திரைப்படங்களும் நூல்களும் குற்றவாளிகளை ஊக்குவிக்கிறதா?
கொடூரமான கற்பனைகள்!
1970இல் கில்லர் பிக்ஷன் என்ற பெயரில் வினோதமான கதைகள் வெளியாயின. இதனை ஹாரி க்ரூஸ் என்பவர் எழுதி வெளியிட்டார். இவர் புளோரிடாவில் துணை ஷெரீப்பாக இருந்த ஜெரார்டு ஜே ஸ்காஃபெர் என்பவரின் சித்திரவதை முறைகளை ஆராய்ந்து கதைகளாக எழுதினார். இவை அனைத்துமே படிக்க பெரும் மனதைரியம் வேண்டும். இளகிய மனம் படைத்தவர்கள் படித்தால் வா்ந்தியே எடுத்துவிடுவார்கள். அந்தளவு சித்திரவதை செய்யும் முறைகள் பொய்யா, நிஜமா, இப்படியெல்லாம் நடக்குமா என்று பயப்படும் அளவுக்கு கதைகள் எழுதப்பட்டிருந்தன. இவற்றைத் தொகுத்து எழுத எழுத்தாளருக்கு சோண்ட்ரா லண்டன் என்ற ஷெரீபின் முன்னாள் காதலி உதவினார்.
மோசமான புத்தகங்கள், படங்கள், வீடியோக்கள்
பதினெட்டாம் நூற்றாண்டில் அனைத்து மக்களுக்கும் வாங்கும் விலையில் ஓவியங்கள், படங்கள் அச்சிடப்பட்டு கிடைத்தன. அச்சு ஊடகங்களின் வளர்ச்சி என்று கூட இதனை கூறலாம். ஆனால் விமர்சகர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். அவர்கள், இப்படி படங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பது அவர்களின் ரசனையைக் கெடுக்கும். தவறான குற்றங்களை செய்பவர்களை ஊக்குவிக்கும் என்றும் கூறினர். 1872இல் ஜெஸ்ஸி பொமேராய் இரண்டு சிறுவர்களை கொலை செய்தார். உடனே அன்றைய விமர்சகர்கள் தவறான முறையில் வழிகாட்டிய நாவல்களை படித்து்த்துதான் சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினர். ஆனால் ஜெஸ்ஸி நூல்களை படிக்கும் பழக்கம் கொண்டிருந்தானா என்றே யாருக்கும் தெரியவில்லை. அவன் கொலைகளை செய்து சிறைக்கும் சென்றபிறகு அவனைப பற்றி இரண்டு நூல்கள் எழுதப்ப்பட்டுள்ளன. 1903இல் வெளியான தி கிரேட் டிரெயின் ராபரி என்ற படத்தின் மீதும் குற்றங்களை செய்வதற்கான ஊக்கம் தருவதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
உளவியல் குறைபாடுகள், கற்பனைகளால் ஊக்கம்பெற்றவர்கள் தங்கள் குற்றங்களை எப்படி தொடங்குவது என காத்திருப்பவர்களுக்கு நூல்கள், படங்கள், இசை உதவுகிறது என உளவியலாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் குற்றங்களை கற்பனை செய்து செய்பவர்களிடமிருந்துதான் ஊக்கம் பெற்று எழுத்தாளர்கள் குற்ற நாவல்களை எழுதுகிறார்கள். குற்ற நாவல்களை எழுதும் புத்தி இருப்பதால், எழுத்தாளர்களால் வழக்குளை புலனாய்வு செய்ய முடியாது. நாவல்களில் எழுத்தாளர்கள் தாங்களே முடிச்சு போட்டு குறிப்பிட்ட இடத்தில் அதனை அவிழ்க்கிறார்கள். ஆனால் நிஜத்தில் நடக்கும் குற்றசெயல்களில் குற்றவாளி எப்படி செயல்படுகிறார் என்பதை ஊகிப்பது கடினமானது.
குற்றங்களை பற்றிய நாவல்களை படிப்பது, மாத இதழ்களை வாசிப்பது மனதில் உள்ள குற்றம் தொடர்பான ஆர்வம் காரணமாகத்தான். இதில் சேகரிக்கப்படும் விஷயங்கள் கொலை செய்யப்பயன்படுகிறது என்று ஒருவர் கூறவே முடியாது. இப்போது ஓடிடி தளங்களில் வரும் பல்வேறு குற்ற தொடர்களை பார்த்து திருடினேன் என்று ஒருவர் கூறலாம். இதற்கும் கொலைகளை செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. இப்போது ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
டேவிட் ஹார்கர் என்வர் முப்பத்திரெண்டு வயதான பெண்ணை உடலுறுவு கொள்ளும்போது கழுத்தை நெரித்துக் கொன்றார். பிறகு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டினார். அவரது கால் தசையை வெட்டி பாஸ்தாவில் போட்டு சீஸூடன் சேர்த்து சாப்பிட்டார். இவருக்கு சைலன்ஸ் ஆப் தி லேம்ப்ஸ் படம் பிடிக்கும் என்பதை அறிந்த காவல்துறை அதனை கேள்வியாக கேட்டது. அதற்கு என்னைப் பார்த்துதான் அப்படியெல்லாம் படங்களை எடுப்பார்கள். நான் படங்களிலிருந்து வரவில்லை என்று கூறிவிட்டார். 2000ஆம் ஆண்டில் மைக்கேல் டெர்மோட் என்பவர் டெக்நிறுவனத்தில் பணியாற்றிய ஏழு பணியாளர்களைக் கொன்றார். உடனே ஊடகங்களை அவரது பின்னணி பற்றி ஆராய்ந்தனர். வீட்டுக்கு சென்றபோது அவரது வீடியோ நூலகம், இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பைப் போல பெரிதாக இருந்திருக்கிறது. அதில் இருந்து வன்முறைப்படங்களை மட்டும் வீடியோ எடுத்து போட்டு அவரின் கொலைகளுக்கு அதுதான் காரணம் என்று கூறினார். ஆனால் அவர்கள் சொல்லாமல் விட்டது, அந்த வீடியோக்களில் ஏராளமான நகைச்சுவை படங்களும் இருந்தது என்பதுதான்.
புத்தகங்களை படித்துதான் குற்றங்கள் அதிகரிக்கின்றன. கொலையாளிகள் உருவாகின்றன என்றால் பைபிளைத்தான் தடை செய்யவேண்டும். அதனைப்படித்து பெண்களின் மீது வெறுப்பு கொண்டு கொலையாளிகளான ஆட்கள் அதிகம். டேவிட் பெர்கோவிட்ஸ் பெண்களை பாவத்தின் அடையாளமாகவே பார்த்தார். பைபிளை படித்து அதனை அப்படியே நம்பியதுதான் அவர் செய்த ஒரே காரியம். நான் ஆண்கள் சொர்க்கத்திற்கு செல்லவேண்டுமென விரும்புகிறேன். விலைமாதுக்களாகவும், நடனமாடுபவர்களுமாக இருக்கும் பெண்கள் சொர்கத்திற்கு வந்தால் அதன் தூய்மை கெட்டுவிடு்ம என உளவியலாளர்களிடம் டேவிட் கூறினார்.
ஜான் ஜார்ஜ் என்பவர் பைபிளைப் படித்து அதன் புனிதங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்வதில் வித்தகர். அவர அப்படி சொல்லும்போது அவர் கொன்ற பிணங்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் மூழ்கவைக்கப்பட்டிருந்தன. இப்படி மத த்தின் மீது வெறி வருவதற்கு அவரது பெற்றோரே காரணம். நீல்சனும் அவரது பாட்டியால் மதவெறியில் ஊறிப்போனவர்தான். தனது திறமையை வைத்து பேசியே ஏராளமான பெண்களை மயக்கி கொன்றார். 1960இல் இப்படி பைபிள் பொன்மொழிகளை சொல்லி கொல்லும் ஒருவர் ஸ்காட்லாந்தில் இருந்தார். அவரை பைபிள் ஜான் என்று அழைத்தனர்.
வின்சென்ட் காபோ
கருத்துகள்
கருத்துரையிடுக