விலங்குகளின் ஹார்மோன்களை மனிதர்களின் உடலில் செலுத்தி வினோத ஆராய்ச்சி!

 

 

 


 

 

 

 

ஹார்மோன் மாயாஜாலம்!


உடலில் நடைபெறும் பல்வேறு மாற்றங்கள், தனக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் ஏற்பது, பெண்களின் கூட்டத்தை ஆர்வமாக கவனிப்பது, குரல் உடைவது, நடவடிக்கையில் துணிச்சல் வருவது என கூறிக்கொண்டே போகலாம். இன்று ஹார்மோன் என்றால் பெரும்பாலானோர்க்கு என்ன விஷயம் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. நீரிழிவு அல்லது கருவுறுதலை தடுப்பதற்கு ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தொடங்கியுள்ளது. எண்டோகிரைன் சுரப்பி மூலம் ரத்தத்தில் இணையும் இந்த வேதிப்பொருள், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனநிலை என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.


இருபதாம் நூற்றாண்டு வரை ஹார்மோன்கள் இருக்கிறதா இல்லையா எப்படிவேலை செய்கிறது என்பது பற்றிய எந்த கேள்விகளுக்கும் விடை தெரியாமல்தான் இருந்தது. மண்டையோடு, உடல் உறுப்புகள், தசைகள் ஆகியவற்றில் உள்ளதாக தொடக்கத்தில் நம்பினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹார்மோன்களை எண்டோகிரைன் சுரப்பி சுரக்கிறது என்பதை கண்டறிந்தனர். ஆனாலும் கூட அதன் செயல்பாடு பற்றி முழுமை யாருக்கும் தெரியவில்லை.


ஹார்மோன்களிடையே வேறுபாடு தெரியாத காரணத்தால் தொன்மை மனிதர்கள் விலங்கு, மனிதர்களின் ஹார்மோன்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். சீனர்கள் இதிலும் புத்திசாலிகளாக இருந்துள்ளனர். இவர்கள், சிறுநீரிலிருந்து ஹார்மோன்களை எடுத்து மருந்துகளை தயாரித்து வந்திருக்கின்றனர். இப்படி இவர்கள் செயல்பட்ட காலம் கி.பி.200.


இத்தாலியில் பதினாறு, பதினெட்டு ஆகிய நூற்றாண்டுகளில் பாடகர்கள் தங்கள் விந்தணுக்களை அவர்களே முன்வந்து நீக்கிக்கொண்டனர். குறிப்பிட்ட வயது வந்ததும் குரல் உடைந்து மாறுதல் அடையும். அதனை தடுப்பதற்குத்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண் விலங்குகளுக்கு விவசாயிகளில் விதைப்பைகளை அகற்றி ஆக்ரோஷத்தைக் குறைத்தனர்.


விக்டோரியா காலத்தில் ஹார்மோன்கள் பற்றிய ஏராளமான வினோத சோதனைகள் நடைபெற்றன. இதன்மூலம் எண்டோகிரைன் அமைப்பு, அதிலிருந்து வெளியாகும் ஹார்மோன், அதன் செயல்பாடுகள் பற்றிய அறிய நூறு ஆண்டுகளாக சோதனை நடைபெற்றது. 1849ஆம் ஆண்டு ஜெர்மன் ஆராய்ச்சியாளர் அர்னால்டு பெர்ஹோல்டு ஹார்மோன்களைப் பற்றிய ஆராய்ச்சியை செய்தார். இதற்கு இவர் சேவல்களைப் பயன்படுத்தினார். அப்போது அவருக்கு மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மாறுபடும் ஹார்மோன்களைப் பற்றிய அறிவில்லை. எனவே, அவர் சேவல்களின் உடலில் உள்ள பல்வேறு அமைப்புகளை மாற்றியமைத்து, ஹார்மோன்களின் மாற்றத்தை கண்டார். இதன் காரணமாக அவற்றின் ஆவேசம், இனப்பெருக்க தன்மை மாறுபடுவதைக் கண்டுபிடித்தார். ஆனால் பிற ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளம் கண்டுபிடிக்க அரை நூற்றாண்டு ஆனது.


பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் விந்தணுக்களைப் பற்றிய சோதனைகள் தாறுமாறாக தொடங்கின. மருத்துவர் சார்லஸ் எட்வர்டு ப்ரௌன் செக்வார்டு, விலங்குகளின் விந்தணுக்களை திரவ வடிவில் தனது உடலில் செலுத்திக்கொண்டு ஆராய்ச்சிகளை செய்தார். 1889ஆம் ஆண்டு தனது 72 வயதில் நாய், பன்றி ஆகியவற்றின் விந்தணு திரவத்தை உடலில் செலுத்திக்கொண்டு தனது வயது குறைவதை நிறுத்திவிட்டதாக கூறினார். ஆனால் ப்ரௌன் கூறியது, பிளாசிபோ மாத்திரை போல உடான்ஸ் என்பது பின்னர்தான் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் விலங்குகளின் உடலில் இருந்து டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோனை எடுத்து திரவ வடிவில் தனது உடலில் செலுத்திக்கொண்டார். அவரது உடல் அதனை தனியாக பிரித்துவிட்டது. ஆனால் இது அவரது நோய்களை தீர்க்கவில்லை. 1889ஆம் ஆண்டு ப்ரௌன் கூறிய பொய்கள் வெளியே தெரிந்துவிட்டன. இதன்பிறகுதான் எண்டோகிரைனாலஜி ஆராய்ச்சிகள் வேகமெடுத்தன. 1891ஆம் ஆண்டு ஜார்ஜ் ரெட்மைன் முரே என்பவர், தான் ஹார்மோன்கள் மூலம் மைஷிடெமா என்ற நோயைக் குணப்படுத்திவிட்டதாக கூறினார். இந்த நோய் தைராய்டு சுரப்பியைத் தாக்கி, கண்கள், கைகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆட்டின் தைராய்டு சுரப்பியிலிருந்து பெறப்பட்ட செல்களை மனிதர்களின் உடலில் செலுத்தினார். ப்ரௌன் முறையை விட ஜார்ஜின் முறையில் தைராய்டு ஹார்மோன்கள் அதிகம் இருந்தன. இது ஒருவகையில் சிகிசைக்கு உதவியது என்பது உண்மை. 1895ஆம் ஆண்டு ஜார்ஜ் ஆலிவர், எல்வர்ட் ஆல்பெர்ட் ஸ்ஹாஃபெர் ஆகிய இருவரும் இப்படி ஹார்மோன்களை உடலில் செலுத்தும்போது ரத்த அழுத்தம் அதிகரிப்பை கண்டுபிடித்தனர். விலங்குகளிடம் செய்த சோதனையில் இநு தெரியவந்தது.


உடலிலுள்ள வேதிப்பொருட்கள் முறையை ஆராய்ந்த இங்கிலாந்து மருத்துவசங்கம் ஹார்மோன்களை உடலில் செலுத்துவதை ஆதரிக்கவில்லை. நரம்பு அமைப்புகள் உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன என்றே தொடக்கத்தில் நம்பப்பட்டு வந்தது. ஹார்மோன்கள்தான் உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படைக் காரணம் என்ற உண்மை, மக்களின் நம்பிக்கை எதிராக இருந்ததால் வெற்றி பெறவில்லை. வாச்டக்டமி போன்ற முறைகளைக் கூட பிரபலமான இலக்கிய ஆளுமைகள் வயதாவை தடுக்கும், உறவு கொள்ளும் திறனை அதிகரிக்கும் என்று நம்பினர்.



1800களில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு அவர்களி்ன் உடலிலுள்ள கருப்பைதான் காரணம் என சொல்லி கட்டாயமாக அவர்களின் கருப்பை அகற்றப்பட்டது. இந்த தவறான நம்பிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான ஆரோக்கியமான பெண்கள் பாதிக்கப்பட்டனர். 1902இல் மருத்துவர் எர்னஸ்ட் ஸ்டார்லிங் வில்லியம் பேலிஸ் ஆகியோர் ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்கள்தான் உடலின் இயக்கத்திற்கு காரணம் என்று கண்டுபிடித்தனர். இதனால் நரம்பு அமைப்புக்கான தொடர்பு என்ற மூடநம்பிக்கை இவர்களது சோதனைகளால் காணாமல் போனது.


ரத்தத்தில் உள்ள வேதிப்பொருளுக்கு ஹார்மோன் என்று பெயர் வைத்தது ஸ்டார்லிங்தான். இதுபற்றிய ஏராளமான உரைகளை 1905இல் மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரியில் பேசினார். இதில்தான் கிரேக்க கவிதையிலிருந்து ஹார்மோன் என்ற சொல்லை எடுத்துக்காட்டினார். இதற்கு அம்மொழியில் உற்சாகமாக என்று அர்த்தம். 1921ஆம் ஆண்டு பிரடெரி்க் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய இருவரும் இன்சுலினை கண்டுபிடித்தனர். இந்த ஹார்மோன், உடலில் சர்க்கரை எப்படி உட்கிரகிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. இவர்களின் ஆராய்ச்சி இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காக்க பயன்படுகிறது. இவர்களின் கண்டுபிடிப்புக்கு முன்னர் நீரிழிவு என்பது இளமையில் மெல்லக் கொல்லும் நோயாக இருந்தது. முதல்நிலை நீரிழிவு இன்சுலின் உடலில் சரியாக சுரக்காத காரணத்தால் ஏற்படுகிறது. இன்சுலின் சரிவர சுரக்காத காரணத்தால் திசுக்களை உடல் எடுத்துக்கொள்கிறது.


நீரிழிவு நோய் ஏற்பட்ட நாய் ஒன்றுக்கு அறுவை சிகிச்சை செய்த மேற்சொன்ன இருவரும் கணையம் அதற்கு முக்கியக் காரணம் என்று அடையாளம் கண்டனர். கணையத்தில் செரிமானத்திற்கு தேவையான திரவங்கள் சுரக்கின்றன. கணையத்திலுள்ள செல்களை பிரித்து சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு செலுத்தி பார்ததில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருப்பதை அடையாளம் காண முடிந்தது. ஓராண்டிற்குப் பிறகு இரண்டு மருத்துவர்களும் தாங்கள் எடுக்கும் செல்களின் வடிவத்தை தூய்மையாக்கினர். அதனை மனிதர்களுக்கும் வெற்றிகரமாக செலுத்தினர். இதனால் இறப்பின் விளிம்பிலிருந்த குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். பான்டிங், பெஸ்ட் ஆகியோரின் கண்டுபிடிப்பால் பெரும் பயன் அடைந்தது எலி லில்லி என்ற மருந்து கம்பெனிதான். இந்த நிறுவனம் தேவையான இன்சுலினை வேகமாக தயாரித்து உதவியது. இந்த மருந்து முதலில் விலங்குகளிடமிருந்து தயாரிக்கப்பட்டது. பின்னர்தான். 1960இல் இன்சுலின் ஹார்மோன் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துவிட்டது.


இன்று நவீன அறிவியலின் வளர்ச்சி காரணமாக ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்களின் அளவை எளிதாக மருத்துவர்கள் கணக்கிட்டு வருகின்றனர். இதனை ரேடியோ இம்யூனோனாசே என்று கூறுகின்றனர். இதனை அமெரிக்க இயற்பியலாளர் ரோசலின் யாலோ கண்டுபிடித்தார்.


இவரோடு ரோஜர் குலிமின், ஆண்ட்ரூ ஸ்காலி ஆகியோருக்கும் 1977இல்

நோபல் பரிசு வழங்கப்பட்டது. யாலோவின் முறையால்தான் மற்ற இருவரும் ரத்த த்தில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்களை துல்லியமாக கண்டறிந்தனர். ஹார்மோன்களின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பிட்யூட்டரின் பங்கு முக்கியமானது எனவே, அதனை மாஸ்டர் சுரப்பி என்று கூறுகின்றனர். யாலோவின் முறையால் எண்டோகிரைன் ஆராய்ச்சி மேம்பட்டது. இன்று ஆராய்ச்சியாளர்கள் எண்பதிற்கும் மேற்பட்ட மனித ஹார்மோன்களை கண்டுபிடித்துவிட்டனர். இதற்கு தொடர்புடையதாக இதயநோய், உடல்பருமன், மன அழுத்தம், வயதாவது ஆகியவை உள்ளதாக அறிந்துள்ளனர்.


பிபிசி


டாம் அயர்லாந்து



கருத்துகள்