பெருந்தொற்றுகாலத்தை எதிர்கொள்ள முடியாத இளைஞர்கள் வீடியோகேமில் மூழ்கிவிடுகின்றனர்!

 

 

 

 

 

 Human, Young People, Face, Young Person, Man, Male

 

 

 

ஜெனிபர் கொலரி

குழந்தை வளர்ப்பு வல்லுநர்


பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் பலரும் மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரே?


குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இதில் பல்வேறு விதமான நம்பிக்கைகள், பிளவுகள் உள்ளன. 1960ஆம் ஆண்டில் உங்கள் குழந்தையை அழ விடுங்கள் என்று கோட்பாடு ஆட்சி செலுத்தியது. குடும்பத்தில் குழந்தை மீது அதிகாரம் செலுத்துவது, சுதந்திரமாக விடுவது என்பது பல்வேறு கட்டங்களில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இப்போது குழந்தைகளுக்கு காலகட்ட நெருக்கடி காரணமாக பதற்றம், மன அழுத்தம், ஏடிஹெச்டி தொடர்பான அறிகுறிகள் உள்ளன.


சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களைப் பேசும் இளைஞர்கள் எளிதில் பதற்றம், மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர். இவர்கள் தங்கள் நண்பர்களிடமும், பிறரிடமும் கூட இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அதற்கு சாப்பிடும் மருந்துகளைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் விரைவில் நம்பிக்கையற்று போய்விடுகிறார்கள். இந்த வகையில் யாரும் நம்பிக்கை பெறுவது கடிமானதுதான்.


இந்த நேரத்தில் அவர்கள் பெற்றோர்கள், பள்ளியில் உள்ள ஆலோசகர்களிடம் பேசலாம். இது ஒருவகையில் அவர்கள் மனதில் உள்ள சுமையைக் குறைக்கலாம்.


இளைஞர்களிடம் உள்ளதாக நீங்கள் கருதும் அழுத்தம், அதன் முடிவுகள் என்ன?


இன்றுள்ள இளைஞர்கள் ஸ்மார்ட் ஆனவர்கள். இவர்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று பெற்றோர்கள் சுதந்திரம் கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் அதனைப் பயன்படுத்தி சில போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் தான் செய்வதைப்பற்றிய அடிப்படையான விஷயங்களைப் பற்றி புரிந்துகொள்வதில்லை. இதனால்தான் வாழ்க்கை என்பதை அவர்கள் முழுமையாக வாழத் தொடங்கும்போது, உறவுகள் முறிவு, காதல் தோல்வி, குழுவாக இயங்க முடியாத சிக்கல்கள் ஆகியவை ஏற்படுகின்றன. வாழ்க்கையின் பிற்பகுதியில் இவர்களுக்கு வேலை இல்லாமல் எங்கும் செல்லமுடியாமல் மனத்தளவில் தடை உருவாகி அப்படியதே தேங்கி விடுகின்றனர்.


பெருந்தொற்றுக் காலம் இந்த சூழலை மாற்றியுள்ளதா?


பள்ளிகள் செல்லமுடியாத இளைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடம் பேசும்போது, அவர்களின் ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கேமராவைக் கூட தங்களை நோக்கி திருப்பி வைக்க தயாராக இல்லை என்று கூறினர். அவர்கள் தங்களை பிறர் பார்க்க விரும்பவில்லை. ஆசிரியர்களுக்கு இது தலைவலி என்றாலும் மாணவர்கள் தங்களை ஒரே் மேடையில் பார்க்கும்படி வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுக்கு மனத்தளவில் பதற்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட இந்த சூழ்நிலையில் அவர்களைப் பெற்றோர்கள் பார்ப்பது கடினமாகவே இருக்கும். தங்களால் கட்டுப்படுத்த முடிந்த வீடியோகேம் சூழலில் மாணவர்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். இது அவர்களுக்கு நிம்மதியைத் தருகிறது. விளையாட்டுகளையும் நிஜ உலகுடன் பொருந்தும்படி வடிவமைப்பாளர்கள் வடிவமைப்பதால் தனியாக இருக்கும் இளைஞர்களுக்கு இது எளிதில் பொருந்திப்போகிறது.




இந்த சூழ்நிலையில் பெற்றோர் எப்படி தங்களின் குழ்ந்தைகளுக்கு உதவிகளைச் செய்வது?


ஏதாவது ஒரு நாள் காலையில் தங்கள் பிள்ளைகள் எழுந்து இயல்பான வாழ்க்கைக்கு வருவார்கள் என்று பெற்றோர் எதிர்பார்த்து காத்திருக்க முடியுமா?


நான் இதற்கு ஏதாவது தெரபியைத் தேர்ந்தெடுப்பேன். பல்வேறு திறன்களை கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியாளர் ஒருவரை இதற்காக தேர்ந்தெடுப்பது அவசியம். இதன்மூலம் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களுக்கான பிரச்னையிலிருந்து வெளியே வர முடியும். பெற்றோர் தங்களது வட்டத்தில் இல்லாத ஒருவரை பிள்ளைகளுக்கு ஏற்றவராக வழிகாட்டுதலை கொடுக்கும்படி செய்ய வைக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு தமக்கு ஏற்பட்டுள்ளது என்னவென்று தெரிவதில்லை. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஒருவர் கற்றுக்கொள்வது முக்கியம். அப்போதுதான் மன அழுத்தம், பதற்றம் போன்ற பெரும் பிரச்னைகளிலிருந்து ஒருவர் எளிதாக வெளியே வர முடியும்.



ரீடர்ஸ் டைஜெஸ்ட்


கிளாரே சிபோனி




கருத்துகள்