குழந்தை பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை தளர்த்தும் சீன அரசு
மூன்று குழந்தை - சீனாவின் புதிய கொள்கை ரெடி
சீனாவில் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்து வருகின்றனர். இதனால் மூன்றாவது குழந்தையை ஒருவர் பெற முயன்றால், குழந்தையை அரசே கருக்கலைப்பு செய்வதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. சீன அரசு, இந்த கொள்கையை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது. நகரங்களில் குழந்தைகளுக்கான கல்விச்செலவு, வீட்டுக்கான வாடகை பெருமளவு அதிகரித்து வந்ததால் பெரும்பாலானோர் மிகவும் கஷ்டப்பட்டனர். இதை தீர்க்கும் விதமாக அரசே இரண்டு குழந்தைகள் சட்டம் உருவாக்கப்பட்டது என சீன அரசு நாளிதழ்கள் கூறின.
1970இல் ஒரே குழந்தை சட்டம் அமலாகி 2016 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் நடைமுறையில் இருந்தது. சிறுபான்மையினருக்கு மட்டும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு அரசு இந்தக் கொள்கையை மாற்றிக்கொண்டது. இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகையை அரசு வழங்கவேண்டியிருந்தது நிதிச்சுமையை ஏற்படுத்தியது. இக்கொள்கையின் விளைவால் வயதானவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்தது அரசின் குடும்பக்கட்டுப்பாட்டு கொள்கையில் மாற்றம் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.
கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதை சீன அரசு செய்த ஆய்வு வெளிப்படுத்தியதுள்ளது. எனவே வரும் 2025இல் குழந்தைகள் பிறப்புக்கான கொள்கை தளர்த்தப்பட வாய்ப்புள்ளது. கொள்கைகளை அப்படியே கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்தால் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கான ஆட்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். கடந்த மே மாதம் மக்கள்தொகை எண்ணிக்கை தகவல் வெளியிடப்பட்டது. இதில் 72 மில்லியன் மக்கள் மட்டுமே அதிகரித்துள்ளது தெரியவந்தது. மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 0.53 சதவீதமாக உள்ளது. 1953ஆம் ஆண்டு மக்கள்தொகை சீனாவில் எடுக்கப்படத் தொடங்கியது. அந்தவகையில் இது முதல்முறையாக குறைந்த மக்கள்தொகை சதவீதமாகும்.
பெ்ய்ஜிங் அரசு கடந்த மாதம் தனது குடிமக்களுக்கான இரண்டு குழந்தை கொள்கையை தளர்த்தியது. இதன்மூலம் மக்கள் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அரசு எடுத்த இந்த முடிவு கூட மிக தாமதமானது என்று விமர்சித்து வருகின்றனர்.
ஹெச்டி
கருத்துகள்
கருத்துரையிடுக