இடுகைகள்

முகமறிதல் சோதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு கி.மீ. தூரத்தில் ஆட்களை அடையாளம் காணும் அமெரிக்கா!

படம்
முகமறிதல் சோதனையில் முன்னேறும் அமெரிக்கா! அமெரிக்க ராணுவம் முகமறிதல் சோதனையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ராணுவத்துறை உருவாக்கிய சிறிய கருவி, ஒரு கி.மீ. தூரத்திற்கு முன்பாகவே ஒருவரை அடையாளம் கண்டுவிடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் சிறப்பு பணிகளைச் செய்யும் சோகாம் எனும் அமைப்பு இதற்கான பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்தது. 2019ஆம் ஆண்டு முகமறிதல் சோதனைக்கான மாதிரி கருவியை உருவாக்கி விட்டனர். மேலதிக தகவல்களை ராணுவ அமைச்சகம் வெளியிடவில்லை. குற்றச்செயல்பாடுகளில் தொடர்புடையவர்களை கண்டறிய இக்கருவி ட்ரோன்களின் பொருத்தப்படவிருக்கிறது. இவற்றை சட்ட ஒழுங்குத் துறைக்கு ராணுவ அமைச்சகம் வழங்கப்போகிறது. இதன்மூலம் குற்றம் செய்பவர்களை எளிதாக ட்ரோனை பறக்கவிட்டே பிடித்துவிடலாம். அமெரிக்காவிலுள்ள செக்யூர் பிளானட் எனும் அமைப்பு, எஸ்எல்ஆர் கேமரா பொருத்தப்பட்டு மக்களை கண்காணிக்க ஏற்பாடானது. ஆனால் இதில் கேமராவின் திறன் மற்றும் ட்ரோன் ஏற்படுத்திய இரைச்சல் தொல்லையாக இருந்தது. இதில் பல்வேறு மேம்பாடுகளை ராணுவ அமைச்சகம் உருவாக்கி வருகிறது. மேற்சொன்ன திறனில் ஒருவரை பாஸ்போர்ட் சைஸ்