கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பல்வேறு நிறுவனங்களின் முயற்சி! - உணவு, ஆடை ஆகியவற்றில் பரவும் புதிய பாணி

 

 

 

 

 

 

 


 

 

சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தும் உலகம்!


கடந்த மார்ச்சில் ஆங்கிலேயரான ஸ்டெல்லா மெக்டார்டினி தன்னுடைய உடையில் மைலோ காளான்களை பயன்படுத்தினார். இதுதான் உலகில் முதல் சூழலுக்கு உகந்த பொருள் என்று கூறப்படுகிறது. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மைசீலியம் என்ற பொருளைப் பயன்படுத்தி தோலுக்கு பதிலாக இதனை உருவாக்கியுள்ளனர். எதற்கு இந்த முயற்சி, சூழலில் ஏற்படும் மாசுபாடுகளை குறைக்கும் முயற்சிதான். பெரும் ஃபேஷன் பிராண்டுகளும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன.


பிரெட்டில் பயன்படுத்தும் சீஸைக்கூட பாலிலிருந்து தயாரிக்காமல் அதனை தாவர புரதம் சார்ந்து உருவாக்கி பயன்படுத்தினால் கார்பன் வெளியீடு குறையும் என கண்டுபிடிப்பாளர்கள் மூலையில் உட்கார்ந்து யோசித்து செயல்படுத்தி வருகிறார்கள். விலை சற்று அதிகமாக இருந்தாலும் சூழலுக்கு அதிக மாசுபாடு ஏற்படுத்தாத பொருள் என்பதில் பெருமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.


இந்தியாவில் இப்படி சூழலுக்கு உகந்த இறைச்சியை தயாரிக்கும் பல்வேறு பிராண்டுகள் உருவாகியுள்ளன. எவால்வ்டு புட்ஸ், வெஜ்ஜி சாம்ப், குட் டாட், வெஸ்லே, வெஜிடா கோல்ட் என இப்படி பல்வேறு நிறுவனங்களை கூறலாம். இந்த நிறுவனங்கள் தானியங்கள், தாவரங்களைப் பயன்படுத்தி உணவுப்பொருட்களை உருவாக்குகின்றன. மும்பையைச் சேர்ந்த எவோ புட்ஸ் நிறுவனம், தாவரங்களைப் பயன்படுத்தி திர வ வடிவில் முட்டையை உருவாக்கியுள்ளன. இந்த வகையில் ஆல்ட் புரோட்டின், ஆல்ட் மீட் என இரு பிராண்டுகளை எவோல்வ்டு புட்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. முட்டை, மீன், தயிர், பால், தோல்பொருட்கள், பன்னீர், இறைச்சி, பட்டு, கம்பளி ஆகிய பொருட்களில் சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்கள் சந்தையில் நிரம்பி வருகின்றன.


மக்களுக்கு இதனால் என்ன பயன்? சூழலைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமை மட்டும்தான் மிஞ்சுமா என்றால் இதற்கான பதில் யாருக்கும் தெரியவில்லை. இதில் பல்வேறு சத்துகள் இருக்கும் என்பதை இன்னும் ஆய்வுகள் நிரூபிக்கவில்லை. குறிப்பாக இதனை தயாரிக்கும் முறையில் ஏராளமான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. விட்டமின் பி12 இறைச்சியில் அவசியம் இருக்கவேண்டும் ஆனால் இந்த சத்து இப்பொருட்களில் இருக்குமா என்று தெரியவில்லை. இதனை நீண்டகால நோக்கில்தான் என்ன பயன் கிடைக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.


2006இல் குசுமா ராஜய்யா என்பவர் அகிம்சா சில்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் பட்டுக்காக புழுக்களை கொல்லாமல் துணியை தயாரிக்கின்றனர். இவர்களிடமிருந்து பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பட்டைப் பெற்று உடைகளை தயாரித்து விற்கின்றனர். மாதம் பத்தாயிரம் மீட்டர் துணியைத் தயாரிக்கின்றனர். மீட்டருக்கு இதன் விலை 850 முதல் 1800 வரை உள்ளது. சாதாரணாக ஒரு கிலோ பருத்தியை உற்பத்தி செய்ய பத்தாயிரம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இதற்காக 24 சதவீத பூச்சிமருந்துகள் பயன்படுத்துகின்றன. நைலான், பாலியஸ்டர் இழைகளை உருவாக்க 342 மில்லியன் ஆயில் பேரல்கள் தேவைப்படுகின்றன. செயற்கை இழைகளை முழுமையாக தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைத்துள்ள ஒரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்தான்.


காகித கப்புகள், மூங்கில் ஸ்ட்ரா, எளிதில் மட்கும் குடிநீர் பாட்டில்கள் தொடக்கத்தில் நன்றாக இருப்பதாக தெரிந்தாலும் இப்பொருட்கள் அனைத்து சூழலுக்கும் ஏற்றவையல்ல. முடிந்தளவு உள்ளூர் விஷயங்களைப் பயன்படுத்துவதே சூழல் பாதிப்பைக் குறைக்கும் வழி. பொருட்களை உற்பத்தி செய்வதோடு, அதனை பிற நாடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும் கார்பன் வெளியீடு அதிகரித்து வருகிறது. இதனையும் குறிப்பிட்ட பொருளின் உற்பத்தியில் சேர்த்தால் அந்தப் பொருள் ஏற்படுத்தும் பாதிப்பை அறியலாம்.


சூழலுக்கு உகந்த போக்குவரத்து விஷயங்களிலும் ஏராளமான இந்திய நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இவை எப்படி வெற்றிபெறும் என்பது அதன் திட்டங்களிலும் மக்களின் தேவை என்ன என்பதை புரிந்துகொள்வதிலும்தான் இருக்கிறது.


பினான்ஷியல் எக்ஸ்பிரஸ்


வைஷாலி தா்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்