காங்கிரஸ் மக்களிடமிருந்து விலகி வந்துவிட்டது! - ஜிதின் பிரசாதா, பாஜக தலைவர்

 

 

 

 

 

Dissenters Raj Babbar, Jitin Prasada left out of 7 UP poll ...

 

 

 

 

 

ஜிதின் பிரசாதா


பாஜக தலைவர்


2019இல் நீங்கள் பாஜகவில் இணைவீர்கள் என்று கருதப்பட்டது. தற்போது அக்கட்சியில் இணைந்துள்ளது ஆச்சரியமாக இல்லை.


இது ஆச்சரியம் பற்றியது அல்ல. நான் கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்து வந்துள்ளேன். நான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் சார்ந்துள்ள கட்சியும் அதற்கான திறனுடன் இல்லை என்பதை உணர்ந்துள்ளதால் பாஜகவிற்கு மாறிவிட்டேன்.


எத்தனை ஆண்டுகளாக இந்த முடிவு பற்றி சிந்தித்து வந்தீர்கள்?


இது காலம் பற்றியதல்ல. தோல்வி பற்றியது. தொடர்ச்சியாக நாங்கள் தோல்வியுற்றோம். நாங்கள் மக்களிடம் நிறைய பேசிய அளவில் அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. எனவே அதற்காகத்தான் முடிவு எடுக்கவேண்டியிருந்தது.


பாஜக உங்களை அணுகியதா அல்லது நீங்கள் அவர்களை அணுகினீர்களா?


இது யார் யாரை அணுகினோம் என்பதல்ல. நான் இந்த முடிவை மகிழ்ச்சியாக எடுக்கவில்லை என்பதை உங்களுக்கு கூறிக்கொள்கிறேன். நான் தேசியக்கட்சி என்பதால் கட்சியில் இணைந்து பணியாற்ற நினைத்தேன். இது தனிநபரை சுற்றி அல்லாமல் மக்களுக்கானதாக இருந்ததால் இணைந்தேன்.


நீங்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரைப் பற்றி கூறுகிறீர்களா?


நான் பொதுவாக கட்சி பற்றி கூறினேன். தனிப்பட்ட கட்சி பற்றி கூறவில்லை.


தொடர்ச்சியான தோல்வி பற்றி கூறினீர்களே?


அரசியலில் தோல்வி என்பது பொதுவானதுதான். கட்சி மக்களை விட்டு விலகி நிற்பதுதான் பிரச்னை. எனது மாநிலத்தில் இப்படியொரு நிலை இருந்து வந்தது. இப்படி மக்களிடமிருந்து தொலைவில் இருந்ததால் தொடர்ச்சியான தோல்விகள் ஏற்பட்டன.


கோவிட் -19 பிரச்னையை அரசு சமாளிக்க தடுமாறும் நிலையில் பாஜகவில் சேர்ந்துள்ளீர்களே?


அவர்களின் விமர்சனங்கள் அவர்களின் பிரச்னை. நான் விரைவில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலை பற்றி கவலைப்படுகிறேன். கட்சி எனக்கு கொடுக்கும் வேலையை எப்படி செய்வது என யோசித்து வருகிறேன்.


மக்களிடம் தொடர்பே இல்லாமல் இருக்கிறது காங்கிரஸ் என்று எப்படி சொல்லுகிறீர்கள். 2019 முதல் பிரியங்கா அங்கு பிரசாரம் செய்துதானே வருகிறார்?


நான் கடந்த இரண்டு ஆண்டுகளை மட்டுமே இங்கு குறிப்பிடவில்லை. பல்லாண்டுகளாக அங்கு நடந்து வரும் சம்பவங்களைத்தான் கூறினேன்


இந்துஸ்தான் டைம்ஸ்


சுனேத்ரா சௌத்ரி


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்