இடுகைகள்

பாரத் ஜிபிடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ

படம்
  பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ ஐஐடி பாம்பே தலைமை தாங்கி வழிகாட்ட ஏழு இந்திய பொறியியல் கழகங்களின் உதவியுடன் பாரத் ஜிபிடி குழுமம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதரவை வழங்கி வருகிறது. பாரத் ஜிபிடி குழுமம், ஹனுமான் எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கி வருகிறது. இந்த பணிக்கு சீதாலட்சுமி ஹெல்த்கேர் நிறுவனம், உதவியையும், பங்களிப்பை வழங்கியுள்ளது.  ஹனுமான் ஹனுமான் என்பது செயற்கை நுண்ணறிவு மாடல். இதை எல்எல்எம் என குறிப்பிடுகிறார்கள். மொத்தம் பதினொரு மொழிகளில் இயங்கவிருக்கிறது. தமிழ், மராத்தி, இந்தி ஆகிய மொழிகள் இதில் அடங்கும். இருபது மொழிகளுக்கு செயல்பாடுகளை விரிவாக்கும் திட்டமும் உள்ளது. மருத்துவம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படவிருக்கிறது. இதுதொடர்பாக பாரத் ஜிபிடி குழுமம், வெளியிட்ட வீடியோவில் பல்வேறு மொழிகளில் மக்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது காட்டப்பட்டது.  இப்படி உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு வெறும் உரையாடுவதற்கான பாட் மட்டும் கிடையது. இதைப் பயன்படுத்தி எழுத