கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது!
டாக்டர் எஸ் பாலசுப்பிரமணியன்
லான்செட் இந்தியா டாஸ்க் போர்ஸ் குழு
மூன்றாவது அலை கொரோனா தொற்று குழந்தைகளை தாக்கும் என்று கூறப்படுகிறதே?
பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நான்கு சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் 12 சதவீதமாக உயரலாம். பிற நாடுகளிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் மீதான நோய் பாதிப்பு 9 சதவீதமும், அமெரிக்காவில் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 12. 4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் நோயால் தாக்கப்பட்டவர்களின் வயது பதினைந்துக்கும் குறைவுதான். இந்த தாக்குதலும் கூட முதல், இரண்டாவது அலையில் ஏற்பட்டதுதான். மூன்றாவது அலையில் இப்படி தாக்குதல் நடைபெறுமா என்று கூற முடியாது. தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தினால் வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் பெரியளவு பாதிப்பு நேராது என்று கூறலாம்.
படுக்கைகளும் வெண்டிலேட்டர்களும் அதிகம் தேவைப்படுமா?
முதல் மற்றும் இரண்டாவது அலையில் பெரியளவு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது அலையில் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்ப அதிக வாய்ப்புகள் உள்ளன. அரசு இதை தடுப்பதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்யவேண்டும். வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்கான விதிகளை வலுவாக்க வேண்டும். சிறு நோய்களைக் கொண்ட குழந்தைகள் 40 சதவீதம் பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். எனவே, இவர்களை பாதுகாப்பாக காப்பது முக்கியம். நோய் தொடர்பான தளத்தை அனைவரும் எளிதில் பார்த்து பயன்பெறும்படி அமைக்க வேண்டும்.
குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு எளிதில் பலியாக என்ன காரணம்?
நுரையீரலில் நோய் இருப்பது, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே பிறப்பது ஆகியவை அவர்களின் மரணத்தி்ற்கு காரணமாக உள்ளது. இதன் கூடவே செரிமான சிக்கல்கள், புற்றுநோய், வளர்சிதை மாற்ற பிரச்னைகளும் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுமுறை, செயல்பாடு இல்லாத நிலையில் உடல்பருமன் இல்லாத நிலை பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான குழந்தைகள் வீட்டில் இருப்பதால் அவர்களை பெற்றோர் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடல்நலம் மட்டுமன்றி உளவியல் பிரச்னைகளையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளை சமாளிப்பதற்கு உங்களிடம் என்ன தீர்வுகள் உள்ளன?
அங்கீகாரம் பெற்ற உளவியலாளர்களை, மருத்துவர்களை குழந்தைகளுக்கு ஆலோசனை தரும்படி கூறலாம். இதன்மூலம் வைரஸ் மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்கப்பட்டவர்களை காக்க முடியும். பள்ளிகள் தொடங்கப்பட்டாலும் கூட அதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபிறகே மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.
பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னரே குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டுமா?
அமெரிக்காவில் பனிரெண்டு, பதினைந்து கொண்டவர்களுக்கு தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுவிட்டன. நாமும் அதை விரைவில் செய்யவேண்டும். தடுப்பூசி பற்றிய இறுதி சோதனைகளை ஆராய்ந்துவிட்டு அரசு குழந்தைகளுக்கு அதனை பரிந்துரைக்க வேண்டும். இதனை முன்னுரிமை அடிப்படையில் செய்யவேண்டும். இவர்களுக்கு நோய்த்தொற்று எளிதில் தொற்றும் என்பதால் அரசு, இவர்களை உடனே கவனத்தில் கொள்ளவேண்டும்.
டைம்ஸ் ஆப் இந்தியா
புஷ்பா நாராயணன்
கருத்துகள்
கருத்துரையிடுக