உடலை கீறி, துண்டாக நறுக்கி இன்பம் அனுபவித்த கொலைகாரர்கள்

 

 

 

 

அடையாளம், சடங்குகள்


தனது மனதில் தோன்றும் கற்பனை, அதன் உந்துதலில் கிடைக்கும் வாய்ப்புகளால் ஒருவர் கொலை செய்கிறார். அதேசமயம் ஏதாவது மெசேஜ் சொல்லியே ஆகவேண்டும் என யோசிக்கும் ஆட்களும் இந்தவகையில் உண்டு. இவர்கள் சாத்தானின் வடிவம், கற்கள், பேப்பர் என எதையாவது மடித்து கொலை செய்யப்பட்டவரின் உடலில் திணித்துவைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இவர்கள், இதன் மூலம் காவல்துறைக்கு தங்களது அடையாளத்தை சொல்லுகிறார்கள். இதன் மூலம் அடுத்து நடக்கும் கொலைகளையும் கூட ஒருவர் கண்டுபிடிக்கலாம். இதெல்லாம் துப்பறியும் ஆட்களின் திறமையைப் பொறுத்தது.


ஜோடியாக் கில்லர் என்பவர் வட்டம் வரைந்து அதில் சிலுவையை வரைந்து விட்டு சென்றார். போஸ்டனைச் சேர்ந்த கொலைகாரர் பிறந்த நாள் ரிப்பன் வடிவத்தை வரைந்துவிட்டு செல்வது வழக்கம். ராமிரெஸ் சாத்தானைக் குறிக்கும் அடையாளத்தை வரைந்தார். க்ரீன் ரிவர் கில்லர் என்பவர், பெண்களின் யோனியில் பிரமிட் வடிவ கற்களை திணித்து வைத்தார். இப்படி வரைவது ஒருவகையில் இவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டவும், ஊடகங்கள் நாயகர்களாக அல்லது தீய சக்தி என கூறப்படக்கூட காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் ஆபத்தான சைக்கோ கொலைகார ர்கள் என்று கூறப்படும் டெட் பண்டி, ஜெப்ரி டாமர், டீன் கோரல், ரோஸ்மேரி வெஸ்ட் ஆகியோர் எந்த அடையாளத்தையும் கொலையான இடத்தில் வரையவில்லை. இவர்கள் தாங்கள் செய்யும் கொலைககள் ரகசியமாக இருக்க வேண்டுமென நினைத்தனர்.


சில வகை கொலைகாரர்கள் இறந்துபோன உடலை குறிப்பிட்ட வகையில் சிதைத்து குறிப்பிட்ட கோணங்களில் வைத்துவிட்டு செல்வார்கள். சில பெண்களின் மார்பகங்களில் கொலையாளின் முன்பற்கள் கடித்த தடயங்கள், பெண்களின் முன்பற்களை மட்டும் உடைத்து எறிவது என வேறு லெவலில் யோசிப்பது எல்லாம் நடந்திருக்கிறது. இதுபற்றி நிறைய விஷயங்களை அறிய ராபர்ட் என்பவர் எழுதிய சிக்னேச்சர் கில்லர் என்ற நூலை வாசிக்கலாம்.


முறைகள்


மனிதர்களை கொல்வதற்கான வேட்கையை மனிதர்கள் கொல்வது என்பதை இருவகையாக பார்க்கலாம். சிறுவயதில் சிலருக்கு பின்னாளில் உலகையே பீதிக்குள்ளாக்கும் அறிகுறிகள் தெரியலாம். சிலருக்கு வாழ்க்கையில் நடக்கும் திடீர் சம்பவங்களை அவர்களை குற்றவாழ்க்கையில் தள்ளும். தொடர்ச்சியாக கொலை செய்பவர்களை மூன்று வகையாக கூறலாம். வினோதமான பாலியல் மகிழ்ச்சிக்காக கொலைகளை செய்யும் உளவியல் குறைபாடு கொண்டவர்கள், அடுத்து, மனதில் தோன்றும் மாயக்காட்சிகளால் பாதிக்கப்பட்டு கொலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற பராமரிப்பாளர்கள், மூன்றாவதாக விஷத்தை பயன்படுத்திக் கொல்பவர்கள். இதிலும் கூட ஒருவரின் நோக்கம் பொறுத்து அவர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.


காதில் சாத்தானின் குரலைக் கேட்டு அதன்படி கொலைகளை செய்பவர்கள், உலகை மோசமானவர்களிடமிருந்து காப்பதற்காக வந்ததாக கற்பனை செய்துகொண்டு குறிப்பிட்ட ஆட்களையே கொல்பவர்கள், வினோதமான மன திருப்திக்காக கொலை செய்பவர்கள், அதிகாரம், பிறரைக் கட்டுப்படுத்துவற்காக கொலைகளை செய்பவர்கள். ஒருவர் பயன்படுத்தும் ஆயுதம், கொலை செய்யும் விதம், குறியீடு, வினோதமான கற்பனை கொலை யுக்திகள், சித்திரவதை முறை ஆகியவற்றையும் வைத்து குற்றவாளியின் மனதை அறியலாம். எந்த குற்றவகையில் சிக்காத கொலைகார ர்களும் உண்டு. இவர்கள் கிடைக்கும் ஆயுதங்களை வைத்து மனிதர்களை கொலை செய்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். கேரி டெய்லர் என்பவர், சிலரை துப்பாக்கியால் சுட்டார், சிலரை கழுத்தை நெரித்துக்கொன்றார், பிறரை கத்தியால் குத்தினார். இவரை எப்படி எதில் அட்டவணைப்படுத்துவீர்கள்? ஆயுத வளர்ச்சியிலும் விற்பனையிலும் அமெரிக்காவில் உள்ள வியாபாரம் அளவுக்கு எங்குமே நடப்பதில்லை. ஆனால் தொடர் கொலைகார ர்களை பொறுத்தவரை துப்பாக்கியை எடுத்து குற்றவாளியை சுடுவதிலும், அவர்கள் ரத்தத்தை லிட்டர் கணக்கில் கீழே கொட்டி உடனே இறப்பதை விரும்புவதில்லை. அவர்களை கழுத்தை நெரித்து அல்லது அவர்களை துண்டாக வெட்டி நெருக்கமாக நின்று இறப்பதை பார்க்க நினைக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு வினோதமான மகிழ்ச்சியைத் தருகிறது.


அக்குவேறு ஆணிவேராக பிரித்து.. .


மேலே தலைப்பில் சொன்னது பாடங்களைப் பற்றி அல்ல. கொலையாளிகளில் சிலர் வினோதமாக மன மகிழ்ச்சிக்காக கொன்றவர்களின் கண், காது, மூக்கு ஆகியவற்றை அறுப்பது, இதயத்தை எடுத்து தின்பது, வயிற்றைக் கிழித்து குடலை வெளியே எடுத்து வீசுவது, மா்ர்பகங்களையும் பாலுறுப்புகளையும் தனியாக அரிந்து எடுப்பது ஆகியவற்றையும் இதில் சேர்க்கலாம். இப்படி வினோதமாக அருவெறுக்கும் விதமாக கொலைகளை செய்பவர்களை ரிப்பர் என்று அழைக்கின்றனர். உடலைத் திறந்து ரத்தம் மேலே பீச்சியடிக்க உடல் உறுப்புகளை பார்ப்பது பாலியல் மகிழ்ச்சியை கொலையாளிகளுக்கு அளிக்கிறது என்று உளவியலாளர்கள் சொல்லுகின்றனர். சைக்கோ கொலைகார ர்களில் பலருக்கும் உடலை வெட்டித் திறந்து வைத்துவிட்டு சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் கூட இருந்திருக்கிறது. இப்படி கொலைவெறித் தாண்டவம் ஆடிய பீட்டர் என்பவரைப் பார்ப்போம்.


பீட்டர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் ஜாக் என்ற மர்ம மனிதர் எப்படி இங்கிலாந்து தெருக்களில் நடமாடியவர்களை பாரபட்சம் பார்க்காமல் கொன்று குவித்தாரே அதுபோலவே செயல்பட்டவர். இவரை காவல்துறை பிடித்தபோது, நான் தெருக்களை சுத்தம் செய்தேன். அவ்வளவுதான் என தான் செய்த கொலைகளைப் பற்றி பேசியிருக்கிறார். சிறுவயதில் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வளர்ந்திருக்கிறார். அப்பாவைப் பொறுத்தவரை அம்மாவை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியவர். இதனால் அவருக்கு உடலுறவு என்றாலே வெறுப்பு தோன்றிவிட்டது. பதினைந்து வயதில் பள்ளியை விட்டு நின்றவர். தனக்கென வேலையைத் தேடிக்கொண்டார். பிறகு, இருபத்தியெட்டு வயதில் முதல்முதலாக ஒரு பெண்ணை சந்தித்து பிடித்துப்போக அவரையே திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது மனம் அமைதியாக இல்லை.



தொடக்க காலத்தில் பிணவறையில் கூட வேலை பார்த்திருக்கிறார். அங்குள்ள பிணங்களை பல்வேறு கோணங்களில் படுக்க வைத்து பார்த்து ரசிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொண்டார். மெழுகுச்சிலைகளை கொண்ட அருங்காட்சியகங்களுக்கு சென்று பார்வை்யிடுவதும் பீட்டருக்ககு பிடித்தமானது. 1975ஆம் ஆண்டு தொடங்கி 1981ஆம் ஆண்டு வரையில் ஏராளமான பெண்களைக் கொன்றார். தெருவில் செல்லும் பெண்களை முதலில் சுத்தியால் தலையில் அடித்து சுயநினைவை இழக்க வைப்பது, பிறகு அவர்களின் பாலுறுப்பில் கத்தி அல்லது ஸ்கரூ ட்ரைவரை செலுத்தி உடல் உறுப்புகளை கிழித்து கொல்வது என்பதுதான் பீட்டரின் பாணி. கொலைகளின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியவுடன் ஏராளமான மக்களை கா்வல்துறை விசாரிக்கத் தொடங்கியது. வண்டி ஓட்டும் டிரைவரான பீட்டரை ஒன்பது முறை விசாரித்தாலும் நைசாக பதில் சொல்லி சைசாகி தப்பிவிட்டார். ஆனால் ஒருமுறை வண்டியில் விலைமாது ஒருத்தியோடு இருந்தபோது போலீஸ் கண்டுபிடித்து விசாரித்தது. நம்பர் 1 அவசரம் என சுண்டுவிரலைக் காட்டிய பீட்டர் விலைமாதுவை கொல்வதற்காக வைத்திருந்த சுத்தியையும் கத்தியையும் தூக்கியெறிந்துவிட்டு வந்தார். ஆனாலும் அவரை சந்தேகமாக பார்த்த அதிகாரி, அவரை விசாரித்துவிட்டு, திரும்ப அந்த இடத்திற்கு சென்று அவர் வீசிய பொருட்களை கண்டுபிடித்துவிட்டார். பீட்டருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.






கழுத்தை நெரித்துக் கொல்


கொலை செய்வதை கோபத்திற்காக செய்தவர்கள் கூட அதன் விளைவுகளை அடுத்தநொடியே உணர்ந்து மனம் தளர்ந்து அழுவார்கள். வாழ்க்கை இனிமேல் பழையபடி இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து வருந்துவார்கள். சைக்கோ கொலைகாரர்களைப் பொறுத்தவரை மென் உணர்வுகள் என்பதே அவர்களின் மூளையில் இருக்காது. அது வளரும் போதே ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவிடுவதால் கொலை என்பதை உடலுறவில் உச்சம் பெறுவது எப்படி இருக்குமோ அதைப்போலவே நினைத்து கொண்டாடுவார்கள்


லியனோர்டு நீல்சன் என்பவர் கழுத்தை நெரித்துக்கொள்ளும் கொரில்லா கில்லர் என புகழ்பெற்றவர். இவர் கொலைகளை பைபிள் வைத்து அது சரிதான் என்று அவர் போக்கில் செயல்பட்டு வந்தார். பெண்ணின் கழுத்தை நெரித்து ஆசை தீர கொன்றுவிட்டு பிறகு இறந்த உடலோடு உடலுறவு கொள்வது இவரது வாடிக்கை. தனது கைகளால் கொல்வதை அவர் அந்தளவு விரும்பினார். ஹார்வி என்பவர் தான் கொலை செய்வதற்காக பிடித்து வைத்துள்ள ஆட்களுடன் இன்றைக்கு நாம் செல்பி எடுத்துக்கொள்வது போல புகைப்படம் எடுத்துக்கொண்டு கயிறால் கழுத்தை இறுக்கிக் கொள்வார். எப்படி பிள்ளையாரை கும்பிட்டு வேலைகளை தொடங்குகிறார்களோ அதுபோல இவர கயிறைத் தொட்டுவிட்டு கொலைக்கணக்கைத் தொடங்குவார்.


கார்ல்டன் கேரி என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், கொலை செய்யப்படுபவர்களின் உள்ளாடைகளைப் பயன்படுத்தி கழுத்தை இறுக்கி க்கொல்வார். இந்த வகையில் ஏழு முதியவர்களை கொன்று தீர்த்தார். பெண்களோடு இன்பம் அனுபவித்துவிட்டு அவர்களின் கழுத்தை நெரித்துக்கொள்வது எனக்கு விளையாட்டு போல என்று கொலைகார ர்கள் கருதுகிறார்கள் என உளவியலாளர் எபிங் கூறுகிறார். கென்னத் பியான்சி, ஆஞ்சலோ பியூனோ என்ற இருவரும் பெண்களை பிடித்து விதவிதமாக சித்திரவதை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். பெண்களின் கைகளை கரண்ட் கம்பிகளில் வைத்து தேய்ப்பது, பாலுறுப்புகளில் சோடா பாட்டில்களை நுழைப்பது, பினாயிலை உடலில் செலுத்துவது, மூச்சு திணற வைத்துக் கொல்வது ஆகியவற்றை ரசித்து செய்தனர். சித்திரவதை செய்த பெண்களின் உடலை மக்கள் பார்க்கும்படியாக தூக்கியெறிந்துவிடுவது இவர்களின் பழக்கம். எட்வர்ட் கோல் என்பவரைப் பற்றி பார்ப்போம்.


தனக்கு மரணதண்டனை கொடுத்த நீதிபதியைப் பார்த்து நன்றி ஜட்ஜ் அவர்களே என்ற சொன்ன மனவலிமை கொண்ட கொலைகாரர் இவர். இவரது அம்மாவிற்கு பெ்ண் பிறக்காத கவலையோ என்னவோ, எட்வர்டை எங்கு அழைத்துச் சென்றாலும் பெண்களுக்கான கவுன், ஸ்கர்டைப் போட்டே அழைத்து்ச் சென்றார். அனைத்து விருந்துகள், நிகழ்ச்சிகளுக்கும் பையனுக்கு பெண்ணைப் போல டிரெஸ் போட்டு கூட்டிச்சென்றால் என்னாகும்? எட்வர்ட் தன் அம்மாவின் பெண் பிள்ளை பாசத்தால் வெறுப்புக்கு உள்ளானார். பின்னாளில் தனது கொலைகளைப் பற்றி சொல்லும்போது, இவர்களைக் கொன்றது வழியாக எனது அம்மாவை கொன்றதாக உணர்கிறேன் என்று சொன்னார்.


குடும்பத்தில் இப்படி தொந்தரவுகள் தொடங்கியதால் மது அருந்த த் தொடங்கினார். இதன் விளைவாக அவரை அவரால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஒருநாள் காரிலிருந்து தம்பதிகளை கொல்ல சுத்தியலைத் தூக்கிவிட்டார். குற்றவுணர்ச்சி காரணமாகவே அவராகவே சென்று காவல்துறையில் சரண்டைந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டார். தனக்குள் ஏதோ பூதம் புகுந்துவிட்டது என்று கூற, அவர்கள் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். மது அருந்துகிற பழக்கம் இருந்தாலும் அவர் பிறருக்கு தீங்கு விளைவிக்கவில்லை. சமூகத்தில் கலந்து பழகும் குணமில்லை என்று அறிக்கையை எழுதி வைத்துவிட்டு மூன்று ஆண்டுகளில் அவரை வெளியே விட்டனர். வெளியே வந்தவர், கிளப்பில் ஆடிப்பாடும் மதுவுக்கு அடிமையான பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொண்டார். திருமணம் பெரிய மாற்றத்தை அவருக்குள் ஏற்படுத்தவில்லை. பல்வேறு ஆட்களோடு தனது மனைவி உடலுறவு வைத்திருப்பதாக கூறிய எட்வர்ட் அந்த உறவை விட்டு விலகினார். பிறகு தனக்கு பெண்களை வல்லுறவு செய்வதாகவும், கழுத்தை நெரிப்பது போலவும் எண்ணங்கள் வருகின்றன என்று சொல்லி கா்வல்துறையிடம் தானே சென்று சொன்னார். ஆனாலும் அதை சீரியசாக அதிகாரிகள் எடுத்துக்கொள்ளவில்லை. வேறு நகரத்திற்கு போ என்று அனுப்பி வைத்துவிட்டனர். தான் சொன்னதை அடுத்த பத்தாண்டுகளில் நிஜமாக்கினார் எட்வர்ட்.


நெவடா, கலிபோர்னியா, வியோமிங் ஓக்லாமா ஆகிய மாநிலங்களில் குடிபோதையோடு கொலைகளின் அணிவகுப்பை நடத்தினார். எளிதில் பிறரை ஈர்க்கக் கூடிய கவர்ச்சி எட்வர்டின் பலம். ஆனால் அவர் தேர்ந்தெடுக்க ஆட்கள் எல்லோருமே குடிநோய்க்கு அடிமையான, குடும்பத்தோடு தொடர்பே இல்லாத பெண்கள்தான். இவர்களுக்கு நெருக்கமான நண்பர்களும் குறைவு என்பதால் எளிதாக அவர்களை கொன்று குவித்தார். மதுபோதையில் கொலைகளை எளிதாக செய்தாலும் கூட போதை இறங்கியதும் கடுமையாக குற்றவுணர்ச்சி கொண்டவராக இருந்தார் எட்வர்ட். ஒருசமயம் மதுபோதையில் பெண்ணைக் கொன்று அவளின் புட்டப்பகுதி சதையை வறுத்து சாப்பிட்டார் என்றால் நம்ப முடிகிறதா?


ஒருமுறை பெண் ஒருவரை கொல்ல பெரும் போராட்டமே செயதார். இறுதியில் பெண்ணைக் கொன்றாலும் கூட பக்கத்து வீடு, எதிர்வீடு என அனைவருமே அந்த பெண்ணின் வீட்டின் முன் வந்துவிட்டார்கள். பெண்ணின் உடல் கீழே கிடக்க போன் செய்துவிட்டனர். எட்வர்ட் எளிமையாக நான் அவரைப் பார்க்கும்போது அவர் கீழே விழுந்துகிடந்தார். நான் ஏதும் செய்யவில்லை என்று சொன்னார். இதனால் காவல்துறை அவரை விடுவித்துவிட்டது. பிளவுபட்ட ஆளுமையாக மாறியவர், தானே வந்து காவல்துறையிடம் உதவி கேட்டார். மது அருந்துகிற பெண்ணைப் பார்த்தால் கொலைசெய்யத் தோன்றுகிறது எனக்கு உதவி தேவை என்றவர் 13 கொலைகளை ஒப்புக்கொண்டார். காவல்துறை தேடியதில் 35 பெண்களின் சடலங்கள் கிடைத்தன. 1985ஆம் ஆண்டு நெவடாவில் முதல்முறையாக விஷ ஊசி செலுத்தப்பட்டு எட்வர்ட் கொல்லப்பட்டார்.


writer v







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்