இந்தியா, சீனா ஆகிய நாடுகளில்தான் நகரமயமாதல் வேகம்பிடிக்கும்! - அனு ராமசாமி பொறியாளர்
பொறியாளர் அனு ராமசாமி
நகரமயமாதல் மக்கள்தொகைக்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள். இதுபற்றிய தங்களது கருத்து?
பலரும் நகரங்கள் உருவாவதை எதிர்மறையாகவே கருதுகிறார்கள். இப்படி நகரங்கள் உருவாகி வளர்ச்சி பெறுவதை நான் வளர்ச்சியின் அடையாளமாகவே கருதுகிறேன். உலகில் தொண்ணூறு சதவீத செல்வம் நகரங்களிலிருந்துதான் கிடைக்கிறது. இப்படி பெறப்படும் செல்வம் விநியோகிக்கப்படுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று கூறலாம்.
நகரங்களில் இன்னும் சில பிரச்னைகள் உள்ளன. குற்றச்செயல்கள் கூடுவது, காற்று மாசு அதிகரிப்பது ஆகியவற்றைக் கூறலாம். எனவே இப்போது நீங்கள் கேள்வியை நகரமயமாக்கல் தவறு என்று கேட்க கூடாது. அதனை எப்படி ஆக்கப்பூர்வமான வழியில் செய்வது? அங்கு வாழும் மக்கள் நலமுடன் வாழ என்ன செய்யலாம் என்பதாகவே இருக்கவேண்டும்.
சூழலுக்கு உகந்த நகரமயமாக்கல் என்று கூறுகிறீர்கள். இதைப்பற்றி விளக்குங்களேன்.
மனிதர்கள் கட்டும் கட்டிடங்களில் எந்தளவு ஆற்றல் செலவாகிறது, அதனைக் கட்ட எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்துகிறோம், மக்களின் விருப்பம், அரசின் கொள்கைகள், வெளிப்புற சூழலுக்கு கட்டிடங்கள் எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்துகின்றன ஆகியவையும் முக்கியமானவை. நகரங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவற்றை நகர எல்லைக்குள், வரம்பிற்குள் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை எஙகள் குழு ஆராய்ச்சி செய்தது. சூழலுக்கு உகந்த கட்டிட அமைப்பு என்பது இதுதான். குடியிருப்பு, நீர், உணவு, ஆற்றல், போக்குவரத்து வசதி, சுகாதாரம், பசுமைப்பகுதி ஆகியவை நாங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள். இதனைத் தாண்டி இதுபோன்ற கட்டுமானங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம், பல்வேறு வர்க்கங்களில் ஏற்படும் இடைவெளி ஆகியவையும் ஆய்வுக்குரியவை. நாங்கள் மக்கள் தங்களுக்குள் கொள்ளும் தொடர்புகளையும் கணக்கில் கொள்கிறோம். இந்த வகையில் நகரம் தாண்டியும் நாங்கள் ஆய்வுகளை மேற்கொள்கிறோம்.
2018இல் ஐ.நா அமைப்பு வெளியிட்ட தி வெய்ட் ஆப் சிட்டிஸ் என்ற ஆய்வறிக்கையில் சூழலுக்கு உகந்த கட்டுமானங்கள் கார்பன் வெளியீட்டைக் குறைக்க பெரியளவு உதவாது என்று கூறப்பட்டுள்ளதே?
இந்த அறிக்கை கூறுவது, சூழலுக்கு உகந்த கட்டுமானங்களின் செயல்திறன் பற்றிய அறிக்கை அது. இதில் நிறைய விஷயங்களைக் கருத்தில் கொள்கிறார்கள். நிலத்தை எந்தளவு பயன்படுத்துகிறோம், சதுர மீட்டருக்கு கட்டுமான பொருட்களை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதும் முக்கியமானது. பொதுப்போக்குவரத்து வசதிகள், பொதுவான இடங்களை உருவாக்குவது ஆகியவையும் இதன் அம்சங்கள். நகரில் பல்வேறு புதுப்பிக்கும் தன்மை கொண்ட தொழிலகங்களை உருவாக்குவதும் இதில் சேரும். நகரம் என்பது புதிதா, பழையதா என்பதைப் பொறுத்து கட்டுமானங்களை பொறியாளர்கள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி சாத்தியமாகும். வளர்ச்சியடைந்த நகரில் போக்குவரத்தும், மக்களின் வாழ்க்கை முறையும் எளிதாக இருக்கும். இதற்கு சரியான எடுத்துக்காட்டு லண்டன். அங்கு வாழும் மக்களின் அடர்த்திக்கு ஏற்ப நகரம் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சீனா, 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் கான்க்ரீட்டை கட்டுமானத்திற்கு அதிகம் பயன்படுத்தியுள்ளது. இதனை பார்க்கும்போது நாம் தவறான திசை நோக்கி நகர்வதாக தோன்றுகிறதா?
சீனாவின் வளர்ச்சி என்பது ஆச்சரியமானதல்ல. நகரமயமாக்கம் அதிகரிக்கும்போது அதுதொடர்பான பிரச்னைகளும் பின்தொடர்வது இயல்பானதே. சீனாவில் மக்கள்தொகை தொடர்ச்சியாக உயர்ந்துவருகிறது. சில நாடுகளில் மக்கள் அதிகளவு கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். நகரங்களின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த அளவு அங்கு வாழும் மக்களைப் பொறுத்து அமைகிறது. சீனாவில் நடைபெறும் வளர்ச்சி என்பது இந்தியாவில் நடக்க ஏழாண்டுகள் தேவைப்படுகிறது. ஏறத்தாழ இரண்டு மடங்கு காலம் அவசியமாகிறது.
நகரின் அளவு, அங்கு அமைக்கப்படும் கட்டமைப்பு, அதற்கு என்ன பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என பல்வேறு அம்சங்களை நாம் கவனிக்கவேண்டியதிருக்கிறது.
நகரமயமாக்கல் பற்றி பேசும்போது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதும் முக்கியம்தானே?
ஆமாம். கட்டுமானத்துறையில் வல்லுநர்களை தேவை எனும்போது அவர்களின் நகரங்களை உருவாக்கும் புதிய யோசனைகள், அடிப்படைக் கட்டமைப்பு பொறியியல் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கவேண்டும். தொழில்துறை சூழல், நகரமயமாக்கலின் வளர்சிதை மாற்றம் ஆகியவையும் இதில் முக்கியமானது. தேசிய அறிவியல் பவுண்டேஷன் ஆதரவில் நான் பல்வேறு திட்டங்களில் பங்கேற்றுள்ளேன். ஐ.நாவின் பல்வேறு பயிற்சி திட்டங்களில் இணைந்துள்ளேன். என்னுடைய முன்னாள் மாணவர்கள் பலரும் நகரங்களை வடிவமைப்பதில் பங்கேற்றுள்ளனர்.
அரசு உங்கள் திட்டங்களை கவனிக்கிறதா?
ஐ.நாவின் வெய்ட் ஆப் சிட்டிஸ் அறிக்கைக்கு பிறகு அதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டோம். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஏற்படும் நகரமயமாக்கலை மையமாக கொண்ட அறிக்கைகள் இவை. குறிப்பிட்ட நிலப்பரப்பு ரீதியாக நகரங்களை எப்படி அமைக்கவேண்டும் என்பதை நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால் அரசு எங்களது யோசனைகளை கவனிக்கவில்லை என்பதே உண்மை. நகரங்களை குறிப்பிட்ட நோக்கத்தை முன்வைத்துதான் உருவாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக அகமதாபாத் நகரை விரிவாக்கம் செய்யவேண்டுமெனில் அரசின் வேகத்தில் சென்றால் 30 ஆண்டுகள் தேவை.
நியூ சயின்டிஸ்ட்
லாரா ஸ்பின்னி
கருத்துகள்
கருத்துரையிடுக