ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே கனவு - டொம்னிக் லோபாலு

 

டொம்னிக் லோபாலு
டொம்னிக் லோபாலு

தடகள வீ ரர்

தெற்கு சூடானில் வாழ்ந்த டொம்னிக், அங்கு நடந்த போரால் வடக்கு கென்யாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்தார். பிறகு அங்கிருந்து தப்பியவர், நைரோபிக்கு தெருவுக்கு வந்தார். அகதிகளின் விளையாட்டுக்குழுவை  அடையாளம் கண்டார். 2017ஆம் ஆண்டு டொம்னிக், ஒலிம்பியன் என்ற அகதி விளையாட்டுக்குழுவில் சேர்ந்தார். பிறகு, அந்த குழுவினர் ஜெனீவாவிற்கு சென்றபோது, அங்கே இருந்து விலகித் தப்பியவர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியுமா என முயன்றார். 24 வயதாகும் டொம்னிக் தனது நாட்டுக்காக விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க முயல்கிறார். அவரிடம் பேசினோம்.

ஏமாற்றம் அடையும்போதும எப்படி நேர்மறையான எண்ணங்களை மனநிலையை தக்க வைத்துக்கொள்கிறீர்கள்?

பின்னடைவுகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதுமட்டுமே முடிவு கிடையாது. நான் எனது கனவுகளைப் பின்தொடர்ந்து வருகிறேன்.

விளையாட்டு வீரராக உங்கள் கனவு என்ன?

ஒலிம்பிக் அல்லது உலக போட்டிகள் ஏதாவது ஒன்றில் கலந்துகொண்டு பதக்கம் வெல்வதுதான். விரைவில் ஏதாவது போட்டிகளில் பங்கேற்பேன் என நினைக்கிறேன். பதக்கம் வெல்வதை எனது கனவாக வைத்திருக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் இருந்து அடையாளம் கண்டு கொண்ட அனுபவங்களை பிறருக்கு கூற விரும்புகிறீர்களா?

எல்லாமே சாத்தியம்தான் என்று கூற விரும்புகிறேன்.ஒருவரது விதி அவரது கையில்தான் இருக்கிறது. நீங்கள் உதவியைத் தேடாதபோது யாரும் வந்து உங்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நீங்கள் தயாராக இல்லாதபோது யாரும் எதுவும் செய்துவிட முடியாது. உங்கள் கனவுகளை விட்டுக்கொடுக்காமல் போராடி இலக்குகளை எட்டுங்கள்.

ஓட்டம் என்பது உங்களுக்கு என்னவாக இருக்கிறது?

ஓடும்போது நான் சுதந்திரமாக மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னை நான் வெளிப்படுத்திக்கொள்ளும் வழி இதுவே.  பியானோ வாசிப்பது, நடனம் ஆடுவது, டென்னிஸ் விளையாடுவது என பிறருக்கு சில வேலைகள் இருக்கும். எனக்கு அதுவே ஓடுவதாக இருக்கிறது. இந்த வேலை, பிடித்திருக்கிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்று ஓடுவது எனது கனவு.

உங்கள் பயிற்சியாளர் மார்க்கஸ் ஹேக்மன் பற்றிக் கூறுங்கள்.

அவர் இரு பிள்ளைகளுக்கு தந்தை. பள்ளி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அவர் இல்லையென்றால் டொம்னிக் எனும் நான் தடகள வீரனாக இருக்க முடியாது. அவர் என்னை தன்னுடைய மூன்றாவது பிள்ளை என்று கூறுவார். நல்ல சூழல் அமையாதபோது, நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. மார்க்கஸ் எனக்கு அப்படித்தான் அமைந்தார்.

மென்ஸ் ஃபிட்னஸ்

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்