புதிய எழுத்தாளர்களை வரவேற்று வாய்ப்பளிக்கும் சுயபதிப்பு வலைத்தளங்கள்! - இங்கிட், வாட்பேட், கிரிட்டிக் சர்க்கிள், பிரதிலிபி
இலக்கிய தளத்தை சுயபதிப்பு வலைத்தளங்கள் மாற்றியமைத்துள்ளனவா?
இன்று ஒருவருக்கு எழுதும் ஆர்வமும் வேகமும் இருந்தால் போதும். அவர் இலக்கிய சன்னிதானங்களிடம் ஆசி பெற்று நூலை வெளியிடவேண்டிய அவசியம் இல்லை. ஏராளமான இணையத்தளங்கள் இதற்கெனவே உருவாகியுள்ளன. பல்வேறு மொழிகளிலும் எழுதும் ஆ்ர்வம் கொண்டவர்கள் இதில் பங்கேற்று எழுதி வருகின்றனர். நன்றாக எழுதும் திறன் கொண்டவர்களின் நூல்களை புகழ்பெற்ற பதிப்பகங்கள் வாங்கி பதிப்பித்து வருகின்றன. இதற்கு வலைத்தளங்களே களம் அமைத்துக் கொடுக்கின்றன.
அமெரிக்க எழுத்தாளர் அன்னா டாட் இப்படித்தான் எழுத தொடங்கினார். ஆப்டர் என்ற நாவலை தொடராக வாட் பேட் தளத்தில் எழுத தொடங்கினார். இந்த நாவல் ஒன் டைரக்ஷன் இசைக்குழுவை அடியொற்றியது. இந்த தொடர் வாசகர்களிடையே பெரும் புகழ்பெற்று 1.5 பில்லியன் வாசகர்களின் பார்வையைப் பெற்றது. பிறகு சைமன் ஸ்சஸ்டர் பதிப்பகத்தின் மூலமாக அச்சுப்பிரதியாகி 11 மில்லியன் பிரதிகளும் விற்றுள்ளது.
இணையம் இன்று அனைத்து இடங்களிலும் உள்ள மக்களை ஒன்றாக இணைத்துள்ளது. அவர்களின் வாசிப்பு பழக்கமும் முன்னேறி இணையத்திற்கு மாறியுள்ளது. இதற்கெனவே வாட்பேட், இங்க்கிட், ஸ்கிரிக்லர், கிரிட்டிக் சர்க்கிள் என ஏராளமான வலைத்தளங்கள் உருவாகியுள்ளன. இதில் வாசிக்கும் எழுதும் வாசகர்கள் என தனி வாசகர் வட்டாரமே உருவாகி வருகிறது.
2013ஆம் ஆண்டு ஸ்கிரிக்லர் வலைத்தளம் உருவானது. இதில் கதை, கவிதை, கட்டுரை, ஆரா்ய்ச்சி, உங்கள் ஐடியாக்கள் என அனைத்தையும் பதிவு செய்யலாம். 2003ஆம் ஆண்டு உருவான கிரிட்டிக் சர்க்கிள் என்ற வலைத்தளத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக கதைகள் உள்ளன. 3 ஆயிரம் வாசகர்கள் இதனை தொடர்ச்சியாக வாசிக்கின்றனர். இதனை வாசிப்பிற்கான சமூக வலைத்தளங்கள் என்று கூட ஒருவர் கூறலாம். இப்படி சுயபதிப்பு தளங்களில் எழுதும் எழுத்தாளர்களின் நூல்கள்தான் இபுக் விற்பனையில் 34 சதவீதம் பங்களிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும். இதில் தேவையில்லாத இடைத்தரகர்கள் இல்லாமல் படைப்பு வாசகர்களை சென்று சேருகிறது என்பதால் கிடைக்கும் வருமானமும் எழுத்தாளர்களுக்கு உதவுகிறது.
இங்கிட் வலைத்தளம் எழுத்தாளர்களுக்கு தேவையான களத்தை உருவாக்கி தருகிறது. இதில் குட்ரீட்ஸ் தளம் போலவே நூலுக்கு விமர்சனங்களை வழங்கலாம். மேலும் இதன் கலாட்டி எனும் ஆப்பைப் பயன்படுத்தி நூலை வாசிக்கலாம். இதன் பயனர்களுக்கு குறிப்பிட்ட நூலின் அத்தியாயங்களை தினம் ஒன்று என இலவசமாக வாசிக்க அனுமதிக்கிறது. இதில் நூல்களை பதிப்பித்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர்களுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது., மேலும் வாசகர்களின் ஆதரவைப் பெறும் எழுத்தாளர்களுக்கு நூல் பதிப்பிக்கப்படும் வாய்ப்பையும் இங்கிட் தளம் பெற்றுத் தருகிறது.
இஸ்ரேலைச் சேர்ந்த எழுத்தாளர் சபிர் எங்க்லார்ட். இவர் எழுதி சம்பாதித்த பணத்தில்தால் அமெரிக்காவில் கல்லூரி படித்துவருகிறார். இவரது நூல் மில்லினியம் வோல்வ்ஸ் இங்கிட்டில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. எழுத்தாளர்களுக்கான யூட்யூப் என்று அழைக்கப்படும் வாட்பேட் தனது எழுத்தாளர்கள் புகழ்பெற்று வளர்ந்தால் அவர்களுக்கான வியாபாரத்தில் 15 சதவீத்ததை தனது கட்டணமாக பெற்றுக்கொள்கிறது. இவர்களின் தளத்தில்தான் தி கிஸ்ஸிங் பூத் என்ற நாவல் முதலில் வெளியானது. இதனை எழுதிய ரீக்லெசிற்கு அப்போது பதினைந்து வயது. இந்த நூலைத்தான் பின்னர் நீங்கள் நெட்பிளிக்ஸில் படமாக எடுத்து பார்த்திருப்பீர்கள். வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற நாவல் என்பதால் டைம் இதழில் செல்வாக்கு பெற்ற இளைஞர்கள் பட்டியில் கூட ரீக்லெஸ் இடம்பெற்றார். வாட்பேடில் இப்போது 600 மில்லியன் கதைகள் உள்ளன. 80 மில்லியன் பயனர்கள் இதனை படித்து வருகின்றனர். மரபான முறையில் நூலை பதிப்பித்திருந்தால் எனக்கு இந்தளவு வரவேற்பு கிடைத்திருக்குமா என்று தெரியாது. ஆன்லைனில் படிப்பவர்கள் எனக்கு உடனடியாக பதில்களைக் கொடுத்தனர். எழுத்திற்கான பாராட்டுகள் என்ன எழுதுவதற்கான ஊக்கத்தை தந்தன என்று ரீக்லெஸ் கூறினார்.
அனதர் ஸ்டோரி ஆப் பேட் பாய்ஸ், தி டார்க் ஹீரோயின், ஸ்டைக்லர் சாகா ஆகிய நூல்கள் வாட்பேடில் வெளியாகிய பிறகு புகழ்பெற்ற பதிப்பு நிறுவனங்கள் ஆசிரியருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நூல்களை பதிப்பித்தன. இது ஒருவகையில் வாட்பேடிற்கும் எழுத்தாளர்களுக்கும் இருவருக்குமே வெற்றி என்ற நிலைதான். இந்தியர்கள் வாட்பேட்டில் தினமும் 37 நிமிடங்களை செலவு செய்கிறார்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிட், வாட்பேட் என்ற இரு தளங்களு்ம் எழுத்துக்காக அதிகம் விரும்பப்படுகின்றன. இதில் வாசகர்களிடம் வரவேற்பைப் பெறுவது என்ற வகையில் வாட்பேட் பல்வேறு கருத்துகளுக்கான இடமாக உள்ளது. இங்கிட்டைப் பொறுத்தவரை எழுத்தாளர்களின் எழுத்துகளை உடனே படிக்கலாம் என்ற வசதியைக் கொண்டுள்ளது என்று கருத்துகளை எழுத்தாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் உள்ள ஆன்லைன் எழுத்து தளத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதில் பாட்காஸ்ட் மற்றும் படக்கதைகளுக்கான வலைத்தளங்களும் உள்ளன.. பனிரெண்டு மொழிகளில் 30 லட்சம் கதைகள் இதில் உள்ளன. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான எழுத்தாளர்கள் இதில் பங்களிக்கின்றனர். இவர்களும் மாதம்தோறும் ஏராளமான போட்டிகளை நடத்தி வருகிறார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள். வாசகர்களின் வரவேற்பு பெற்ற எழுத்துகளை நூலாக அச்சிடவும் உதவிகளை செய்கிறார்கள்.
பினான்சியல் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக