எல்லாம் சாத்தான் செயல்! - சாத்தான் காதில் சொன்னதால் கொலை செய்தேன்!

 

 

 

 

 

devian art

 

 

 

எல்லாம் சாத்தான் செயல்


கொலைகளை நிதானமாக செய்துவிட்டு வம்பு, வழக்குகள் என்று வரும்போது எனது காதில் சாத்தானின் குரல் கேட்டது. அதனால்தான் குற்றங்களை செய்தேன் என புதுமையாக வழக்கு வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் பேசுவது மத்திய காலத்தில் தொடங்கியது. இதனை முதலில் தொடங்கியவர் டேவிட் பெர்க்கோவிட்ஸ்தான். எனக்குள் நான் பிறந்த காலம்தொட்டே சாத்தான் உள்ளது என்று வாக்குமூலம் கொடுத்தார். அடுத்து ஹெர்பர்ட் என்பவர், நிலநடுக்கம் ஏற்படுத்துபவர்கள் என்று அச்சப்பட்டு எட்டுபேரை அடுத்தடுத்து கொன்றார். அவர்களுக்குள் சாத்தான் நுழைந்துவிட்டான் எனவே, அவர்கள் செய்யவிரும்பாத விஷயங்களை கூட செய்தார்கள் என்று கூறினார்.


அமெரிக்காவில் இந்த விவகாரம் 1950களில் தொடங்கியது. எல்லாம் சாத்தான் செயல் என்று சொல்லி வழக்கு உளவியல் பக்கம் திருப்பி பலரும் தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் அது எல்லா நேரத்திலும் எடுபடாது. இப்படித்தான் எலிபாசி என்ற கொலைகாரர், பதினைந்து சிறுவர்களை வேலை தருகிறேன் என்று கூட்டிச்சென்று கோடாரியால் வெட்டிச்சாய்த்தார். காவல்துறையில் மாட்டியபிறகு தீயசக்தியான டோக்கோலோஷே என்னை சிறுவர்களை கொல்லச்சொல்லி கட்டாயப்படுத்தியது என்று பொய்களை அடுக்கினார். இதனை உறுதி செய்ய நீதிமன்றம் உளவியலாளர் ஒருவரை அமர்த்தியது. அவர், எலிபாசி கூறுவது உட்டாலக்கடி என சத்தியம் செய்து அறிக்கை கொடுக்க, 1956ஆம் ஆண்டு எலிபாசியை தூக்கில் ஏற்றினார்கள்.


தூண்டுதல்


கோபம் கொள்ளக்கூடாது என்று சத்தியம் செய்தவர்கள் கூட சூழலின் அழுத்தம் தாங்காமல், சிலரின் பேச்சைக் கேட்டு உடல்நடுங்க கொந்தளிப்பார்கள். இங்கு மனதில் என்ன நடக்கிறது? ஒருவரின் கோபத்தை, அவரது இயலாமையை சுட்டிக்காட்டி, பலவீனத்தை ஏதோவொரு சொல் தூண்டிவிட எரிமலையைப் போல கோபம் வெடிக்கிறது. ஆல்பிரட் ஹிட்சாக்கின் படத்தில் விடுதி நடத்தும் நார்ன் பேட்ஸ் இப்படித்தான் சூழலின் அழுத்தம் தாங்காமல் மரியன் கிரேன் என்ற பெண்ணை குளியலறையில் கொல்கிறார். இதற்கு காரணம், அவரது அம்மாவின் பொறாமை என்று கூட சொல்லலாம். அவரது அம்மாவும் அவரது உடலில் முக்கியமான ஆளுமையாக இருக்கிறார். அதற்கு எதிராக நார்மன் மரியானை விரும்புகிறான். அவரது அருகில் இருக்கவேண்டுமென நினைக்கிறார். கொலைகாரர்கள் நெடுநாட்களாக கனவுகண்டு வரும் வினோதமான கற்பனைகள் திடீரென வெளிவருவதற்கு குறிப்பிட்ட சூழ்நிலைகள் தூண்டுதலாக உள்ளன என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.


கொலைகாரர்கள் பொதுவாக பாதுகாப்பு இல்லாத குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், போதை மருந்துக்கு அடிமையானவர்களை தேர்ந்தெடுத்து சோலியை முடிப்பார்கள். பிறரை விட இவர்களை எளிதில் கையாள முடியும் என்பதுதான் இதற்கு காரணம். எட்கெய்ன் இதில் வேறுபட்டவர். அவர் தனது அம்மாவை நினைவுபடுத்தும் மத்திய வயது பெண்களை தேர்ந்தெடுத்து கொன்றார். டெட் பண்டி கொன்ற பெண்களின் தலைமுடி ஒன்றுபோலவே இருக்கும். கொலைகளைச் செய்ய தேவையான தூண்டுதலை ஒரு்வரின் அழகு, பாதுகாப்பில்லாத தன்மை, அப்பாவித்தனம் என ஏதாவது ஒரு விஷயம் தருகிறது. முன்னமே சில திரைப்படங்கள், இசைப்பாடல்கள், நூல்கள் கூட கொலைகாரர்களை ஊக்கப்படுத்தியுள்ளது என்பது உண்மை. இதனை காவல்துறையினர் விசாரணையில் கேட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.


வேட்டைநிலம்


எப்படி விலங்குகள் தங்களுக்குள் குறிப்பிட்ட எல்லையை உருவாக்கி, காப்பாற்றுகிறதோ அதைப்போலவே கொலைகார ர்களும் குறிப்பிட்ட எல்லைக்குள்தான் கொலைகளை செய்து வந்தனர். இதற்கு என்ன காரணம்? இரையைத் தேடிக்கொல்ல எளிதாக இருக்கும் என்பதுதான். ஜாக், கிழக்கு லண்டனிலுள்ள குடிசைப்பகுதியை மட்டுமே அதிகம் தேர்ந்தெடுத்து இரைகளை கொன்றார். பெர்கோவிட்ஸ் நியூயார்க்கிலுள்ள பல்வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்து வேட்டையாடினார். எனக்கு வேட்டையாடுவது பிடிக்கும். சுவையான இறைச்சிக்கான நான் வேட்டையாடுவது விரும்பினேன் என பெர்க்கோவிட்ஸ் கூறினார்.


வீட்டுக்கு அருகில் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து கொலை செய்வது கொலைகாரர்களுக்கு எளிதானது. இதன் மூலம் கொலை செய்வதற்கான ஆட்களை எளிதாக கண்டுபிடிக்கமுடியும். சம்பவத்தை நடத்திவிட்டு எளிதாக தப்பிக்க முடியும். இதனால் தங்களுக்கு ஒத்திசைவான இடங்களை தேர்ந்தெடுக்கின்றனர். இப்படி கூறப்படும் விஷயத்திற்கு மாறுபட்டும் கொலையாளிகள் செயல்பட்டுள்ளனர. ஜெப்ரி டாமர் இப்படிப்பட்டவர்தான். இவர் ஓரினச்சேர்க்கையாளர்களை பல்வேறு இடங்களில் தேடிப்பிடித்து தனதுஅறைக்கு கொண்டு சென்று கொன்றார். வேய்ன் கேசி, கொலை செய்ய பிடித்தவர்களை சித்திரவதை செய்வதற்கு என்றே தனி அறையை உருவாக்கி வைத்திருந்தார். டேவிட் மற்றும் கேத்தரின் பிர்னி ஆகியோர் பெர்த் நெடுஞ்சாலையில் வரும் பயணிகளை பிடித்துச்சென்று வல்லுறவு செய்து கொல்லுவதற்கென்றே பங்களா ஒன்றை வைத்திருந்தனர். இதனை ஆஸ்திரேலியாவின் கொடூரமான வீடு என்று பின்னாளில் அழைத்தனர்.


இன்னும் சில குற்றவாளிகள் காரில் அல்லது வேறு பிக்அப் வாகனங்களில் சாலைகளில் சுற்றிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் பல்வேறு மாநிலங்களில், நகரங்களில் குற்றங்களை செய்வார்கள். இதனால் கொலைகளை இணைத்துப் பார்த்து ஒரே கொலையாளிதான் இதனை செய்தார் என்று கூறுவது கடினம் இதனை லிங்கேஜ் பிளைண்ட்னெஸ் என்று அழைக்கின்றனர். லியனோர்டு நீல்சன் இந்த வகையில் சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில், ஓக்லாந்து, போர்ட்லாந்து, கான்சாஸ் என பல்வேறு இடங்களில் குற்றங்களை செய்துகொண்டே சென்றார். இவர் பொதுவாக காரில் இரண்டுக்கும் மேற்பட்ட பிணங்களை வைத்துக்கொண்டே சுற்றுவது வழக்கம். கார்ல் பான்ஸ்ராம் இந்த வகையில் உலகம் முழுக்க சுற்றி இருபத்தியொரு கொலைகளையும், ஏராளமான கொலைத் தாக்குதல்களையும், ஓரினச்சேர்க்கையாளர்களை வல்லுறவும் செய்துள்ளார். இவர் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சென்று, முதலைகளை வேட்டையாடும் போர்வையில் உள்ளூர் ஆட்களை வேலைக்கு அமர்த்தினார். பின்னர் அவர்களை வல்லுறவு செய்து தாக்கிக் கொன்று முதலைகளுக்கு உணவாக போட்டுவிட்டார்.


மட்சுரிரோ ரிசென்டெஸ் என்ற கொலைகார ர் இந்த வகையில் கொஞ்சம் வேறுபட்ட ஆசாமி. இவர் கொலை செய்வதற்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதும் கிடையாது நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் ஏறி பயணித்து இடைப்பட்ட நகரங்களில் இறங்குவார். அங்குள்ள பாதுகாப்பு இல்லாத வீடுகளுக்கு சென்று, இரும்புக்கழி ஒன்றை எடுத்து அனைவரையும் தலையில் அடித்து கொன்றுவிட்டு வீட்டைக் கொள்ளையடித்துவிட்டு அடுத்த ரயிலில் ஏறிச்சென்றுவிடுவார். இப்படி ரயிலின் வழித்தடமெங்கும் ஏராளமான உயிர்பலிகளை ரிசென்டெஸ் ஏற்படுத்தினார். எப்பிஐ இவரை தேடப்படும் குற்றவாளி என டாப் 10 பட்டியலில் பெயரை சேர்த்து கௌரவப்படுத்தியது. இதனாலோ என்னவோ அவராகவே முன்வந்து காவல்துறையில் சரண்டைந்து தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். இப்போது வினோதமான கொலைகாரரைப் பற்றி பார்ப்போம்.


ஜான் எரிக் ஆர்ம்ஸ்ட்ராங்


இவரை துறைமுக கொலைகாரர் என்று அழைக்கின்றனர். அப்படி என்ன வேலை செய்தார். அமெரிக்க கடற்படையில் பணியாற்றியவர், வேலைக்காக சென்று நின்ற துறைமுகங்களில் எல்லாம் விலைமாதுக்களிடம் செல்வார். அவர்களிடம் காசு கொடுத்து உடலுறவு கொள்வார். பிறகு அவர்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிடுவார். இப்படி பல்வேறு துறைமுகங்களில் பதினொரு விலைமாதுக்களை கொன்றார். இதெல்லாம் பின்னாளில் காவல்துறையில் இவரே கூறிய ஒப்புக்கொண்ட கொலைகள். குழந்தை போன்ற முகம் கொண்டவருக்கு திருமணம் ஆகி மகன் கூட இருந்த நிலையில் தனது கொலை வேட்கையை அமைதியாக நிறைவேற்றிக்கொண்டிருந்தார். இவருக்கு ஆதாரமான பலம், இவரது முகமும், அரசு வேலையும்தான்.


இவரது மனதில் விலைமாதுக்கள் என்றாலே விஷம் என்று எப்போது தோன்றியதோ தெரியவில்லை. அவர்களை தனது ரேங்க்லர் ஜீப்பில் உடலுறவு கொள்ள அழைத்து காரியம் முடிந்ததும், அவர்களை அங்கேயே கொன்றுவிட்டு ரயில்பாதை அல்லது ஆற்றில் தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிடுவார். இவர் இப்படி பெண்களை கொன்றுவிட்டு சென்றாலும் காவல்துறை இவரை சந்தேகிக்கவில்லை. உடனே மனபலம் பெற்றவர், காவல்துறையினரை சவாலுக்கு அழைத்தார். விலைமாதும், போதைப் பொருளுக்கும் அடிமையான பெண்ணை கற்பழித்துக் கொன்று ஆற்றில் தூக்கியெறிந்தவர், உடனே காவல்துறைக்கு நம்பரைச் சுழற்றி, பிணம் கிடக்கிறது போகும் வழியில் பார்த்தேன் என்று கூறினார். சைரன் ஒலிக்க வந்த காவல்துறை பிணத்தைக் கைப்பற்றியது. ஆனால் போனில் ஜான் சொன்ன விஷயங்களை அசைபோட்டு பார்த்தில் ஏதோ தவறு இருப்பதாக தெரிய, அவரைக் கண்காணித்து வந்தது.

போலீசாரையே ஏமாற்றிவிட்டோம் என்று மிதப்பில் இருந்த ஜானுக்கு அவர்கள் டிஎன்ஏ சோதனையையும், விந்து அணுக்களையும் சோதிப்பார்கள் என்று தெரியவில்லை.


ஜானின் ரேங்க்லர் ஜீப்பை சோதித்தவர்கள், அதிலிருந்து முடி மாதிரிகளையும் சோதனைக்கு எடுத்து பொருத்திப் பார்த்துவிட்டனர். அவருக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளது தெளிவானாலும் ஜான் அடுத்து என்ன செய்கிறார் என்பதை கவனித்து வந்தனர். இந்த நிலையில் ஜான் மூ்ன்று பேரை கொன்று ரயில் பாதையில் போட்டு யாரும் என்னை கவனிக்கலையே என இறுமாப்புடன் திரிந்தார். இதில் கிடைத்த தகவல்கள், ஜான்தான் அந்த பெண்களுடன் அங்கு சுற்றி வந்தார் என்பதை மக்கள் தெளிவாக கூற ஆதாரங்கள் அடிப்படையில் ஜானை காவல்துறை கைது செய்தது. அப்போதும் கூட அவரது வழக்குரைஞர்கள் அவரது அப்பா அவரை பாலியல் வல்லுறவு செய்தார் அத்னால்தான் இப்படி ஆகிவிட்டார் என வாதிட்டனர். அதெல்லாம் செல்லாதுப்பா என நீதிபதி உத்தரவிட ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார் ஜான்.


இரை


கொல்வதும் கொல்லப்படுவதும் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கியமான அங்கம் என்று உளவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே நாளிதழ்களில் டிவி சேனல்களில் வரும் குற்ற சம்பவங்களை மக்கள் ஆர்வமுடன் படிக்கி்ன்றனர். இப்படி படிப்பது கூட நிலையில்லாத சூ்ழ்நிலையை எதிர்கொள்வதற்கான மனநிலையை உருவாக்குவதற்கு என புரிந்துகொள்ளலாம். பொருளாதார நெருக்கடியான காலங்களில் கொலைகார ர்கள் பற்றிய செய்திகள் மக்களின் கவனத்தை சற்றே திசைதிருப்பின. தங்களது வாழ்க்கை ஆபத்தில் உள்ளதாக உணர்பவர்கள், வாழ்வை தீவிரத்தோடு வாழ்வார்கள். குற்றம் சார்ந்த சம்பவங்கள் சூழலை இந்த திசைக்கு நகர்த்துகின்றன.


எரிக் எட்கர் குக்


அனைத்து கொலைகார ர்களும் எப்படி கொலை செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய பாணியைக் கண்டுபிடித்துவிடலாம். கழுத்தை நெரித்து அல்லது துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி என பல்வேறு வழிகளில் கொலைகள் நடைபெறுகின்றன. எரிக் இதிலும் ஏகப்பட்ட வெரைட்டி காட்டி கொலைகளை செய்து போலீசுக்கு பீதியூட்டியவர். ஆண், பெண், இளைஞர்கள், முதியவர்கள் அனைத்து பிரிவினரையும் போட்டுத்தள்ளி ஆஸ்திரேலியாவை மிரட்டிய கொலைகார ர் இவர்.


தொடர்கொலைகளை செய்யும் கொலைகார ர்களுக்கான சரியான பின்னணி எரிக்கிற்கு இருந்தது. இதனால் அவர் உலகில் யாரையாவது காயப்படுத்தவேண்டும் கொல்லவேண்டும் என்பதுதான் எனது ஆசை என பின்னாளில் பிடிபட்டபோது காவல்துறையினரிடம் கூறினார். இவருக்கு பிறக்கும்போதே உதடுகள் பிளவுற்று இருந்தன. எனவே இவரது குடிநோய்க்கு அடிமையான தந்தை இவரை தினசரி அடுத்து துவைக்கும்போது இவரது உதட்டு பிளவை கிண்டல் செய்வது வழக்கம்.


பதினெட்டு வயதில் தனது முதல் கொள்ளையை தொடங்கினார். இதில் மாட்டிக்கொண்டு சீர்திருத்த மையத்திற்கு சென்றார். பிறகு தேவாலயத்திற்கு சென்று வேலை செய்யத் தொடங்கியவருக்கு திருமணமானது. வாகன ஓட்டுநராக வேலை செய்யத் தொடங்கினார். குழந்தை கூட பிறந்தது. ஆனாலும் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, தாக்குவது, கொலை செய்வது, வல்லுறவு கொள்வது ஆகியவற்றை விடவில்லை.


1959ஆம் ஆண்டு விவகாரத்து பெற்ற பெண்ணை தூக்கத்திலிருந்து எழுப்பி கத்தியால் இடைவிடாமல் குத்திக் கொன்றார். பிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிங்கில் நின்ற காரிலுள்ள தம்பதிகளை துப்பாக்கியால் சுட்டார். அவர்கள் சமாளித்து காரை கிளப்பிக்கொண்டு செல்ல, அடுத்தடுத்து மூன்று பேர்களை சுட்டுத்தள்ளினார். இவர்களில் இருவர் அங்கேயே இறந்துவிட ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார். பிறகு மேலும் ஒரு இளம்பெண்ணைக் கொன்று அவரின் உடலோடு உடலுறவு கொண்டார். அடுத்து வயதான தம்பதிகளை கொல்ல முயற்சித்தபோது கா்வல்துறை எரிக்கை பிடித்துவிட்டது. ஓராண்டுக்குப்பிறகு 1963ஆம் ஆண்டு நீதிமன்றம் தூக்கிலிட உத்தரவிட்டது.


vincent kabo


கருத்துகள்