மாற்றுப்பாலினத்தவரின் குறியீடுகள், அடையாளங்கள்!
மாற்றுப்பாலினத்தவர் குறியீடுகள்
மாற்றுப்பாலினத்தவரை குறிப்பிட நிறைய அடையாளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் விட வானவில் அடையாளம்தான் அனைவருக்கும் எளிதாக புரியும்படி உள்ளது. இதனை கில்பர்ட் பேக்கர் என்பவர் உருவாக்கினார். இதுதான் இறுதி என்று கூறமுடியாது. ஒரினச்சேர்க்கையாளர் தொடங்கி மாற்றுப்பாலினத்தவருக்காக ஏராளமான லோகோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன அவற்றைப் பார்ப்போம்.
வெள்ளி, செவ்வாய்
வெள்ளி அடையாளம் பெண்களைக் குறிக்க பயன்படுகிறது. லெஸ்பியன் பெண்கள் இரண்டு அடையாளங்கள் ஒன்றன்மீது ஒன்று இருப்பதாக வடிவமைத்து இருக்கிறார்கள். இது காதல் கொண்ட இரு பெண்களைக் குறிக்கிறது. இதேபோல அமைந்துள்ள செவ்வாய் அடையாளம் ஆண்களை அடையாளப்படுத்துகிறது. இரண்டுபுறமும் கத்திகளைக் கொண்ட கோடரி, லெஸ்பியன்களை குறிக்கிறது. இந்த அடையாளம் தொன்மைக்கால அமேஸான், கிரேக்க கடவுள் டெமட்டர் ஆகியோரைக் குறிக்கிறது.
இரண்டு முக்கோணங்கள்(பைஆங்கிள்ஸ்)
நீலமும், பிங்க் நிறமும் கொண்ட முக்கோணங்கள் உள்ளன. இதில் பிங்க் நிறம் பெண்கள் மீதான காதலையும், நீலம் ஆண்கள் மீதான காதலையும் குறிப்பதாக கூறுகிறார்கள். இருபாலுணர்ச்சியைக் குறிக்கும் அடையாளங்களாகவே இதனை வரையறுத்தாலும் பலரும் இதனை பலவிதமாக புரிந்துகொள்கிறார்கள்.
பி பார் பான்செக்சுவல்
பான் இந்தியா ஸ்டார் என பிரபாசைக் கூறுகிறோமோ அதேதான். இவர்களுக்கு அனைத்து வித உறவுகளையு்ம பிடிக்கும் என கூறலாம். காதலோ, செக்சோ அனைத்துமேதான். இந்த லோகோவில் ஆண், பெண், மாற்றுப்பாலினத்தவர் என அனைத்துமே இடம்பெறும்.
பிங்க் முக்கோணம்
பெண்களை பெருமைப்படுத்தும் முக்கோண அடையாளம் என்று கூறப்பட்டாலும் இது மாற்றுப்பாலினத்தவரின் நெருக்கடியான காலகட்டத்தைக் குறிக்கிறது. நாஜிக்கள் ஜெர்மனியில் டேவிட் நட்சத்திரத்தை யூதர்களுக்கு அணிவித்தனர். ஓரினச்சேர்க்கையாரர்களுக்கு பிங்க் முக்கோண அடையாளத்தை அணியச்சொல்லி கட்டாயப்படுத்தினர். எதிரிகளை எதிர்த்து போராடும் மக்களை அடையாளப்படுத்துவதாக பிங்க் முக்கோணம் ஆகிவிட்டது.
லாம்ப்டா
1974 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய அடையாளம் இது. இதனை கிராபிக் டிசைனர் டாம் டோயர் லாம்ப்டா என்ற அடையாளத்தை உருவாக்கினார். இந்த அடையாளம் கிரேக்க எழுத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. ஸ்காட்லாந்தில் ஆண், பெண் ஆகியோருக்கான ஓரினச்சேர்க்கை மாநாட்டிற்கான அடையாளமாக இதனை ஏற்றது.
வயலெட்ஸ்
இந்த வகை பூக்களை மாற்றுப்பாலினத்தவர்கள், குறிப்பிட்ட பாலினத்தை வெளிப்படுத்தாதவர்களை குறிப்பிட பயன்படுத்துகின்றனர்.
க்ரீன் கார்னேஷன்
ஆஸ்கர் வைல்டு பிரபலப்படுத்திய அடையாளம் இது. அவரைப் பின்பற்றுபவர்கள் அவரின் நினைவாக இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனை ஓரினச்சேர்க்கையாளர் அடையாளமாக குறிப்பிடுகிறா்ர்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக