போலிச்செய்திகளுக்கு ஏற்ப நாமும் விதிகளை மாற்றி கண்டுபிடிப்புகளை அதிகரிக்க வேண்டும்! - வான் டெர் லிண்டென்

 

 

 

Cambridge Minds: Sander van der Linden

வான் டெர் லிண்டென்


போலிச்செய்தி ஆய்வாளர்


உங்களுக்கு போலிச்செய்திகளைக் கண்டறிவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?


உலஇரண்டாவது உலகப்போர் நடைபெற்று முடிந்தபிறகும், பிற மனிதர்களின் மோசமான நடவடிக்கைகள், ஆபத்தான யோசனைகளை அறிந்தபிறகுதான் இதைப்பற்றி ஆராய வேண்டும் என்று தோன்றியது. இது அனைத்து சமூக உளவியலாளர்களின் எமமும்தான். மக்கள் எப்படி செய்திகளின் மூலம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள் என்பதை ஆராய நினைத்தேன். 2015ஆம் ஆண்டு நான் அமெரிக்க தேர்தலுக்கு முன்னர், பருவச்சூழல் மாறுபாடு பற்றிய தவறான தகவல்களை படித்தேன். குறிப்பாக இப்படி தவறான தகவல்களை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கு பாடுபடும் மனிதர்களை முடக்க சிலர் நினைத்தனர். இதில் ஏராளமான மூடநம்பிக்கைகள், முட்டாள் தனங்கள் இருந்தாலும் இதன் அடிப்படை நோக்கம் மேற்சொன்னதுதான். எங்களுக்கு முன்னிருந்த கேள்வி எப்படி இதிலிருந்து மக்களை காப்பது, அ வர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பதுதான்.


தவறான தகவல்களுக்கு எதிராக உளவியல் தடுப்பூசி என்ற யோசனையை எங்கே பிடித்தீர்கள்?


ஐம்பது அறுபதுகளில் பில் மெக்யூர் என்பவர் உருவாக்கியதுதான் உளவியல் தடுப்பூசி. இவர் யேல் பல்கலைக்கழக மாணவர். போர் நடைபெற்ற பிறகு தவறான தகவல்களை எப்படி திட்டமிட்டு பரப்புகிறார்கள் என்பதை ஆராய்ந்து உளவியல் தடுப்பூசியை உருவாக்கினார். நான் இதனை எதேச்சையாகத்தான் பார்த்தேன். அவர் இருந்த காலத்தில் செய்திகளை உடனே சரிபார்க்க இணையம் இல்லை. ஆனால் இன்று அதனை சரிபார்க்க முடியும்.


ஆன்லைன் விளையாட்டு மூலம் எப்படி உளவியல் தடுப்பூசியை மக்களுக்கு கொடுப்பது?


இது நடக்க காரணம் ஜோன் ரூசன்பீக் என்ற எனது நண்பர்தான். இவர் கேம்பிரிட்ஜில் ரஷ்ய ஊடகங்களின் பிரசாரம் பற்றி படித்துக்கொண்டிருந்தார். எங்களது செயல்பாடுகளைப் பற்றி கேள்விப்பட்டவர். எங்களின் செயல்களில் ஈடுபட முடிவெடுத்தார். பருவச்சூழல் மாற்றம் என்பது உண்மையாக நடப்பது என அறிவியல் முறையில் கூறவேண்டும். ஆனால் அதனைப் பற்றி கேட்க விரும்பாதவர்களுக்கு வேறு வழியில் அதனைக் கூற நினைத்துதான் விளையாட்டைத் தேர்ந்தெடுத்தோம்.



போலிச்செய்திகளை உருவாக்குபவர்களின் தந்திரங்களைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?


போலிச்செய்திகள் தவறான தகவல்களுக்கான அடிப்படை வரைபடத்தை தயாரித்து கொண்டோம். ஓராண்டு செலவு செய்து தவறான செய்திகள் எப்படி உருவாக்கப்படுகின்றன. அதில் கூறப்படும் முக்கியமான அம்சங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தோம். இதில் மக்களை பிரிப்பது, பிறரை கேலி கிண்டல் செய்வது, மூடநம்பிக்கை கோட்பாடுகளை உருவாக்குவது, பிறருக்கு மதிப்பு அளிக்காமல் எழுதுவது ஆகிய விஷயங்களை கண்டறிந்து பதிவு செய்தோம். உதாரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியா மீது போர் அறிவித்தார். இது போலியான செய்தி, இதில் கணக்குகளின் பெயரில் என் என்ற எழுத்துக்கு பதில் எம் என மாற்றியிருந்தார்.கள் இதேபோல வாரன் பபட் கணக்கிலும் பெயரில் சில விஷமங்கள் செய்து ஏராளமான முட்டாள்தன செய்திகளை பதிந்தார்கள். இந்த கணக்கு உண்மையா, பொய்யா என தெரிவதற்கு உள்ளாகவே ஏகப்பட்ட மக்கள் அவரை பின்தொடர தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு பிரச்னையிலு்ம் அரசியல் உண்டு. போலிசெய்திகள் மக்களை மெல்ல பிரிக்கத் தொடங்குகின்றன. எனவே முடிந்தவரை சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களின் அடிப்படையில் ஒன்றைப் பேசுவது சரியானது அல்ல.


2020ஆம் ஆண்டு வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையில் ஹாரிபாட்டர் நாவலில் வரும் வசனம் ஒன்றை கூறி முடித்திருந்தீர்கள். அதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ளலாமா?


போலிச்செய்திகள், தவறான தகவல்கள் என்பது காலம்தோறு்ம மாறிவருகிறது. அதனை வைரஸ் என்று எடுத்துக்கொண்டாலும் கூட அதற்கு பல்வேறு வெர்ஷன்கள் உண்டு. போலிச்செய்திகளைப் பற்றி பேசும்போது டீப்பேக் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதனை கண்டுபிடிப்பது இன்னும் கடினமானது. தந்திரமான நுட்பங்களை எதிர்த்துப் போராட நாமும் நெகிழ்ச்சியான் கண்டுபிடிப்புகளைக் கொண்ட தன்மைக்கு மாற வேண்டும். அப்போதுதான் மாறும் காலத்திற்கேற்ப தவறான தகவல்களை கண்டறிய முடியும். விளையாட்டினை விளையாடும்போதும் காலத்திற்பேற்ப மாற்றங்களுடன் புதிய கண்டுபிடிப்புகளுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் மாற்றப்படும் தகவல்களை செய்திகளை எதிர்கொள்ள முடியும்.


நீங்கள் அறிமுகப்படுத்திய விளையாட்டுகள் மூலம் புதிதாக போலிச்செய்திகளை உருவாக்குபவர்கள் உருவாகிவிடுவார்கள் என பயப்படுகிறீர்களா?


போலிச்செய்திகள் எப்படி பர ப்படுகிறது என மக்களுக்கு விளக்கி கூற கவலைப்படுகிறோமா? என்ற கேள்வியை நாங்கள் முன்னதாகவே கேட்டுக்கொண்டோம். மக்கள் பொதுவாக போலிச்செய்தியை பரப்ப இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று பணம், அடுத்து அரசியல். எனவே நாங்கள் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தினாலும் கூட போலிச்செய்திகள் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று கூறவில்லை. மேலும் விளையாட்டுகள் அரசியல் சார்பானவை அல்ல. எனவே இதன் மூலம் மக்கள் தாங்கள் ஏமாற்றப்படவில்லை என்பதை உணர்வார்கள்.

டிஸ்கவர் இதழ்














கருத்துகள்