மல்யுத்தக்களத்தை குலைக்க நினைக்கும் தொன்மை விலங்கு! ஸ்கூபி டூ குழுவினரின் வேட்டை

 

 

 

 

 

 

 

 

Scooby-Doo! Wrestlemania Mysteriet (Film) | Norske Dubber ...

 

ரெசில்மேனியா ஸ்கூபி டூ



அனிமேஷன்


ஹன்னா பார்பரா வார்னர் பிரதர்ஸ்


Amazon.co.uk: Watch Scooby-Doo! Wrestlemania Mystery ...

டபிள்யூடபிள்யூஈ நிகழ்ச்சியில் திடீரென அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது. அங்கு ஏதோ விலங்கு ஒன்று வந்து வீர ர்களை அடித்துப்போடுகிறது. பல்வேறு அறைகளை அடித்து நொறுக்கிறது. அங்கு மல்யுத்தப்போட்டி தொடர்பாக நடத்தப்பட்ட டிவி டான்ஸில் ஸ்கூபிடூ போட்டியிட்டு வெல்கிறது. எனவே அவர்களுக்கு முழுப்போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் கிடைக்கிறது. சேகியும் ஸ்கூபிடூவும் தங்களது துப்பறியும் குழுவை சம்மதிக்க வைத்து போட்டி நடத்தும் இடத்திற்கு செல்கிறார்கள்.


அங்கு இவர்கள் செல்வதற்கு முன்னரே வீரர் ஒருவர் படுகாயமுற்று இருக்கிறார். தொன்மை விலங்கு உயிர்பெற்று வந்துவிட்டதா என வெல்மா தலைமையிலான துப்பறியும் குழு உண்மையைக் கண்டுபிடித்ததா, சாம்பியன் பெல்டை காப்பாற்ற முடிந்ததா என்பதையெல்லாம் மல்யுத்த களத்தில் பரபரப்புடன் சொல்லியிருக்கிறார்கள்

 

Watch Scooby-Doo! WrestleMania Mystery 2014 full movie online

இந்த தொடரில் ஸ்கூபிடூ மல்யுத்த வீரரின் யுக்தியைப் பயன்படுத்தி பெல்டை கடத்துகிறது. ஹிப்னாடிசம் மூலம் நடக்கும் இந்த திருட்டினால் ஸ்கூபிடுவும் அதன் தோழன் சேகியும் முகமூடி போட்ட மல்யுத்த மலை கெய்னுடன் சண்டை போட்டு தங்களை நிரூபிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துகிறது நிகழ்ச்சி அமைப்பு. இதனால் சண்டைக்கு வெல்மா சம்மதிக்க போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் எப்படி ஸ்கூபிடூ சேகி வென்றது, அதற்கு என்ன காமெடி களேபரங்களை செய்தார்கள் என்பதையெல்லாம் ஜாலியாக பார்த்து ரசிக்கலாம்.


வீரர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்கள், விழாவை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அனிமேஷனில் பார்க்க அழகாக இருக்கிறது. இறுதிக்காட்சி சண்டை மெய்மறக்க வைக்கிறது. இந்த அனிமேஷனில் ஸ்கூபி டூவும் ஜான் சேனாவும்தான் நாயகர்கள். அதிக காட்சிகளில் இவர்கள்தான் இருக்கிறார்கள்.


சாம்பியன் ஸ்கூபி!


கோமாளிமேடை டீம் 

 

Director:Brandon Vietti
Produced by:Brandon Vietti
Writer(s):Michael Ryan




கருத்துகள்