உலகை மாற்றுவது எப்படி?

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

உலகை எப்படி மாற்றுவது?


இப்படி யாராவது இருபதுகளில் யோசிக்காமல் இருக்கமுடியுமா? அனைவருக்கும் இந்த எண்ணம் வந்திருந்தாலும் இதனை எப்படி செய்வது என்பதை அறியாமல் இருப்பார்கள். இதனால் நல்லது செய்ய அரசியலுக்கு செல்லலாமா என சேகர் கம்முலா பட நாயகர்கள் போல யோசிப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. ஆனால் அது எடுபடவேண்டுமே? உலகம் மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. கிரேக்க கணிதவியலாளர் ஆர்க்கிமிடிஸ், பூமியில் நிற்பதற்கு எனக்கு இடம் கொடுங்கள். நான் அதனை நகர்த்தி காட்டுகிறேன் என்றார்.


உலகில் மாற்றங்களை நாங்கள் தருகிறோம் என்று செயல்பட்டவர்கள், அதன்வழியே மக்களை கொன்று குவித்திருக்கிறார்கள். நேர்முகமாகவும், மறைமுகமாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகப்போர் குறிப்பிட்ட தலைவர்களின் ஆதிக்க வெறியால் நடந்தது என்றாலும் அதனால் பட்டினியில் விழுந்து இறந்துபோனவர்கள் மக்கள்தான். ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து போல்ஷ்விக்குகள் ஆட்சிக்கு வந்தது மாற்றம் என்றாலும் அதனால் 20 மில்லியன் மக்கள் தங்கள் உயிரைக் கொடுக்கவேண்டியிருந்தது. கிறிஸ்துவ மதமாற்றம், யூதர்களின் அழிப்பு என்பது ஐரோப்பாவையே பெரும் பீதிக்குள் தள்ளியது. நாடு பிடித்து அதனை காலனியாக்கும் ஆங்கிலேயர்களின், டச்சுக்காரர்களின் பேராசைக்கு இன்றுவரைக்கும் பல்வேறு ஏழை நாடுகள் விலை கொடுத்து வருகின்றனர்.


மாற்றம்


இன்று பல்வேறு பருவகாலங்கள் எப்படி வருகிறது என்பதை பார்த்தாலே மாற்றங்கள் எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். பகல், இரவு ஏற்படுவதைப் போலவே மாற்றங்கள் காலம்தோறும் ஏற்ப்ட்டு வருகின்றன. மனிதநேயம் என்பது பொற்கால கட்டங்களில் வீழ்ந்துவிட்டது என கூறப்பட்டது. தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு என்ற காலகட்டத்தில் இப்படி ஏற்பட்டது என ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதிரியார் அகஸ்டின் கூறினார். ஜூடியோ கிறிஸ்துவ மத கொள்கைப்படி, வரலாற்றுக்கு தொடக்கம், நடுப்பகுதி, முடிவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


பெரும்பாலும் மதம் சார்்ந்த சிந்தனையாளர்களின் கருத்தியல் காலம் தாண்டி பயணப்படுவதில்லை. அவை மக்களை மையமாக கொண்டவை அல்ல என்பதால் அதற்கு இப்படியொரு கதி நேருகிறது. கருத்தியலை நடைமுறைப்படுத்தி வெற்றிபெற அரசு, நாடு தேவைப்படுகிறது. இந்தவகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கார்ல்மார்க்ஸ் கூறிய பல்வேறு கொள்கைகளை சோவியத் யூனியன், சீனா, கம்போடியா ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்த முடிந்தது. சரி, தவறுகளை விமர்சிக்கவும் அதனை செயல்படுத்தி பார்க்கும் தேவையிருக்கிறது அல்லவா?


அனைத்து நாடுகளும் குடிமைச்சமூகமாக முன்னேறும்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் நகரமயமாக்கம், தொழில்நுட்பமயமாக்கல், தொழில்துறை முன்னேற்றம் ஆகியவற்றைச் சொல்லலாம். ஜப்பான் பெரும்பாலும் தனது நாட்டை ரகசியம் போலவே இருந்தாலும் பிற்காலத்தில் தொழில்நுட்பத்தில் தங்களை முன்னேற்றிக்கொண்டது இதனால் அந்த நாடு பிற நாடுகளோடு போட்டியில் பின்தங்காமல் முன்னேற முடிந்து. அமெரிக்காவின் உதவிகளைப் பெற்று இன்று முக்கியமான நாடாக மாறியிருக்கிறது. ராணுவ உதவிகளை அமெரிக்கா கொடுத்தாலும் உள்நாட்டு நிறுவனங்களை உலகத்தரத்திற்கு உருவாக்கியதில் அந்நாட்டின் சாதனை அபாரமானது. அதனால்தான் ரஷ்யாவையே ஜப்பான் போரில் தோற்கடிக்க முடிந்த்து.



பிபிசி



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்