மாற்றுப் பாலினத்தவர்கள் ஒன்றாக திரண்டால் மட்டுமே அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும்!

 

 

 

 

 

 

 

 

 

168pp, ₹595; Rupa & Pride Circle

LGBTI jobs: Pride Circle has a good thing going - Civil ...
ராமசுவாமி

 

ஈக்குவலி ஸ்டோரிஸ் பை பிரண்ட்ஸ் ஆப் தி க்யுர் வேர்ல்டு என்ற பெயரில் நூல் வெளியாகியுள்ளது. இதனை ஶ்ரீனி ராமசுவாமி, ராமகிருஷ்ண சின்கா ஆகியோர் இணை ஆசிரியர்களாக பணியாற்றி தொகுத்துள்ளனர். இதில் 45 பேரின் கதைகள் உள்ளன. நூலைப்பற்றி அவர்களிடம் பேசினோம்.


கூட்டணி என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


மாற்றுப்பாலினத்தவர்கள் ஒன்றாக இணைந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டால்தான் அவர்கள் இ்ங்கு வாழ முடியும். இதைத்தான் நாங்கள் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளோம். ஒருவர் தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து பிறரை புரிந்துகொள்ள முடியும். இதற்கு அவர்கள் ஒன்றாக இணைவது முக்கியமானது.


நீங்கள் வெளியே வருவது பற்றி கூறுகிறீர்கள். அதைப்பற்றி விளக்குங்களேன்.


வெளியே வருவது என்று நான் கூறியது, தங்களது விருப்பம் பற்றி மாற்றுப் பாலினத்தவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதுதான். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள் என அனைவரும் மாற்றுப்பாலினத்தவரின் கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்க கூடியவர்கள். இவர்கள் அனைவருமே ஒரு கூட்டணியாக திரண்டால் தங்களுக்கான கோரிக்கைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். தங்கள் மீது பிறர் கற்பிக்கும் களங்கம், கேலி, கிண்டல்களை ஒருவர் பொறுத்துக்கொள்ளுவது தனிநபரை விட இயக்கமாக எளிதாக இருக்கும்.


நம்மிடையே நண்பர்களாக, முதலாளிகளாக மாற்றுப்பாலினத்தவர் இருப்பதை யாருமே விரும்புவதில்லை. இதனால் அவர்கள் எப்போதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். கூட்டணி மூலம் நாங்கள் அனைவருக்குமான இடத்தை உருவாக்கமுடியும்.


ஒருவர் அமைதியாக மாற்றுப்பாலினத்தவரை ஆதரிப்பதில் என்ன ஆபத்து உள்ளது?


நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் ஓரினச்சேர்க்கை பற்றிய ஜோக்கை நண்பர் சொல்லுகிறார். அப்போது அதனை நீங்கள் ஏற்காதபோதும் அமைதியாக இருந்துவிட்டால் பின்னர் அவருக்கு தான் செய்வது மோசமான செயல் என்பதே தெரியாமல் போய்விடும். அந்த இடத்திலேயே தவறுகளை கண்டிக்கவேண்டும். தனியாக இருக்கும்போது ஒருவரால் இதனை செய்ய முடியாது. நாம் அனைவரும் குழுவாக திரண்டால் இதனை எதிர்க்கலாம்.


ஒருவரை மாற்றுப்பாலினத்தவர் என்று அடையாளப்படுத்துவதில் ஏதாவது பயம் இருக்கிறதா?


நிச்சயமாக. நான் மாற்றுப்பாலினத்தவராக இல்லாதபோதும் இதுதொடர்பாக பணியாற்றியும்போது மக்களின் முதல்கேள்வி நான் மாற்றுப்பாலினத்தவரா என்பதுதான். இதுபோன்ற கேள்விகள் மாற்றுப்பாலினத்தவர்களும் பிறரும் கூட கேட்பதுதான் வேடிக்கையும் வேதனையும் கூட. இதை மாற்றுவதற்குத்தான் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைவது அவசியம். பொதுவாக மக்களுக்கு தங்களின் பாலின அடையாளம், பாலின தன்மை பாதுகாப்பாக இருக்கிறது. எனவே அவர்கள் இதுபற்றிய உரிமைகளை பற்றி பேசுவதில்லை. இந்த செயல்முறை உடனே மாற்றம் பெறாது. நீண்டகாலம் தேவை.


நான் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிங்க், பர்பிள் நிற சட்டைகளை அணிந்துகொண்டு செல்வேன். அப்போது சிலர் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா என்று கேள்வி கேட்பார்கள். நான் மாற்றுப்பாலினத்தவர் இல்லாத நிலையில் எதற்கு அவர்களுக்கு உரிமை பெற்றுத்தர நினைக்கிறீர்கள் என்று கூட கேட்டிருக்கிறார்கள். நான் இப்போது இந்தக் கேள்விகளை பொருட்படுத்துவது இல்லை. அமைப்பாக இருக்கும்போது இதுபோன்ற கேள்விகளை விட கள செயல்பாடு முக்கியமாகிறது.


இப்படி அனைத்து மாற்றுப்பாலினத்தவரும் ஒன்றாக அணிதிரள்வது என்பது விமர்சனங்களை தவிர்ப்பதற்கு என்று கூறமுடியுமா?


இப்போது நான் ஓரினச்சேர்க்கையாளன் என்றாலும் கூட மாற்றுப்பாலின மக்களின் அனைத்து பிரச்னைகளையும் என்னால் தீர்க்க முடியாது. காரணம், அத்தனை பிரச்னைகளும் எனக்கு தெரியாது, புரிந்துகொள்ள முடியாது என்பதுதான். சிலர் இதில் விதிவிலக்காக உழைத்து வருகிறா்ர்கள் என்பது உண்மை. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாது.


அமைப்பாக மாற்றுப்பாலினத்தவர்கள் இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளை எளிதாக தீர்க்க முடியும். இதுதொடர்பான ஏராளமான விஷயங்களை கற்றுக்கொள்ளவும் முடியும்?


இந்துஸ்தான் டைம்ஸ்


சிந்தன் கிரிஷ் மோடி


கருத்துகள்