குடிமக்களின் அவசியமான உரிமைகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பறிக்க நினைக்கிறது மத்திய அரசு! - கபில் சிபல்
தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் தேசிய பாதுகாப்பு சட்டம்
2019ஆம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைப்படுத்திய தேசியபாதுகாப்பு சட்டம் , தீவிரவாத த்தி்கு எதிரானது என்று கூறப்பட்டது. ஆனால் இந்த சட்டம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று முதலிலேயே அஞ்சப்பட்டது. அதற்கு ஏற்ப பத்திரிகையாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என பலரின் மீதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் மீது தேச விரோதி என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டு உரிமைகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை அமைதியாக்கி வருகிறார்கள்.
மக்களவையில் உள்துறை அமைச்சர் ஆகஸ்ட் 2ஆம் தேதி பேசும்போது, இந்த சட்டத்தில் தீவிரவாத த்திற்கு ஆதரவானர்களும்., அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பிறருக்கு இதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டது. மனித உரிமைகள் இந்த சட்டத்தின்படி பாதிக்கப்படாது என்று அமைச்சர் கூறினார். ஆனால் சட்டம் நடைமுறையில் வேறுமாதிரி செய்லப்ட்டது. குற்றவாளிகள் என சந்தேகம் வந்தால் கூட ஒருவரை சிறையில் அடைத்துவிட்டு பிறகு ஆற அமர்ந்து ஆதாரங்களை சேகரித்து குற்றங்களை தயாரித்துவிடலாம். அதுவரையில் ஒருவரை சிறையில் வைத்திருக்கி புதிய சட்டம் அனுமதிக்கிறது.
உலக நாடுகளில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு சட்டம் என்பது பல்வேறு உலகளவிலான தீவிரவாத இயக்க அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பது, அவர்களுடன் இணைந்து மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவது, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, குறிப்பிட கொள்கையை முன்வைத்து செயல்படுவது ஆகியவற்றை தீவிரவாத சட்டத்தில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மரணத்தை ஏற்படுத்துவது, தாக்குவது, சொத்துக்களை சேதப்படுத்துவது ஆகியவை இந்திய அரசின் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவரின் பேச்சு, ஆவணங்கள் ஆகியவையும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டால் அவையும் வழக்கு தொடுப்பதில் பயன்படுத்தப்படும்.
2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் 33 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீதான வழக்கு நிரூபணத்தின் அளவு 29.2 சதவீதமாக உள்ளது. இதிலிருந்து எப்படி அப்பாவி மக்கள் வெறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறியலாம். இப்படி சிறையில் அடைபட்டவர்களுக்கு பிணையும் வழங்கப்பட மாட்டாது என்பது முக்கியமான அம்சம். சார்ஜ்சீட் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஆறுமாதங்களுக்கு பிணை கிடையாது என்பது இதிலுள்ள கடுமையான விதி. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 9 சதவீதம் மட்டுமே சார்ஜ் சீட்டுகள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. ஒருவேளை அரசு இதில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டாலும் கூட அவர்களை ஆறுமாதம் சிறைதண்டனை அனுபவிக்க செய்யமுடியும் என்பது அரசு தரப்புக்கு லாபம். சிறைபட்டவர் வெளியே வந்தாலும் அவருக்கு இழந்த மதிப்பும் மரியாதையும் திரும்ப கிடைக்காது. இவருக்கான வேலைவாய்ப்புகளும் இல்லாமல் போகிறது.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என்பது சலுகையல்ல. அது நமக்கு அரசியலமைப்புச்சட்டம் தரும் உரிமை. ஆனால் அரசு அதனை தீவிரவமான சட்டங்கள் மூலம் முடக்குகிறது. போராட்டம் என்பதை தனது அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாக அரசு பார்க்கிறது. இதனால்தான் மனித உரிமைகளை நசுக்கும் மக்களை சிறைப்படுத்தும், ஜனநாயகத்தை முடக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
கபில் சிபல்
முன்னாள் மத்திய
அமைச்சர், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக