப்படி கொன்று புதைத்தீர்கள் என்று கேட்டபோது, வான்கோழியை எப்படி அறுத்து பழகினேனோ அதன்படிதான் அவர்களை உடல் உறுப்புகளை வெட்டினேன் என தைரியமாக போலீசாரிடம் கூறிய சிகாமணி இவர்.

சிக்கிய பெண்களின் தலையை வெட்டி பெயின் டப்பா, எண்ணெய் ட்ரம்புகள் ஆகியவற்றில் அடைத்து தூக்கியெறிவது இவரது ஸ்டைல். தனது அம்மாவுடன் வசித்து வந்ததால் அவருக்கு தெரியாமல் கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை மறைக்க முனைந்திருக்கிறார். அனைவருக்கும் இதுபோன்ற சூழ்நிலை இருக்கும் என்று கூறமுடியாது. ஆப்பிரிக்க அமெரிக்கரான கெண்டல் தான் கொலை செய்த எட்டு பெண்களை தனது வீட்டின் பரணில் வைத்திருந்தார். உடல் அழுகினால் கெட்ட வாடை அடிக்குமே என்றால் அதையும் பிறர் ஏற்கும்படி சொல்லி சமாளித்திருக்கிறார். காவல்துறையினர் வந்து சோதனையிட்டு கெண்டலைக் கண்டுபிடிக்கும் வரை அவரது குடும்பத்தினர், அவரது நடவடிக்கைகளை சந்தேகப்படவே இல்லை. ஆனால் இதனை அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் யாருமே நம்பவில்லை. இதைப்போலவே இன்னுமொரு ஆள் இருந்தார். அவர்தான் கிரகாம். இவர், தான் கொன்ற ஏழு பெண்களின் உடல்களை தனது அபார்ட்மெண்டில் வைத்திருந்தார். உடல் அழுகி வீசும் வாடையை அருகிலிருந்தவர்கள் சமாளிக்க முடியாமல் காவல்துறைக்கு மிஸ்டுகால் கொடுத்து சொல்ல, அவர்களும் சோதித்தனர். உண்மையைக் கண்டுபிடித்தனர். கொலை செய்த உடல்களை ஏன் இப்படி வீட்டில் வைத்திருந்தாய் என விசாரித்தபோது, கிரகாமின் நேர்மையான பதில் யாரையும் அசர வைக்க கூடியது. உடல்களை எங்கே வைப்பது என்று தெரியவில்லை என்று ஒரே போடாக போட்டார். கிரிஸ்டி என்ற கொலைகாரர், சமையலறை கப் போர்டில் மூன்று பெண்களின் பிணங்களை மறைத்து வைத்திருந்தார். அங்கு புதிதாக வந்தவர்கள் வீட்டை புதுப்பிக்கு்ம்போது இந்த பகீர் உண்மை வெளியே வந்தது. இதைப்போலவே கட்டுமான கலைஞராக இருந்த வெஸ்ட் என்பவர், தனது சொந்த மகள் உட்பட பலரை தோட்டத்தில் கொன்று புதைத்திருந்தார். மேலும் இவர் தனது குழந்தைகளிடம் ஒழுக்கமாக நடந்துகொள்ளாவிட்டால் மூத்த மகளின் கதிதான் உங்களுக்கும் என்றே பகிரங்க மிரட்டல் விடுத்தார்.


திடீரென கொலை செய்து அதனை மறைக்கப் படாதபாடு படுபவர்கள் உண்டு என்றால் இதிலும் தீ்ர்க்கதரிசிகள் உண்டுதான் என்பதை மறக்க கூடாது. கொலை செய்வதற்காகவே பண்ணை வீடு, காரேஜ், தனி சித்திரவதை அறைகளை உருவாக்கி தங்களது உளவியல் பிரச்னைகளை மேலும் வளர்த்துக்கொண்ட கொலைகார ர்கள் அநேகம் பேர் உண்டு. சார்லஸ் என்ஜி, லியோனார்ட் லேக், பெல்லே கின்னஸ் ஆகியோர் இப்படி தங்களின் மனதின் குரலைக் கேட்டு அதன்படியே நடந்தவர்கள். கொலை செய்யப்படவேண்டியவர்களை தீவு போன்ற பகுதிக்கு கூட்டிச்சென்று வல்லுறவு செய்து வேண்டுமளவு சித்திரவதை செய்துகொன்றுவிட்டு உடலை அப்படியே வெயில் காய போட்டு அழுக செய்துவிடுகிறவர்களும் உண்டு. குகைகளில் உடலை புதைத்துவிட்டு அமைதியாக வந்து வாழ்க்கையை வாழ்பவர்களும் அதிகம்.


மூடப்பட்டுவிட்ட தொழில்சாலைப்பகுதி, மக்கள் நடமாட்டமே இல்லாத இடங்கள் என பார்த்துவைத்து அங்கு பிணங்களைக் கொண்டு சென்றுபோட்டுவிட்டு வந்து அமைதியாக வரிகட்டும் கண்ணியமான குடிமகன் வேஷமும் பலர் போட்டுள்ளனர். கொலைதான் செய்கிறோம். உடல்களை எதற்கு மறைக்கவேண்டும்? மக்கள் பார்த்து மகிழட்டுமே என்று அனைவருக்கும் இன்பம் கிடைக்கட்டுமே என உடல்களை நெடுஞ்சாலையில் போட்டுச்செல்பவர்களும் உண்டு. வினோதமான போஸில் உடல் அறுபட்டு, கோரமாக கிடப்பதை பார்க்கும் மக்கள் பீதியில் அலறியபடி ஓடுவார்கள். அதைப் பார்த்து ரசிப்பதுதான் தொடர் மற்றும் சைக்கோ கொலைகாரர்களின் ஆசை. இன்னும் சிலர் எப்படி கொன்றார்கள் என்ற தடமே இல்லாதபடி கொலைகளை செய்வார்கள். ஹென்றி லாண்ட்ரூ என்பவர், உலகப்போர் சமயத்தில் தனது பத்து மனைவிகளை கொன்றார். அவர்களை ்எப்படிக் கொன்றார் என்று காவல்துறைக்கே தெரியவில்லை. அவர் கொல்வதற்கென தனியாக பிரமாண்ட ஸ்டவ் ஒன்றை தயாரித்து வைத்திருந்தார். மருத்துவர் மார்செல் பெடியோட் என்பவர், யூதர்களைக் கொல்வதற்கென தனி மின்மயானத்தை தனது வீட்டில் கீழே உருவாக்கி வைத்திருந்தார்.


கொன்றவர்களை வீட்டின் கொல்லைப்புறத்தில் நெருப்பை வைத்து எரிப்பது, இறைச்சியாக பாவித்து மாடு, பன்றிக்கறி என விற்பது, உடல்களை முதலைக்கு எறிவது என பல்வேறுவிதமாக மனித உடல்களை கொலைகாரர்கள் வெளியே வராமல் மறைத்துள்ளனர். இதுபற்றி நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. எழுத்தாளர் பிரையன் லேன் எழுதிய நூலை கொலைகார ர்கள் உடலை மறைக்கும் விதம் பற்றி ஆழமாக அறிய வாசிக்கலாம். அகதா கிறிஸ்டி எழுதிய நூல்களை கண்ணதாசன் பதிப்பகத்தில் வாங்கி படித்திருப்பவர்களுக்கு, அவரின் முக்கியமான தடயவியல் வல்லுநரான ஹெர்குல் பொய்ரட் பற்றி தெரிந்திருக்கும். இவர், கொலை செய்பவர்களின் குணங்களை குற்றம் நடந்த இடத்தில் பார்வையிட்டு அவன் எப்படி இருப்பான் என்று எனக்குத் தெரியும் என்று கூறுவார். நாவலில் இப்படி அவர் கூறுவது புகழ்பெற்ற வசனமும் கூட. குற்ற ஆவணவியலாளர் இப்படித்தான் உருவாகிறார். இன்று முன்னர் இருந்ததை விட நுட்பமாக கொலை நடந்த இடத்தை தொழில்நுட்பம் மூலம் பார்வையிடலாம். அறியலாம்.


எப்பிஐயில் கொலைகார ர்களைப் பற்றிய ஆய்வுகளைச் செய்து வந்த டக்ளஸ், ரெஸ்லர் ஆகியோர் இந்த வகையில் முக்கியமானவர்கள். இவர்களின் ஆய்வுகளால் ஒருவரின் கொலை பாணி, கொலை செய்யப்படுபவர்கள், தாக்கப்படும் முறை, டிஎன்ஏ ஆகியவற்றை வைத்தே எளிதாக கொலையாளியை பிடித்துவிட முடியும். இந்த வகையில் அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் ஏ ப்ரஸ்ஸ்ல் என்பவர் இத்துறையில் முன்னோடியாக கருதப்படுகிறார். அமெரிக்காவின் எப்பிஐ, சைக்கோ கொலைகார ர்கள் பற்றிய தனி அமைப்பை நிறுவி, உள்ளூர் காவல்துறையிலிருந்து கொலை வழக்குகளைப் பற்றிய தகவல்களை சேகரித்து ஆவணக்காப்பகத்தை பராமரித்து வருகிறது. இதனால் குற்றங்கள் திரும்ப திரும்ப நடக்கும்போது அதனை உடனே அடையாளம் கண்டு தடுக்க முடிகிறது.

writer v


pixabay













கருத்துகள்

பிரபலமான இடுகைகள்