அமெரிக்காவை விட உத்தரப் பிரதேசத்தில் இறப்பு சதவீதம் குறைவுதான்! - யோகி ஆதித்யநாத், முதல்வர், உத்தரப்பிரதேசம்
யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர்
ஆக்சிஜன், படுக்கை, மருந்துகள் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் அதிகளவு கோவிட் 19 இறப்புகள் நேர்ந்துள்ளதை ஏற்கிறீர்களா?
இந்த விவகாரத்தில் நாம் அரசியல் செய்யக்கூடாது. வளர்ந்த நாடுகளை விட பிற மாநிலங்களை விட எங்களது மாநிலத்தில் குறைவான இறப்புகளே நோய்த்தொற்றால் நடந்துள்ளன.
நாங்கள்தான் முதல் மாநிலமாக ஆக்சிஜன் சப்ளையை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை செய்தோ்ம். இங்கே அதிகளவு ஆக்சிஜனை தயாரிக்கும் ஆலைகள் இல்லாதபோதும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்தும் அதனை பெற்று வழங்கினோ்ம். இதற்கான ஆக்சிஜன் உருளை தணிக்கை முறையையும் இங்கு அமல்படுத்தியுள்ளோம்.
தடுப்பூசியை பெண்களும், கிராமத்திலுள்ளவர்களும் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இவர்களை எப்படி ஊக்கப்படுத்தப் போகிறீர்கள்?
நாங்கள் மூடநம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம். எதிர்க்கட்சியினர் தடுப்பூசி பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர். கிராமத்தில் உள்ள மக்களுக்காக ஆப்களை உருவாக்கியுள்ளோம். மக்களுக்கு உதவ 1,33,000 பொது சேவை மையங்களை இயக்கி வருகிறோம்.
போலியோ மருந்து திட்டத்தை எதற்கு மத தலைவர்கள் மூலம் நடைமுறைப்படுத்துகிறீர்கள்? அதற்கு என்ன அவசியமிருக்கிறது?
உத்தரப் பிரதேசத்தில் தடுப்பூசிகளை நாங்கள் வீட்டுக்கு வீடு வழங்கி வருகிறோம். இதனை கிராம பஞ்சாயத்துகளில் மத தலைவர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று வழங்குகிறோம். இதன்மூலம் மாநிலம் முழுவதும் தடுப்பூசி பற்றிய அக்கறை வளரும்.
உலகளவிலான ஒப்பந்தம் கோரி தடுப்பூசிகளை தயாரிக்கும் பணி ஏன் வேலை செய்யவில்லை?
உத்தரப்பிரதேச மாநிலம்தான் 40 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக பைசர், மாடர்னா உள்ளிட்ட ஆறு நிறுவனங்களை அணுகியது. அவர்களின் ஒப்பந்தங்களை மறுசீரமைப்பு செய்து பல்வேறு வெப்பநிலையில் செய்ல்படும்படி அதனை மாற்றி வருகிறோம். இப்போதும் கூட அவர்களிடம் நாங்கள் தொடர்புகொண்டுதான் வருகிறோ்ம்.
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தீர்கள். அதில் என்னென்ன விஷயங்களை அறிந்துகொண்டீர்கள்?
சாலை வழியாகவும் வான் வழியாகவும் ஆறாயிரம் கி.மீ தூரம் பயணித்து 45 மாவட்டங்களுக்கு சென்று வந்தேன். நான் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினேன். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்க தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குழு தலைவராக நான் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஊக்கப்படுத்துவது அவசியம் என்று நினைக்கிறேன்.
உத்தரப்பிரதேச அரசு கோவிட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதாக கூறப்படுகிறதே?
உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் எங்களை வந்து பார்வையிட்டுவிட்டு எங்களது செயல்பாடுகளை பாராட்டி விட்டு சென்றிருக்கிறார்கள். சிலர் நாங்கள் வெளியிடும் தகவல்களை தவறான கோணத்தில் பார்த்து அரசை குறை சொல்கிறார்கள். நாங்கள் இரண்டாவது அலையை சிறப்பாக கட்டுப்படுத்திய
உள்ளோம். எங்களது மாநிலத்தில் லட்சத்திற்கு 64 பேர்தான் இறந்துமள்ளனர். இது அமெரிக்காவில் இறந்த மக்களின் எண்ணிக்கையை விட குறைவுதானே?
இந்துஸ்தான் டைம்ஸ்
சுனிதா ஆரோன்
கருத்துகள்
கருத்துரையிடுக