உடற்பயிற்சி சார்ந்த அக்கறை கூடியிருக்கிறது - ஜோ ரூட், கிரிக்கெட் வீரர்
ஜோ ரூட்
இங்கிலாந்து
கிரிக்கெட் வீரர்
ஜிம்மில்
நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
நான் ஜிம்மில்
அதிக நேரம் செலவழித்தது கிடையாது. வேகம், ஆற்றல் என இரண்டு விஷயங்களுக்காக அங்கு நாற்பது
நிமிடங்களை செலவழிப்பேன். அவ்வளவுதான். அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவழிப்பது எனக்கு
பிடிக்காது.
இளம் வயதில்
முதுகில் சில பிரச்னைகள் இருந்ததால், எடைகளை தூக்குவதில் சில தடுமாற்றங்கள் இருந்தன.
குறைவான எடைகளை தூக்கி மெதுவாகவே எனது உடலை மெல்ல மேம்படுத்த தொடங்கினேன். நான் கடைபிடித்த
நுட்பங்கள் போதுமான நம்பிக்கை தந்தது என்று கூற முடியாது.
போதுமான அளவுக்கு
ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொண்டு பயிற்சிகளை செய்தீர்களா?
முதலில் ஊட்டச்சத்து
பற்றியெல்லாம் நான் அக்கறைப்ப்படவில்லை. கிரிக்கெட் என்பது திறன் சார்ந்த விளையாட்டு.
அங்கு அதிக ரன்கள் அடிக்க வேண்டும். விக்கெட்டுகளை எடுக்கவேண்டும். அவ்வளவுதான். இப்படித்தான்
தொடர்களில் அதிக ரன்களை எடுத்தேன். ஆனால் இடையில் திடீரென ரன்களை அடிக்க முடியாமல்
போய்விடும்.
பிறகுதான்
பயிற்சியோடு ஊட்டச்சத்துகள் பற்றியும் அக்கறை செலுத்த தொடங்கினேன். அந்த வகையில் எங்கள்
அணியில் உள்ள ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகளை பின்பற்றத் தொடங்கினேன். இப்போது எங்கள்
அணி எங்கு சென்றாலும் செஃப்களை கூட்டிக்கொண்டு செல்கிறோம். உள்ளூர் உணவுகளை சாப்பிட்டாலும்
நமக்கென தனித்த உணவு தேவை. குறிப்பாக வெயில் காலங்களில் உங்கள் உடலை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும்.
உடல்ரீதியான
மாற்றம் உங்கள் தொழில்வாழ்க்கையை மாற்றியதா?
பேட்ஸ்மேனாக
விளையாடியபோது, திறன்தான் விளையாட்டில் முக்கியம் என நினைத்தேன். என்னுடைய திறமை வெளிப்படும்வகையில்
விளையாடி வந்தேன். ஆனால் மெல்ல விளையாட்டு திட்டங்கள் கடுமையாக மாறின. எனவே, அதற்கேற்ப
உடலை கட்டமைத்துக்கொள்ள தொடங்கினேன்.
நீங்கள் நினைத்தது
போல திட்டங்கள் செயல்படாதபோது என்ன செய்வீர்கள்?
வாழ்க்கையில்
அனைத்து இடங்களும் இனிமையானவையாக அமையாது. இந்த சூழ்நிலையில் ஒருவர் அதிர்ச்சி அடையவில்லை
அல்லது நூறு சதவீதம் அமைதியாக அல்லது கட்டுப்பாடாக இருக்கிறார் என்று கூற முடியாது.
நீங்கள் கடுமையாக பயிற்சி செய்வதோடு, உங்கள் விளையாட்டு மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும்போதுதான் அணி நல்ல நிலைமையில் இருக்கும்.
ஆரோக்கியம்
சார்ந்த சமீபத்திய அக்கறை எப்படி இருக்கிறது?
கோவிட் பாதிப்பு
வந்தபிறகு, நான் உடல் சார்ந்த அக்கறையை அதிகம் கொண்டிருக்கிறேன். உடலுக்கு அதிக பயிற்சிகள்
செய்து அதை பராமரித்து வருகிறேன். விளையாட்டைப் பொறுத்தவரை உடற்பயிற்சி என்பது முக்கியமான
அங்கம். விளையாட்டுப் போட்டிகளின்போது வாரத்திற்கு மூன்று முறை எடை பயிற்சிகள், ஓடுதல்
பயிற்சிகளை செய்வேன்.
மென்ஸ் ஃபிட்னெஸ்
இதழ்
சார்லஸ் டைர்வொயிட்
கருத்துகள்
கருத்துரையிடுக