மக்களைக் கண்காணிக்கும் பெரு நிறுவனங்கள்! - தகவல் சேகரிப்பில் கொட்டும் லாபம்!

 

 

 

 


 

 

 

 

பழக்கங்களை பின்பற்றுதல்



காலையில் எழுகிறீர்கள். எழுந்த உடனே பெரும்பாலும் முகங்களை கூட இப்போது எல்லாம் யாரும் கழுவுவதில்லை. உடனே போனில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு தளங்கள் உள்ள பதிவுகளை பார்க்கிறோம். இரவில் தூங்கும்போது மாறியுள்ள விஷயங்களை எப்படி கவனிப்பது? பின் கிளம்பி அலுவலகம் சென்று இணையத்தில் ஷூ வாங்குவது பற்றி தேடுகிறீர்கள். இன்ஸ்டாகிராமில் காபியை குடிப்பது போன்ற புகைப்படத்தை டீ பிரேக்கில் பதிவிடுகிறீர்கள். சிறிதுநேரத்தில் இணையத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் புதிய ஷூக்கள் பற்றிய விளம்பரங்கள் வரத் தொடங்கும். எப்படி என்று இந்நேரம் யூகித்திரப்பீர்கள். அனைத்து வலைத்தளங்கள் நுழைந்தவுடன் குக்கீஸ்கள் நம்மை பின்தொடர அனுமதி கொடுப்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.


இந்த குக்கீஸ்கள்தான் நாய்க்குட்டிபோல நம்மைப் பின்தொடர்ந்து வந்து பல்வேறு தகவல்களை சேகரிக்கின்றன. அதனால்தான் விளம்பரங்கள் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் வருகின்றன. சில சமயங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யும்போது, கூகுள் இந்த விளம்பரம் பொருந்தவில்லையா என்று கேள்வி கேட்பது இதனை அடிப்படையாக கொண்டதுதான். கூகுளின் பல்வேறு சேவைகளை இலவசமாக பயன்படுத்துவதால், அந்நிறுவனம் நம்மைப் பற்றிய ஏராளமான தகவல்களை தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருக்கிறது. சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வமாக இருந்து குரோமில் சைக்கிள்களை வாங்க தேடுவது முதல் மேப்பில் சைக்கிள் ரூட்டுகளை தேடிக்கொண்டிருப்பது வரையில் கூகுள் உங்களை கண்காணிக்கிறது. இதனால்தான் எங்கு சென்றாலும் சைக்கிள் தொடர்பான விளம்பரங்கள், யூட்யூபில் அது தொடர்பான வீடியோக்கள் முன்னுரிமை பெற்று முன்னே வருகின்றன.


ஒரு கடையில் டெபிட் அல்லது கிரடிட் கார்டுகளை கொடுத்து பொருட்களை வாங்குவதையும் நிறுவனங்கள் பதிவு செய்துகொள்கின்றன. இதனால்தான் ஏராளமான சலுகைகளை வழங்கி கார்டுகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றன. இப்படி கார்டுகளை பயன்படுத்துவதற்கு வங்கிகள் குறிப்பிட்ட கட்டணங்களை வசூலிக்கின்றன. இதில் வங்கி கொடுக்கும் மெஷின்களை பயன்படுத்துவதற்கு கொடுக்க வேண்டிய வாடகையையும் சிலர் வாடிக்கையாளர்களிடம் தந்திரமாக வாங்கிவருகிறார்கள். இதில் ஒருவரின் விழிப்புணர்வு மட்டுமே அவரை காப்பாற்றும்.


தகவல்களை காப்பாற்றுவது என்பதில் பெருநிறுவனங்கள் பொறுப்பை ஏற்பதில்லை. அவர்களுக்கு இலவசம் என்று மென்பொருள் அல்லது சேவையைக் கொடுப்பதால் மக்களைப் பற்றிய தகவல்களை வணிக நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காசு வாங்கிக்கொண்டு கொடுப்பதுதான் லாபம். அப்போதுதான், அந்த நிறுவனம் லாபம் சம்பாதிக்க முடியும். இதற்கு பல்வேறு விதிகளை உருவாக்கி நாடுகள் தடுக்க முயன்று வருகின்றன.


பிபிசி


பல்ஜித் பனேசர்.










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்