இடுகைகள்

உடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைமுடி, தசைகள் பற்றி அறிவோம்!

படம்
  கார்குழல் அழகியே... அழகிகளைப் பற்றியல்ல. தலைமுடியைப் பற்றித்தான் இந்த குறுங்கட்டுரை. தலைமுடி, நகம் என இரண்டுமே கெராட்டின் என்ற வேதிப்பொருளால் உருவாகுபவை. அடிப்படையில், முடி, நகம் என இரண்டுமே அதன் வேர்ப்பகுதியில் மட்டும் உயிர்த்திசுக்களைக் கொண்டவை. எனவே,தான் முடியை வெட்டினாலோ, நகத்தை வெட்டினாலோ வலிப்பது கிடையாது.  தலையில் மயிர்கள் அடர்த்தியாக உள்ளன. எந்தளவுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் என்ற எண்ணிக்கையில் தலைமயிர்கள் வளருகின்றன. உடல் முழுக்கவும் உரோமங்கள் வளருகின்றன. சிலரின் குடும்ப பாராம்பரியம் காரணமாக கூடுதலாக, குறைவாக உரோமங்கள் இருக்கலாம்.  சாதாரண நீளமுடி, சுருட்டை முடி என்பது ஒருவகையில் ஒருவரையொருவர் ஈர்க்கிறது. சாதாரணமாக முடி உள்ளவர்கள், முடியை நவீன சலூன் சமாச்சாரங்கள் கருவிகளைப் பயன்படுத்தி அதை சுருட்டையாக மாற்றுகிறார்கள். சுருட்டை முடி குழுவினர், முடியை நீளமாக மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி இப்படி, இப்படி அப்படி முறைதான்.  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தலையில் அரிப்பு ஏற்பட்டால், உடனே அங்கு என்ன பிரச்னை என பாருங்கள். ஈறும் பேனும் இருக்கலாம். அதை உடனே பேன் மருந்...

மனிதர்கள் அனைவரும் ஒன்றுபோலத்தானா?

படம்
 வலிமையான பாதுகாப்பு உடலுக்கு ஒரு வடிவத்தை கொடுப்பது எலும்புகள். இவை முடி, நகம் போல உயிரற்றவை அல்ல.எலும்புகள் உடைந்தாலும், அவற்றை சரியாக பொருத்தி வைத்தால் வளரும். எலும்புகள் உயிர்திசுக்களைக் கொண்டவை. எனவே, அவை உடைந்தால் மருத்துவர் எக்ஸ்ரே பார்த்து கமிஷன் வாங்கிக்கொண்டாலும் எந்த நிலைமையில் உள்ளது என்று கூறுவார். அதைப் பார்த்து நீங்கள் சிகிச்சையை தீர்மானித்துக்கொள்ளலாம்.  குழந்தையின் உடலிலுள்ள எலும்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக இருந்து பிறகே வலிமையாகின்றன.  வயது வந்தோரின் இருகை மணிக்கட்டில் தலா இருபத்தேழு எலும்புகள் உண்டு.அதேபோல முழு வளர்ச்சி அடைந்த வயது வந்தோரின் உடலில் 206 எலும்புகள் இருக்கும்.  நுரையீரலை மார்பெலும்புகள் பாதுகாக்கின்றன.கால் எலும்புகளை உள்ளே ஆராய்ந்தால் தேன்கூடு போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பு தோற்றத்தில் இப்படி இருந்தாலும் வலிமையானது,எடை குறைவானது.  இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் மூட்டு இணைப்பு. கை, இடுப்பு ஆகிய பகுதிகளில் அதிக அசைவுகளுக்கு ஏற்றபடி எலும்புகளின் வடிவம் கோளம், செவ்வக வடிவில் அமைந்துள்ளது.  குழந்தையின் வளர்ச்சி தா...

மூளை என்பது பிளாஸ்டிக்கை போன்றதா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மூளையை பிளாஸ்டிக் என்று கூறுவது ஏன்? மூளை, ஒருவர் பெறும் அனுபவங்களைப் பொறுத்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது, பரிணாம வளர்ச்சி பெறுகிறது. இதன் காரணமாக அதை பிளாஸ்டிக் என்று கூறுகிறார்கள்  மூளை இளம் வயதில் எப்படி மாறுகிறது? பிறக்கும்போது குழந்தைக்கு மூளை 350 கிராமாக உள்ளது. பின்னர், வயது வந்தவராக மாறும்போது அதன் எடை 1450 கிராம்களாக மாறுகிறது. பிறக்கும்போது மூளையில் நியூரான்களின் தொடர்பு முழுமை பெற்றிருப்பதில்லை. வயது வந்தோராக மாறும்போதுதான் அதன் முழுமையாள வளர்ச்சி நிறைவுபெறுகிறது.  மூளையை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி? மதுபானம் அருந்தக்கூடாது. அடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. உடற்பயிற்சியை தினசரி செய்யவேண்டும். அடிப்படையாக மூளையில் டிமென்சியா போன்ற நோய்கள் வரக்கூடாது என்றால், அங்கு ரத்தவோட்டம் சீராக இருக்கவேண்டும். குழந்தையாக இருக்கும்போது பல்வேறு மொழிகளைக் கற்பது எளிது. நடப்பது, பேசுவது, சமூக வாழ்க்கையை புரிந்துகொள்வது, எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றை செய்யமுடியும். இதையெல்லாம் தொடக்கத்தில் க...

உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பூனையின் கண்கள் இரவில் மின்னுவது எப்படி? பூனையின் ரெட்டினாவுக்கு பின்புறம் டாபெடும் லுசிடும் என்ற பொருள் உள்ளது. பதினைந்து அடுக்குகள் கொண்ட  இதுவே ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் பிரதிபலிக்கிறது. கண்ணாடி போல இயங்குகிறது. எனவே, பூனையின் கண்கள் இருட்டில் மின்னுகிறது. பொதுவாக கண்களின் நிறம் பச்சை, பொன் நிறமாக தெரியும். சியாமிஸ் பூனைக்கு மட்டும் சிவப்பு நிறத்தில் தெரியும். பர்ரென்ற  ஒலி எங்கிருந்து வருகிறது? இதுவரை இதற்கு முடிவான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. பூனையின் குரல்வளையில் இருந்து வருகிறது என ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு தரப்பு, நெஞ்சுக்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் செல்லும்போது ஏற்படும் ஒலி என்கிறார்கள். பூனை வலியில், வேதனையில் இருக்கும்போது குட்டிகளைப் போடும்போது, இறக்கும்போது பர் என்ற ஒலியை வெளிப்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். இவை எவையும் நிரூபணம் செய்யப்படவில்லை. மனித உடம்பு செல்களின் ஆயுள் எவ்வளவு? 200 பில்லியன் செல்கள் ஒரு மணிநேரத்திற்குள் இறந்துபோகின்றன். அவை மீண்டும் உற்பத்தியும் ஆகின்றன. தோல் செல்கள் 19-34 நாட்கள், கல்லீ...

மதக்கலவர, பேரிடர் சூழலில் உங்களை தற்காத்துக்கொள்வதே முக்கியம்!

படம்
  உலகளவில் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக பெண்களே உள்ளனர். எழுபத்து மூன்று சதவீதம். தற்காப்புக்கலையில் பெல்ட்டுகள் வாங்கித்தள்ளாவிட்டாலும் அடிப்படையாக சில முறைகளைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். மதவாத நாடான இந்தியாவில் தலித்துகள் திருமணத்தின்போது கூட தாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் கீழ் ஏராளமான சகோதர குண்டர்கள் அமைப்பு உண்டு. இவர்கள் வேலையே தாழ்த்தப்பட்டவர்களை, சிறுபான்மையினரை தாக்கி சொத்தை கொள்ளையடிப்பதுதான். எனவே, தற்காப்புக்கலை கற்பது ஏழை நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த நாட்டிலும் நல்ல விஷயம்தான். உயிர்பிழைக்க சண்டைபோடும்போது ஆயுதம் என தனியாக பிரித்துச் சொல்ல ஏதுமில்லை, அனைத்துமே ஆயுதங்கள்தான். கல், மண், குச்சி, செங்கல், ஆணி, சுத்தி, என அனைத்தையும் பயன்படுத்தலாம். உடலையும் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.   கைகளை வைத்து ஒருவரை முதுகில் முன்புறமாக மார்பில் வைத்து பின்புறமாக எப்படி வேண்டுமானாலும் தள்ளலாம். உங்கள் ஆற்றலைப் பொறுத்து எதிரிக்கு மார்பு எலும்புகள் கூட உடையும். கையிலுள்ள மூட்டு காயமடையாமல் இருந்தால...

சிறிய விஷயங்களைச் செய்வதால் மாறும் வாழ்க்கை!

படம்
      12 டினி திங்க்ஸ் ஹெய்டி பார் சுயமுன்னேற்ற நூல் எழுத்தாளர் ஹெய்டி, இந்த நூலில் பனிரெண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு அதன் வழியாக மனித வாழ்க்கையில் ஏற்படும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை பட்டியலிட்டுள்ளார். வெளிப்படையாக சொன்னால், இவரது கட்டுரைகளை படித்து புரிந்துகொள்வதை விட நூல் நிறைவுற்றபிறகு, பின்புறமாக கொடுத்துள்ள சில அறிவுறுத்தல்களை படித்தாலே நமக்கு நிறைவான தெளிவு கிடைத்துவிடும். பனிரெண்டு விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா, இதில் இடம், வேலை, ஆன்மிகத்தன்மை, கிரியேட்டிவிட்டி, உணவு, நாகரிகம், இயற்கை, இனக்குழு, வீடு, உணர்வு, கற்றல், தகவல்தொடர்பு என பல அம்சங்கள் கூறப்பட்டு, அவை விளக்கப்படுகின்றன. இந்த விஷயங்களைப் படித்துமுடித்தபிறகு சில கேள்விகளை நூலாசிரியர் கேட்கிறார். அதற்கான பதில்களை வாசகர்கள் வழங்கவேண்டும். அதன் வழியாக தெளிவு கிடைக்கலாம். இதில் கூறப்படும் விஷயங்கள் முழுக்க புதுமையானவை அல்ல. ஆனால், நாம் மறந்துபோனவையாக அதிகம் உள்ளது. உணவை கவனம் கொடுத்து மணம், சுவையை அனுபவித்து உண்பது, உடற்பயிற்சி செய்வது, சில நாட்கள் எதையும் செய்யாமல் அமைதியாக சிந்தனைகளை குறைத்து இருப்பது, இ...

மரபணு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மைக்ரோஆர்என்ஏ - மருத்துவ நோபல்பரிசு 2024

படம்
  நோபல் பரிசு 2024 நடப்பு ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு அறிவியலாளர்கள் விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மரபணுக்கள் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் மைக்ரோஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மரபணுக்களின் செயல்பாட்டை ஒழுங்குமுறை செய்வது மைக்ரோஆர்என்ஏ. பல கோடி ஆண்டுகளாக உயிரியல் மூலக்கூறுகளின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது மைக்ரோஆர்என்ஏ. டிஎன்ஏவில் மரபணு தொடர்பான தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன. செல்களில் உள்ள உட்கருவில் டிஎன்ஏ உள்ளது. இத்தகவல்களை எம்ஆர்என்ஏ மூலக்கூறு பிரதி எடுத்து வைத்துக்கொள்கிறது. குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்ய குறிப்பிட்ட மரபணுக்கள் உதவுகின்றன. உடலிலுள்ள திசுக்கள் பல்வேறுவித புரதங்களை உருவாக்குகின்றன. இவை, குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்ய உதவுகின்றன. வேலை செய்ய, தகவல்தொடர்பு கொள்ள என குறிப்பிடலாம். மரபணுக்களின் ஒழுங்கான செயல்பாடு, மூலமே உடல் பிரச்னையின்றி இயங்குகிறது. இதில் பிரச்னை நேர்ந்தால், உடலில் நீரிழிவு, நோய்எதிர்ப்பு சக்தி சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று பொருள். இன்று மருத்துவ நோபல் பரிசு ...

உடற்பயிற்சியை ஊக்குவிக்க என்ன செய்யலாம்?

  சும்மா செய்யுங்க ப்ரோ இதயத்தசைக்கு நல்லது, மண்ணீரலுக்கு மிக நல்லது என்றெல்லாம் உடற்பயிற்சியை சிலர் கூறுவார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். எளிமையான உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.அவ்வளவுதான். பலாபலன்களை ஆராய்ந்து படிப்பவர்கள், உடற்பயிற்சியை செய்ய மாட்டார்கள் என மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் சேகர் விளக்கி, நோ ஸ்வெட் ஹவ் சிம்பிள் சயின்ஸ் மோட்டிவேஷன் கேன் பிரிங் யூ எ லைஃப்டைம் ஃபிட்னெஸ் என்ற நூலைக்கூட எழுதியிருக்கிறார். நாளையைப் பற்றிய யோசனை வேண்டாம். இன்று உடற்பயிற்சி செய்யுங்கள். நாளைக்கு வேலையை நாளை பார்ப்போம்.  எளிய உடற்பயிற்சி போதும் இணையத்தில் அனடோலி என்ற உடற்பயிற்சி வல்லுநர் இருக்கிறார். ஜிம்களுக்கு போய் அங்கு போலியாக எடையைத் தூக்கி வீடியோபோடும் ஆட்களை கிண்டல் செய்வதே அவர் வாடிக்கை. அவர் அளவுக்கு பார்பெல் தூக்கி பயிற்சி செய்யவேண்டியதில்லை. புஷ் அப் எடுக்கவேண்டியதில்லை. உங்களால் முடிந்த பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சியை நீங்கள் தண்டனையாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்போதுதான் அதை தொடர்ந்து செய்யமுடியும்.  பழக்கமே சிறக்கும் கா...

உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி எது?

படம்
  உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி எது? பைலேட்ஸ்  இவ்வகை உடற்பயிற்சிகள் முழுக்க வயிற்றுத் தசைகளுக்கானது. வயிற்றை பழனி படிக்கட்டு போல அமைக்கவேண்டும் என்பவர்கள் இந்த வகை பயிற்சிகளை செய்யலாம். தொடக்கத்தில் யாராவது வழிகாட்டி இருந்தால் அவர்களை பின்பற்றலாம். பிறகு வழி தெரிந்தபிறகு பயணத்தை நீங்களே செய்துகொள்ளலாம். இணையத்தில் ஏராளமான சின்ன உடுக்கை இடை நங்கைகளே அவர்களாக விளம்பர ஆப்புடன் வந்து பயிற்சிகளை சொல்லித் தருகிறார்கள். எனவே, பைலேட்ஸ் பயிற்சி செய்யும்போது கடினமாக இருந்தாலும், அதை பெண்கள் செய்யும்போது பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.  பைலேட்ஸ் பயிற்சியை கழுதைபோல உழைத்து செய்யவேண்டியதில்லை. இதில் முக்கியமானது சுவாசமும், வயிற்று தசைகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் கவனமும்..... அதில் கவனம் தவறினாலும் தசைகள் பயிற்சி காரணமாக வலிமையாகும். ஆனால் கால தாமதமாகும். எனவே, பயிற்சி செய்யும்போது கவனமாக செய்தால் எந்த பிரச்னையும் இல்லை. வயிற்றுதசைகள் வலிமையாவதோடு, இடுப்பு அளவும் குறையும். எனவே, பேண்டுகள் புதிதாக வாங்க வேண்டிய செலவைக் குறைத்துக்கொள்ளலாம். யூட்யூபிலேயே ஏராளமான பைலேட்ஸ் பயிற்சி வீடியோக்...

அன்றைய காலம் தொட்டு இன்றைய வரையில்.... உடற்பயிற்சி

படம்
  காலம்தோறும் உடற்பயிற்சி 1500 கி.மு மெக்சிகோவில் பெருகிய ஆல்மெக் மக்களின் குடியேற்றம் புதிய விளையாட்டை உருவாக்கியது. பெரிய ரப்பர் வளையத்திற்குள் வீரர்கள் தங்கள் இடுப்பு, கால்களை பயன்படுத்தி உள்ளே புகுந்து வெளியே வரவேண்டும்.  1400 கி.மு பரோகா கல்லறையில் மன்னர்கள் குத்துச்சண்டை, வில் போட்டி, ஓடுதல் ஆகியவற்றில் மக்களை ஊக்குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.  776 கி.மு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறத் தொடங்கியது. ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நாடு பிற நாடுகள் மீது போர்தொடுக்க உதவும் என நம்பினர்.  1316 இரு சுவர்களுக்கு நடுவில் கைப்பந்து விளையாடும் பழக்கம் பிரெஞ்சு நாட்டில் இருந்தது. இந்த விளையாட்டிற்கு ஜீ டி பாமே என்று பெயர்.  14-15ஆம் நூற்றாண்டு மத்தியகால ஐரோப்பாவில் கும்பலாக கால்பந்து விளையாடுவது வழக்கமாக இருந்தது. எந்த வரைமுறையும் இல்லாமல் கால்பந்தை உதைத்து விளையாடும் இந்த விளையாட்டு போட்டிகள் பலவும் வன்முறையில் முடிந்தன. எனவே. இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது.  1553 ஸ்பெயின் நாட்டு மருத்துவர் கிறிஸ்டோபல் மென்டெஸ் என்பவர், முதல் உடற்பயிற்சி நூலை எழுதி வெ...

நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி!

படம்
  தற்காப்புக்கலையைக் கற்கும்போது அடிப்படையான பயிற்சியாக குதிரைபோல நிற்கும் நிலையைக் குறிப்பிடுவார்கள். உடலை அடிப்படையாக பலப்படுத்தினால்தான் தற்காப்புக்கலைகளை உறுதியாக பயன்படுத்தமுடியும். மண்ணில் வேர்பிடித்தது போல ஒருவர் நின்றால் மட்டுமே போரில் வெல்ல முடியும். அந்த வகையில் சாலையில் நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி. இதற்குப் பிறகுதான் எடைப் பயிற்சிகள், கார்டியோ ஆகியவை இடம்பெறுகின்றன. எளிமையாக கூறவேண்டுமெனில் பிரமிடு போல உள்ள உடற்பயிற்சிகளின் கீழே உள்ள அடிப்படைப் பயிற்சி, நடைப்பயிற்சிதான்.  உட்கார்ந்துகொண்டே செய்யும் வேலையில் இடையிடையே பத்து நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது கூட மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது. பிற உடற்பயிற்சிகளைப் போல உடலை பெரிதாக கஷ்டப்படுத்தவேண்டியதில்லை. எனவே, நடைப்பயிற்சி என்பது செய்வதற்கு எளிதானது. இதை தினசரி பயிற்சியாக்கும்போது, ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.  அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு ஆகியவற்றின் பாதிப்பை நடைப்பயிற்சி பெருமளவு குறைக்கிறது. ஓட்டப்பயிற்சியைப் போலவே பயன்களை அளிக்கிறது. 80...

ஊழுறு தீங்கனி - புதிய இ-நூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்.

படம்
  ஊழுறு தீங்கனி, டாமினன்ட் / சப்மிஸிவ் உறவு, அதில் ஒருவர் எப்படி செயல்படுவது, கடைபிடிக்கவேண்டிய விதிகள், பயன்படுத்தும் பொருட்கள், வாழ்க்கை முறை பற்றிய அறியாத பல்வேறு தகவல்களை விளக்குகிறது. வெகுஜன மக்களுக்கு இந்த வாழ்க்கைமுறை புதிதாக இருக்கலாம். ஆனால், இப்படியான வாழ்க்கை முறையில் ஏராளமான மக்கள் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிறார்கள். இந்நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக டாமினன்ட் / சப்மிஸிவ் பற்றி தெளிவாக அறிந்துகொள்வதோடு, அந்த முறையில் வாழ விரும்பினால் கூட முதல் அடியை எடுத்துவைக்க முடியும். இதுபற்றிய மேற்கோள் நூல்களும், வலைத்தளங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலை வாசிக்க.... https://www.amazon.com/dp/B0CSJRKMPW

தன்னை, உலகத்தை மறந்து செயலைசெய்பவன் அனுபவிக்கும் பேரின்பம்!

படம்
  ஏ ஆர் இசையமைப்பதில் தன்னை மறப்பார். மணிரத்னம், கதைகளை படமாக்குவதில் தன்னை மறந்து வேலை செய்வார். இவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே நமக்கு பிடித்த ஏதோ ஒரு செயலில் உலகை மறந்து நம்மை மறந்து ஈடுபட்டிருப்போம்.  அப்படியான மனநிலையை ஃப்ளோ என உளவியலில் குறிப்பிடுகிறார்கள். இதை லயம், சீரான ஓட்டம் என புரிந்துகொள்ளலாம். இதை மிகாலாய் என்ற உளவியலாளர் உருவாக்கினார். தொண்ணூறுகளில் தனது கருத்தை தொகுத்து ஃப்ளோ - தி சைக்காலஜி ஆஃப் ஆப்டிமல் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நூலை எழுதினார்.  உளவியலாளர் மிகலாய், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், பல்வேறு வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை நேர்காணல் செய்தார். இதில் அவர்களது தொழில், பொழுதுபோக்கு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு அனுபவங்களை அறிந்தார். இதன்படி, ஒருவர் தொழில் அல்லது ஓய்வு நேர பொழுதுபோக்கிலோ தன்னை மறந்து ஈடுபாடு கொள்வது தெரிந்தது. அதாவது, தன்னை முழுக்க செய்யும் செயலில் கரைத்து திருப்தி காண்கிறார். பொதுவாக விளையாட்டில் வெல்வது மட்டுமல்ல பங்கேற்பதற்கும் கூட ஒருமித்த கவனம் தேவை. முழு கவனத்துடன் விளையாட்டை அனுபவித்து விளையாடுபவர்களுக்கு காலநேரமே தெரியாத...

காஸனோவா, ஒரு பெண் மீது கொள்ளும் காதல் வழியாக உறவுகளின் மதிப்பை அறிந்துகொள்ளும் கதை!

படம்
                கிரேக்க வீருடு நாகார்ஜூனா , நயன்தாரா பெண்கள் என்றாலே உடல் இன்பத்திற்கு மட்டும்தான் என நம்பும் ஒருவர் சூழல்களால் மனம்மாறி குடும்பத்தை நேசிப்பதோடு , காதலித்த பெண்ணை திருமணம் செய்வதுதான் கதை . வெளிநாட்டு தொழிலதிபர் நாகார்ஜூனா . அவரும் , உறவு முறையில் மாமாவும் , நெருங்கிய நண்பன் என இணைந்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள் . தனது செல்வாக்கு , அழகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறத்தாழ 99 பெண்களை படுக்கையில் வீழ்த்துகிறார் கிங் நாகார்ஜூனா . பெண்களை போகப்பொருளாக பார்க்கிறார் . நெருக்கமான உறவை அவர் விரும்புவதில்லை . இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் . இந்த நேரத்தில் அவரால் செக்சுக்காக பயன்படுத்தப்பட்ட பெண் ஒருத்தி , அவருடைய சிஎஸ்ஆர் திட்டம் ஒன்றை வன்மத்தோடு உருக்குலைக்கிறாள் . இதனால் , அந்த பணியை ஒப்படைத்த நிறுவனம் நாகார்ஜூனா மீது வழக்கு போட்டு வெல்கிறார்கள் . அதிக அளவு தொகையில் அபராதம் கட்ட வேண்டும் என்பதே பெரிய பிரச்னை . இந்த நேரத்தில் கிங்கிற்கு இந்தியாவில் பூர்விகமான தாத்தாவிடமிருந்து போன் வருக...

உடற்பயிற்சி சார்ந்த அக்கறை கூடியிருக்கிறது - ஜோ ரூட், கிரிக்கெட் வீரர்

படம்
  ஜோ ரூட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? நான் ஜிம்மில் அதிக நேரம் செலவழித்தது கிடையாது. வேகம், ஆற்றல் என இரண்டு விஷயங்களுக்காக அங்கு நாற்பது நிமிடங்களை செலவழிப்பேன். அவ்வளவுதான். அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவழிப்பது எனக்கு பிடிக்காது. இளம் வயதில் முதுகில் சில பிரச்னைகள் இருந்ததால், எடைகளை தூக்குவதில் சில தடுமாற்றங்கள் இருந்தன. குறைவான எடைகளை தூக்கி மெதுவாகவே எனது உடலை மெல்ல மேம்படுத்த தொடங்கினேன். நான் கடைபிடித்த நுட்பங்கள் போதுமான நம்பிக்கை தந்தது என்று கூற முடியாது. போதுமான அளவுக்கு ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொண்டு பயிற்சிகளை செய்தீர்களா? முதலில் ஊட்டச்சத்து பற்றியெல்லாம் நான் அக்கறைப்ப்படவில்லை. கிரிக்கெட் என்பது திறன் சார்ந்த விளையாட்டு. அங்கு அதிக ரன்கள் அடிக்க வேண்டும். விக்கெட்டுகளை எடுக்கவேண்டும். அவ்வளவுதான். இப்படித்தான் தொடர்களில் அதிக ரன்களை எடுத்தேன். ஆனால் இடையில் திடீரென ரன்களை அடிக்க முடியாமல் போய்விடும். பிறகுதான் பயிற்சியோடு ஊட்டச்சத்துகள் பற்றியும் அக்கறை செலுத்த தொடங்கினேன். அந்த வகையில் எங்கள் அணியில் உள்ள ஊட்ட...

நாய் எழுப்பும் ஒலிக்கு என்ன அர்த்தம்?

படம்
  நாய் எழுப்பும் குரைப்பொலி பற்றிய விளக்கங்கள் இதோ….. தொந்தரவு செய்யாதே வீட்டுக்கு முன் செல்பவர், காலிங்பெல்லை அழுத்துபவர், சைக்கிளில் செல்பவர் என யார் சென்றாலும் ஒலி, ஒளி தென்பட்டாலும் நாய் உடனே குரைக்கத் தொடங்கும். குரைக்கும் தொனி, எதிராளி வீட்டின் கதவுக்கு அண்மையில் இருக்கிறாரா, தூரத்தில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடும். கதவை ஒருவர் தட்டி திறக்க முயல்கிறார் என்றால் நாயின் குரைப்பொலி கடுமையாக மாறும். உரிமையாளரை தீர்க்கமாக எச்சரிக்கும் ஒலி இதுவே. வேட்டை மன்னன் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார் அல்லது நாயின் சக நாயினங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்து ஒலி எழுப்புகின்றன என்றால் நாய் , இவ்வகையிலான ஒலியை எழுப்புகிறது. குரைப்புக்கும்,, ஊளைக்கும் இடையில் அமைந்த ஒலி. முனகல் ஒலி அப்பப்பா என முனகிக்கொண்டே வயதானவர்கள் கீழே உட்காருகிறார்கள் அல்லவா? அதுபோலவே அமைந்த முனகல் ஒலி. வயதான நாய், ஏதாவது இடத்திற்கு சென்றுவிட்டு வந்து சோபாவில் ஏறி உட்காரும்போது இப்படி முனகும். நீங்கள் நாய் தள்ளிவிட்ட பந்தை எடுக்காமல் கணினியைப் பார்க்கும்போது அல்லது அதற்கு போதிய கவனம் கொடுக்காதபோது சற்று ...