இடுகைகள்

கருப்புபணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமைச்சரின் பெண்ணை மீட்கச்செல்லும் கம்யூனிச லட்சியத் திருடன்!

படம்
            ரெச்சிப்போ நிதின் , இலியானா கம்யூனிச கருத்து கொண்ட திருடனைப் பயன்படுத்தி உள்துறை அமைச்சரின் ஐநூறு கோடி கள்ளப்பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரியின் கதை . அ ந்த அதிகாரியின் கதையை சொல்லியிருந்தால் கூட பார்க்க நன்றாக இருந்திருக்கும் . அதையும் ஊறுகாய் போல பயன்படுத்தி இலியானாவின் தசை மேல் பயணிக்கிறது கதை . நிதின் படத்தில் திருடனாக நடித்திருக்கிறார் . திருடன்தான் . ஆனால் நல்ல திருடன் . பிளாட்பாரம் , கோவில் வாசல் என தூங்கி எழுபவர் , தான் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவிடுகிறார் . ஆனால் , மாது , நிலம் என செலவிடாமல் ஏழைகளுக்கு , படிக்க வேண்டிய வயதில் பிச்சை எடுக்கும் பிள்ளைகள் , வேலை செய்யும் சிறுவர்களுக்கு செலவிடுகிறார் . இப்படிப்பட்ட லட்சிய திருடனை போலீஸ் ஏறத்தாழ கைது செய்யும் அளவுக்கு அருகில் வந்துவிடுகிறது . அப்போதுதான் காவல்துறை அதிகாரி , திருடனின் கம்யூனிச லட்சியத்தை அறிந்து வியக்கிறார் . நான்கு கி . மீ . ஓடிவந்து அவனுக்கு கை கொடுத்து அமைச்சரின் கள்ளப்பணத்தை திருடிச்செல்லுமாறு கூறுகிறார் . திருடனுக்கு அது போல ஐடியா ரொம்ப புதுசு . இருந்தா

அமைதியான முகம், வன்முறையில் நிறைந்து தளும்பும் மனது! தி டிராப் - டாம் ஹார்டியின் தாண்டவம்

படம்
              தி டிராப் Director: Michaël R. Roskam Writer(s): Dennis Lehane Based on"Animal Rescue" by Dennis Lehane Music by Marco Beltrami [1] Cinematography Nicolas Karakatsanis   செச்சன்ஸ் எனும் குற்றவாளி குழுக்களின் பணத்தை பரிமாறும் இடமாக பார் ஒன்று உள்ளது. அதன் உரிமையாளர் மார்வ். இவரின் சொந்தக்காரர் பாப் அங்கு பார் டெண்டராக பணிபுரிகிறார். அங்கு திடீரென நடைபெறும் கொள்ளையால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கொள்ளையில் இழந்த பணத்தை செச்சன்ஸ் கேட்கிறார்கள். பாப், மார்வ் இருவரும் தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லிவிடுகிறார். பாப் மட்டும் கொள்ளையடித்தவனின் வாட்ச்சை அடையாளம் சொல்லிவிடுகிறான். உண்மையில் அந்த கொள்ளையை திட்டமிட்டது யார், அதன் பின்னணியில் உள்ள துரோகி யார் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நேரடியான சண்டைக்காட்சி எதுவும் கிடையாது கிளைமேக்ஸ் காட்சியை தவிர. ஆனால் படம் முழுக்க எப்போது யார் யாரை அடித்துக்கொள்வார்களோ என்ற அழுத்தம் நம்மை பரபரப்பிற்குள்ளாக்குகிறது. குறிப்பாக பாப் சகினோஸ்வ்கியாக நடித்துள்ள டாம் ஹார்டியின் நடிப்பு. எதற்கும் பதற்றப

கருப்பு பணம் காதலையும் சுமந்து வந்தால்... பிளாக் மணி லவ்(கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர்

படம்
            பிளாக்மணி லவ் (கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர் 2014-2015 164 எபிசோடுகள் துருக்கியின் இஸ்தான் புல்லில் வாழும் அஹ்மது டெனிஸர். தனது மகள் எலி்ப் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு ஆபீசிற்கு நள்ளிரவில் செல்கிறார். செல்லும் வழியில் காரில் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவருடன் அவரது மகள் வயதில் இளம்பெண் ஒருவரும் இருக்கிறாள். இந்த வழக்கை  ஹூசைன் டெமிர் என்ற இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அங்கு லீவுக்கு வான் நகரிலிருந்து அவரது தம்பியும், குற்றப்பிரிவு கேப்டனுமான உமர் டெமிர் வந்திருக்கிறார். நாட்டிலேயே ஸ்மார்டான சிறந்த போலீஸ் அதிகாரி அவர். தனது காதலியை திருமணம் செய்துகொள்ள நினைத்துள்ள நேரத்தில் அவரின் பணிக்காக  பாராட்டி விருது வழங்கப்படுவதோடு ஒரு மாத காலம் சம்பளத்தோடு விடுமுறையையும் அரசு வழங்குகிறது. அதில்தான் இஸ்தான்புல்லிலுள்ள தனது அம்மா, அண்ணன் குடும்பத்தை பார்க்க வந்திருக்கிறார் உமர் டெமிர்.  அஹ்மது டெனிஸர் கொல்லப்பட செய்தி வயர்லெஸில் சொல்லப்பட, அண்ணன் ஆபீசில் ஆர்டா என்ற நண்பனோடு பேசிக்கொண்டிருக்கிறார் உமர். ஆர்டா அந்த வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டே  கிளம்பும்போது, உமரையும் சரி ந