பனிரெண்டு ஆண்டுகளில் நாட்டையே அதிரடி சட்டங்களால் மாற்றியமைத்த ஆட்சியாளர் ! ஹிட்லர் - பா.ராகவன்
ஹிட்லர்
பா.ராகவன்
கிழக்கு பதிப்பகம்
ஹிட்லர் பனிரெண்டுகள் ஆண்ட ஆட்சியை, வளர்ச்சியை, அழிவை, மனநிலையை, பழக்க வழக்கங்களை வாசிக்க எளிமையான முறையில் சுவாரசியமாக சொல்லுகிற நூல்தான் இது.
மருதன் எழுதிய ஹிட்லர் என்ற நூலும், பா.ராகவனின் நூலும் வேறுபடுகிற இடம் ஆய்வுத்தன்மைதான். மருதனின் நூல் ஹிட்லரின் பல்வேறு பரிணாமங்கள், அவரின் சிந்திக்கும் திறன், பேச்சு ஆகியவற்றை ஆய்வு நோக்கில் எது சரியாக இருக்க முடியும் என்ற கோணத்தில் பார்க்கிறது. பா.ராகவனின் இந்த நூல் அந்தளவு தொலைவாக செல்லவில்லை.
ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளை சந்தர்ப்பவாதி ஒருவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதை ஹிட்லர் நூல் மூலம் காட்டியுள்ளார். பலரும் இன அழிப்பு, யூதர்களின் துன்பம் என்பதை மட்டும் முக்கியப்படுத்தும்போது பொருளாதார வளர்ச்சி சார்ந்து நாடு என்ன நிலையில் இருந்தது என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஆச்சரியகரமான ஒன்று என கூறலாம். ஹிட்லரின் செயல்திறனுக்கும் கனவுக்க்கும் உழைக்கும் திறனுக்கும் அவர் வேறு வழியில் சென்றிருந்தால் ஜெர்மனியின் நிலை இன்னும் உயர்ந்திருக்கும். ஹிட்லரு் பிறர் போற்றும்படியான சிலை வைத்து வணங்கும்படியான தலைவராக இருந்திருப்பார்.
நூலின் தொடக்கத்தில் அவரின குடும்பம் யூத கலப்பு கொண்டது என்ற வெடிகுண்டை ஆசிரியர் வீசிவிடுகிறார். இதனால் அவரது யூத அழிப்பு என்பதை எப்படி உருவாக்கிக்கொண்டார் என்பதை இயல்பாகவே வாசகர்கள் தேடத் தொடங்குகிறார்கள். இப்படி ஒரு சுவாரசியத்தை ஆசிரியர் தொடக்கத்திலேயே உருவாக்கிவிடுகிறார். இதன்பின்னர் ஹிட்லரின் வரலாறு படிப்பதற்கு எளிதாகிறது. பிற நூல்களுக்கும் பா.ராகவனின் இந்த நூலுக்குமான வேறுபாடுகள் என்னவென்றால், ஹிட்லரின் அரசியல் வாழ்க்கை, இன அழிப்பு இதற்கான விவகாரங்களோடு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவருடைய குடும்பம், சகோதரியின் வாழ்க்கை, நட்பு வட்டம் என பல்வேறு விஷயங்களையும் பேசியிருக்கிறார். இதனால் இந்த நூலை படித்தபிறகு, பிற விஷயங்களை அறிந்துகொள்வதற்கான ஆர்வம் கூடுகிறது.
பனிரெண்டுகால ஆட்சியில் அடித்து விளையாடிய ஆட்சியாளர்!
கோமாளிமேடை டீ்ம்
கருத்துகள்
கருத்துரையிடுக